அமெரிக்கப் பயணம் – அக்டோபர் – சில முன்குறிப்புகள்

வரும் அக்டோபரில் அமெரிக்கா (யு.எஸ்.) வரலாம் என்று இருக்கிறேன். வீஸா கிடைத்தால். இந்த முறை வீஸா கிடைக்க எஸ்.ஓ.டி.சி. மூலம் பயண ஏற்பாட்டைச் செய்து கொள்ளப் போகிறேன்.  ஐந்து நாள் எஸ்.ஓ.டி.சி. மூலம் ஊர் சுற்றல்.  ரெண்டு வாரம் நண்பர்களின் மூலம். முதல் வருகை அட்லாண்டா நகரம். ஏனென்றால், அங்கே வசிக்கும் ஒரு நண்பர்தான் பயண டிக்கட்டுக்கான பொறுப்பை ஏற்கிறார்.  அமெரிக்கா வாருங்கள் வாருங்கள் என்று சுமார் 20 நண்பர்கள் கடந்த பத்து ஆண்டுகளாகத் தீவிரமாக வற்புறுத்தி … Read more

சந்த்தியாகோவில் அடியேன் (8)

உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அவ்வப்போது வாசகர்களிடம் பணம் கேட்பதுதான் சங்கடமாக இருக்கிறது” என்றார் நண்பர் ஒருவர். இன்னொரு மிக நெருங்கிய நண்பர் இதே காரணத்தினால் என் இணைய தளத்தையே படிப்பதில்லை. என் மீது கொண்ட அதீத அன்பினால் நான் அப்படிப் பணம் கேட்பது அவருக்கு சங்கடமாக இருக்கிறது. நண்பர்களே விவேகானந்தரும் இன்னும் பல ஆன்மீக குருநாதர்களும் தங்கள் நிறுவனங்களுக்காக அன்பர்களிடம் பணம் கேட்கவில்லையா? தாகூர் ஒரு கோடீஸ்வரராக இருந்தாலும் தன் கல்வி நிறுவனத்துக்காக லட்சம் … Read more

அடியேனின் சீலே பயணம் பற்றி அராத்து

சாரு நிவேதிதா – சீலே இந்நேரம் கடைசி நேர பரபரப்பில் இருப்பார்.நாளை அதிகாலை 3.30க்கு விமானம். அநேகமாக கடந்த 10 ஆண்டுகளாக சாரு சீலே போக வேண்டும் என்ற தன் ஏக்கத்தை சொல்லிக்கொண்டேயிருந்தார். விக்டர் ஹாரா கையை ஒரு ராணுவ வீரர் வெட்டிய பிறகும் அவர் கிதார் வாசித்துக்கொண்டு இருந்த கதையை இதுவரை என்னிடம் மட்டுமே 100 முறைக்கு மேல் சொல்லி இருப்பார். ஒவ்வொரு முறையும் அதே எனர்ஜி. இந்த கதையை அவர் சொல்லும்போது மட்டும், ஏற்கனவே … Read more

ராஸ லீலா கலெக்டிபிள்

நான் ஊருக்குப் போவதால் ராஸ லீலா கலெக்டிபிள் வேலை இன்னும் 25 நாட்கள் தள்ளிப் போகிறது. பணம் அனுப்ப விருப்பம் உள்ளவர்கள் ஜூலை 20 தேதிக்குள் பணம் அனுப்பி, புகைப்படமும் அனுப்பி இத்திட்டத்தில் இணைந்து கொள்ளலாம். அது பற்றிய விபரம்: ராஸ லீலா கலெக்டிபிள் பற்றி முன்பு எழுதிய குறிப்பை இங்கே மீள்பதிவு செய்கிறேன். ஏனென்றால், பல நண்பர்கள் இது பற்றி எதுவும் தெரியாது என்றே சொன்னார்கள். சில நெருங்கிய நண்பர்களிடம் நானே தான் ஃபோன் செய்து … Read more

ராஸ லீலா

என் நாவல்களிலேயே பலருக்கும் பிடித்த நாவலான ராஸ லீலாவின் முன்பதிவுத் திட்டம் தொடங்கியிருக்கிறது. இதற்கும் ராஸ லீலா கலெக்டிபிளுக்கும் சம்பந்தம் இல்லை. கலெக்டிபிள் ஒவ்வொருவருக்குமான பிரத்தியேகமான பிரதி. அதை நான் ஊரிலிருந்து திரும்பிய பிறகுதான் முடித்துக் கொடுக்க வேண்டும். பாதி பேருக்கு டெடிகேஷன் எழுதி விட்டேன். மீதி பேருக்கு எழுதி, தட்டச்சு செய்து வந்ததும் பிழைதிருத்தம் செய்தால் வேலை முடிந்தது. இப்போது எழுதுவது ராஸ லீலாவின் மறுபிரசுரம். இதையும் நான் செவ்வனே எடிட் செய்து பிழைதிருத்தம் செய்திருக்கிறேன். … Read more

பயண ஏற்பாடுகள்… (பயணக் குறிப்புகள் – 5)

தலைக்கு மேல் வேலை.  இப்போதுதான் வங்கிக்குப் போய் பேங்க் ஸ்டேட்மெண்ட் வாங்கி வந்தேன்.  பொலிவியாவில் On arrival வீசா என்பதால் அங்கே கேட்பார்கள்.  அதில் ஒரு ‘இக்கு’ இருக்கிறது.  ஜூன் மாதத்துக்கான ஸ்டேட்மெண்ட்டும் சேர்ந்தால் வீசா மறுக்கப்பட்டு விடலாம்.  பயணத்துக்கே ஏழெட்டு லகரத்தை செலவழித்து விட்டதால் அப்புறம் சேமிப்பில் என்ன இருக்கும்?  வெறும் பூஜ்யங்களைக் காண்பிக்க முடியாது.  அதனால் பயண முகவருக்கு ஏழெட்டு லகரங்களை அனுப்புவதற்கு முன்பாக நம்மிடம் இருந்த பேலன்ஸை வைத்து ஸ்டேட்மெண்ட் எடுக்க வேண்டும்.  … Read more