நூறு கேள்விகள். ஒருவரே எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம். முதல் நூறு என்ற தலைப்பில் தொகுத்து வெளியிடலாம் என்று ஒரு நண்பர் சொன்னார். பெயரை வெளியிட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். ஃபேஸ்புக் பின்னூட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளை எடுத்துக் கொள்ள மாட்டேன். மின்னஞ்சல் அனுப்பலாம். அல்லது வாட்ஸப். எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் அனுப்பலாம். டார்ச்சர் கோவிந்தன் டார்ச்சராக ஒரு கேள்வி கேட்டு ஆரம்பித்து வைப்பார் என நினைக்கிறேன். வரவேற்கிறேன். நூறு கேள்விகளும் என் பதில்களும் புத்தகமாக வரும். ஒவ்வொரு கேள்வியும் பதிலும் என் தளத்தில் வெளியாகும். எனக்குப் பிடித்த பத்து கேள்விகளைக் கேட்கும் பத்து நண்பர்களை எங்கள் வன மாளிகையிலோ கோவாவிலோ சந்திப்பேன். ஒரு முழு நாள் அவர்கள் என்னோடு அளவளாவலாம். யார் வேண்டுமானாலும் கேள்விகளை அனுப்பலாம்.
தமிழில் எழுத முடியாதவர்கள் ஆங்கிலத்தில் கேட்கலாம். நான் தமிழில்தான் பதில் சொல்வேன். charu.nivedita.india@gmail.com