முகமூடிகளின் பள்ளத்தாக்கு

தருண் தேஜ்பால் எழுதிய Valley of Masks என்ற அதியற்புதமான நாவல் முகமூடிகளின் பள்ளத்தாக்கு என்ற தலைப்பில் தமிழ் மொழிபெயர்ப்பில் அநேகமாக இன்னும் ஒரு மாத காலத்தில் உங்கள் கைகளில் கிடைக்கும். அதன் இறுதி கட்ட fine tuning வேலையில் இருக்கிறேன். 2020-ஆம் ஆண்டின் பெரும்பகுதி இந்த மொழிபெயர்ப்பு வேலைகளிலேயே போய் விட்டது. சந்தர்ப்பவசமாகவே இந்தப் பணியில் நான் கலந்து கொள்ள நேர்ந்தது. ஆனால் இறங்கிய பிறகு நேர்த்தியாக இருக்க வேண்டும் என்பது என் மதம். அதனால் … Read more

கலையும் கடவுளும்…

ஒரு பெரிய விவாதத்துக்கு உரிய விஷயத்தை என் நண்பர் கேஷவ் தட்டி விட்டார் முகநூலில். கிருஷ்ணாவின் பழைய கச்சேரி ஒன்றைப் பகிர்ந்திருந்தேன். அதில் அவர் ஸ்ரீசூர்ணம் இட்டுக் கொண்டிருக்கிறார். அவர் இப்போது ஒரு சூப்பர் டூப்பர் இடதுசாரி என்றும், ஆனாலும் அவர் இசை என் நெஞ்சைத் தொடுகிறது என்றும் எழுதியிருந்தார் கேஷவ். தொடட்டும். அது எனக்குப் பிரச்சினை இல்லை. சங்கராபரணம் என்ற படத்தில் வரும் பாடல்களைக் கேட்டு வடக்கே ஓடியவன் நான், இப்போதுதான் தெற்கே திரும்பியிருக்கிறேன். ஆள் … Read more

D. அண்ணாஸ்வாமி பாகவதர்

எம்பார் விஜயராகவாச்சாரியார், பாலகிருஷ்ண சாஸ்திரிகள் ஆகிய இருவருக்கும் மூத்தவர் திருவையாறு அண்ணாஸ்வாமி பாகவதர். இவரது ராமாயண காலக்ஷேபம் பிரசித்தி பெற்றது. இவர் 1946-ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சென்னை மியூசிக் அகாதமியில் தியாகராஜரின் வாழ்க்கை பற்றி ஒரு காலக்ஷேபம் பண்ணினார். அது நிச்சயம் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் எனக்கு இணையத்தில் கிடைக்கவில்லை. அவரது ராமாயணம் கிடைக்கிறது. தியாகராஜர் கிடைக்கவில்லை. யாருக்காவது தெரிந்தால் விவரம் தெரிவியுங்கள். charu.nivedita.india@gmail.com

புரட்சித் துறவி

நான் என்னுடைய பதின்பருவத்தில் தீவிர ஆன்மீகத் தேட்டம் உடையவனாக இருந்தேன்.  ஆன்மீகப் பத்திரிகைகளில் நிவேதிதா என்ற பெயரில் எழுதினேன்.  விவேகானந்தரின் ஞான தீபம் தொகுப்புகளை வாங்கிப் படித்து அவரையே என் மானசீக குருவாக வரித்துக் கொண்டேன்.  தஞ்சாவூர் ராஜா சரபோஜி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது (1974-75) சமண சமயம் தொடர்பான என் கட்டுரை ஒன்று தமிழ்நாடு சமண சமயத்தின் குருமார்களால் சிலாகிக்கப்பட்டு பெரியதொரு தொகை பரிசாக வந்தது.  வாரம் ஒருமுறை மௌன விரதம் எல்லாம் இருப்பேன்.  இப்போது … Read more

உலகின் மகத்தான தம்புராக் கச்சேரி : சிறுகதை

(இச்சிறுகதையில் வரும் எல்லா பெயர்களுமே கற்பனை. சம்பவங்களும் கற்பனையே. யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல. அப்படி similarity இருந்தால் அது தற்செயலானதே!!!) ஊர் பட்ட வேலை கிடக்கிறது.  நாவல் முடியும் வரை என்னுடைய அன்றாட ராணுவ ஒழுங்கு கெட்டு விடும் போலிருக்கிறது. மிகச் சரியாக பத்து மணிக்குத் தூங்கப் போனால் நான் எழுந்து கொள்ளும் போது கடிகாரம் சரியாக ஓடாவிட்டால் நாலு என்று மாற்றி வைத்துக் கொள்ளலாம்.  எனக்கே ஆச்சரியமாகத்தான் இருக்கிறது, அது எப்படி இந்த உடல் … Read more