ரமண மஹரிஷி, தலப்பாக்கட்டி பிரியாணி, ‘ஆன்வி’, எதார்த்த பாணி எழுத்து, ஓப்பன் பண்ணா… (Revised)

ஐயா, நான் மிகவும் வியப்பது பிரமிப்பு அடைவது திருவாளர்கள் ———————— போன்ற எழுத்தாளர்களை.  இவர்களது நாவல்கள் கி்.ரா. அவர்கள் போல் வட்டார வழக்கு நடை.  போலித்தனம் இல்லை. அடித்தட்டு மக்களை யதார்த்தமாக சித்தரிக்கிறது. இவர்களது நாவல்கள் இந்தி, மலையாளம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.  மற்றும் கல்லூரிப் பாடத்திட்டத்திலும் வைக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட இலக்கிய சாதனையாளர்கள் தங்களின் பழுப்பு நிறப் பக்கங்கள் போன்ற நூல்களில் பதிவு செய்யப்பட வேண்டும். பாலா. டியர் பாலா சார், தாங்கள் என்னை விட … Read more

அய்யர் ப்ளாக்

யாவரும் கேளிர் என்று நினைக்கும் எனக்கு ஜாதிப் பற்றோ ஜாதி வெறுப்போ எப்படி இருக்க முடியும்? அதனால் எனக்கு ஜாதி என்பது ஒரு பெயர் மாதிரிதான். என்னால் ஒருத்தரை செட்டியார் என்றோ நாயுடு என்றோ அய்யர் என்றோ கூப்பிட முடியும். அது ஒரு பெயர். இன்றைய தினம் நகர வாழ்வில் அதுதான் நடந்துள்ளது. எனக்கு நகரம்தான் தெரியும். கிராமத்தில் இப்படி இல்லை என்றும் தெரியும். இந்த நண்பரை அய்யர் என்றே அழைத்து வருகிறேன். பிரஸன்ன வெங்கடேசன் என்று … Read more

இரண்டு குறிப்புகள்

என் ஆக்ஸிஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி அட்டைகள் கடந்த இருபது மாதங்களாக ஆன்லைன் பயன்பாட்டுக்கு உதவுவதில்லை. வங்கி மறுத்து விடுவதாக அறிவிப்பு வருகிறது. போனில் கேட்டால் நேரில் வா என்கிறார்கள். ஐசிஐசிஐ வீட்டுக்கு எதிரே உள்ளது. இருபது மாதங்களாக நேரில் செல்ல நேரம் இல்லை. ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஆக்ஸிஸ் வங்கி அதிகாரிக்கு போன் செய்தால் இதோ அதோ என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். பொதுவாக ஸ்ரீராம் மற்றும் அன்னபூர்ணி மூலம் சாமான்களைத் தருவித்துக் கொண்டு பெரிய … Read more

அ. மார்க்ஸுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

சமீபத்தில் ஒரு நண்பர் அ. மார்க்ஸை எங்கே பார்க்க முடியும் என்று கேட்டார். மனிதன் எங்கெல்லாம் துயருறுகின்றானோ, எங்கெல்லாம் ஒடுக்கப்படுகின்றானோ அங்கெல்லாம் அ. மார்க்ஸைப் பார்க்க முடியும் என்றேன். அதைத்தான் இப்போதும் சொல்கிறேன். கடந்த வாரம் ஒரு என்கௌண்டர் மரணம். அடுத்த நாள் அந்த இடத்தில் அ. மார்க்ஸ் நிற்கிறார். எனக்கு அ. மார்க்ஸை நினைக்கும் போதெல்லாம் Saint Paul of the Cross ஞாபகம் வருவார். துயரப்படுவோரையெல்லாம் தேடித் தேடிப் பணி செய்த ஒரு மகான் … Read more

லேடி காகா…

எப்படி எழுதுவீர்கள், எழுதுவதற்கு எப்படிப்பட்ட சூழல் தேவை என்று பலமுறை என்னிடம் நண்பர்களும் வாசகர்களும் கேட்பதுண்டு. அதற்கு உண்மையிலேயே எனக்கு பதில் தெரியாது. ஆனால் ஒரு நாளில் எழுதத் தொடங்குவதற்கு முன் இப்படி ஏதாவது ஒரு பாடலைக் கேட்டு விட்டுத்தான் தொடங்குவேன். இம்மாதிரி இசைதான் எனக்குப் புத்துணர்ச்சி ஊட்டுகிறது. இன்று ஔரங்கசீப்பின் மூன்றாம் பாகத்தை அனுப்ப இருக்கிறேன். இப்போது நடப்பில் இருப்பது மூன்றாம் பாகம். இன்னும் ஒரு பாகம் இருக்கும். நாவலில் அப்படி நான் பாகம் பாகமாகப் … Read more

கோக் அடிக்‌ஷன்

டியர் சாரு, சில வருடங்களுக்கு முன்பு ஒரு பழைய பாக்ஸ்தானி கஜ’லின், கோக் ஸ்டியோ கவர் ஸாங் ஒன்றைப் பகிர்ந்திருந்தீர்கள். அப்போது அது எனக்கு வாரக்கணக்கில் ரிப்பீட் மோடில் ஓடியது. அதே காலகட்டத்தில்தான் ஆத்திஃப் அஸ்லம், ராஹத் ஃபதே அலிகான் போன்றவர்களை தொடர் ப்ராட்டஸ்ட்கள் மூலம் “முதிர் கண்ண” பாலிவுட் குரல்கதறர்கள் (gaலா phaடுக்கள்) துரத்தி அடித்தனர். எனக்குச் சரியாக நியாபகமில்லை. நீங்கள் கண்டிப்பாகப் பகிர்ந்திருப்பீர்கள். ஆனாலும் ஒளரங்கசீப் எனும் சூப்பர் டூப்பர் “வெப் சீரீஸ்” ஓடிக்கொண்டிருக்கும் … Read more