இதுவரை சொல்லாத ரகசியம்…

ஸீரோ டிகிரி ஆங்கில மொழிபெயர்ப்பை அமெரிக்க லெஸ்பியன் மற்றும் ட்ரான்ஸ்கிரஸிவி எழுத்தாளர் Kathy Ackerக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறேன். நீங்கள் எங்கெல்லாம் கேத்தியின் பெயரைத் தொட்டாலும் என் பெயரும் கூடவே வரும். கேத்தியின் வாழ்க்கை மிகவும் புரட்சிகரமானது. கலகத்தன்மை கொண்டது. அவள் அளவுக்குக் கலகம் செய்த பெண் எழுத்தாளர்கள் கம்மி. ஆனால் அவள் எழுத்து மிகவும் சலிப்பூட்டக் கூடியதாக இருக்கும். எனவே கேத்தி ஆக்கர் என்ற பெண் ஆளுமை, அவளது கலகம் எனக்குப் பிடிக்கும் என்றாலும் அவள் எழுத்து … Read more

சித்த மருத்துவம் – சென்னையில் ஒரு விழா – அடியேனின் உரை

சித்த மருத்துவம் பற்றி நீண்ட காலமாக எழுதி வருகிறேன். எழுதுவதோடு மட்டும் அல்லாமல் என் உடலை வைத்தே பல பரிசோதனைகளையும் செய்திருக்கிறேன். அது குறித்து என் நாவல் எக்ஸைலில் விரிவாக எழுதியிருக்கிறேன். இப்போது என் நண்பரும் சித்த மருத்துவருமான டி. பாஸ்கரன் எழுதிய சித்தாவரம் என்ற நூல் 17.11.2024 அன்று வெளிவர இருக்கிறது. அதன் வெளியீட்டு விழா அழைப்பிதழை இத்துடன் இணைத்திருக்கிறேன். என் நண்பர்கள் மற்றும் வாசகர்கள் அனைவரும் விழாவுக்கு வரும்படி அழைக்கிறேன். விழாவில் சித்த மருத்துவம் … Read more

ஆஜ் கி ராத்

என் ஜென்ரல் நாலட்ஜை வளர்த்துக்கொள்வதற்காக அவ்வப்போது ரீல்ஸ் பார்ப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக நடனம் மற்றும் விதவிதமான மீன் சமையல் முறைகளில்தான் என் ஜென்ரல் நாலட்ஜ் நேரம் போகும். அதில் இன்னும் என்னை enlighten பண்ணுவதற்காக மேலும் சில ரீல்ஸை அனுப்பி ஆட்கொள்வார் நண்பர் பிரபு கங்காதரன். அவரும் என்னைப் போல் ஜென்ரல் நாலட்ஜுக்காக ரீல்ஸில் நேரம் செலவழிப்பவர் என்பது என் யூகம். இன்று அதில் ஒரு வித்தியாசமான நடனக்காரனைப் பார்த்தேன். ஏதோ சினிமா நடிகர் போல் … Read more

மொழிபெயர்ப்பு

ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்படும் நூல்களை அதிகம் படிக்காதீர்கள். ஆங்கிலத்தில் சரளமாக வாசிக்க முடியாவிட்டாலும் தத்தித் தத்தியாவது ஆங்கிலத்திலேயே படித்து விடுவது நலம். சமீபத்தில் தெ வெஜிடேரியன் என்ற நாவலை தமிழில் கைமா பண்ணி வைத்தது பற்றி ஃபேஸ்புக்கில் ஒரு நண்பர் எழுதியிருந்தார். what the hell என்ற ஆங்கிலப் பதத்தை என்ன நரகம் இது என்று மொழிபெயர்த்திருக்கிறார் திருவாளர் முழிபெயர்ப்பாளர். இதை விட பெரிய காமெடியையெல்லாம் நான் எடுத்துப் போட்டு தொங்கவிட்டிருக்கிறேன். ஆனாலும் முழிபெயர்ப்பாளர்கள் தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள். … Read more

பெங்களூரு இலக்கிய விழா

பெங்களூரில் ஆட்டா கலாட்டா என்ற பெயரில் ஒரு புத்தகக் கடை உள்ளது. அது ஆண்டு தோறும் இந்திய அளவில் எழுதப்படும் நூல்களுக்குப் பல பிரிவுகளில் விருது வழங்குகிறது. அதில்தான் 2024க்கான மொழிபெயர்ப்பு நூல்களின் நெடும்பட்டியலில் நான் எழுதிய ஔரங்ஸேப் நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு (Conversations with Aurangzeb: A Novel) இடம் பெற்றிருக்கிறது. விருது வழங்குவதோடு அல்லாமல் ஆட்டா கலாட்டா பெங்களூரில் ஆண்டு தோறும் ஒரு இலக்கிய விழாவையும் நடத்துகிறது. இந்த ஆண்டு விழாவுக்கு நான் அழைக்கப்பட்டிருக்கிறேன். … Read more

அப்பா: உலகச் சிறுகதைகள்: ரிஷான் ஷெரீப்

என் நண்பர் ரிஷான் ஷெரீஃபுக்கு நேற்று (3.11.2024) பிறந்த நாள். புகைப்படத்தில் பார்ப்பதற்கு இருபத்தோரு வயது இளைஞராகத் தெரிகிறார். நேரில் சந்தித்தது இல்லை. ரிஷான் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். தி.ஜானகிராமனுக்குப் பிறகு என்னை மயக்கி வசியப்படுத்திய மொழி ரிஷானுடையதுதான். எங்கிருந்து இந்த மொழிநடையைக் கற்றார் என்பதுதான் பெரும் ஆச்சரியமாக இருக்கிறது. சி. மோகனின் மொழிநடையும் வசியம் செய்வது போல் இருக்கும். ஆனால் மோகன் என் வயதுக்காரர். ரிஷானுக்கோ என் பேரன் வயது. அதனால்தான் ஆச்சரியம். ஃபேஸ்புக்கில் நேற்று … Read more