தீபாவளி

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே நான் எந்தப் பண்டிகையும் கொண்டாடுவதில்லை.  ஏனோ சிறு வயதிலிருந்தே அதில் நாட்டமில்லை.  ஆனால் பட்சணங்கள் தின்னாமல் இருக்க முடியுமா?  இந்தத் தீபாவளிக்கு சுஸ்வாத் என்ற கடையில் பட்சணங்கள் வாங்கினேன்.   கடையை அறிமுகப்படுத்திய ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவனுக்கு நன்றி.  சமையல் கலை வல்லுனர் பட்டப்பா பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.  அக்கார அடிசில் அற்புதமாகச் செய்வார்.  லாயிட்ஸ் சாலையில் உள்ள ஹேமமாலினி கல்யாண மண்டபத்தில் அவர் தீபாவளி பட்சணங்கள் செய்து விற்கிறார் என்று கேள்விப்பட்டேன்.  நம்பி … Read more

ஒரு சந்தேகம்…

பூலோகத்தில் சொர்க்கத்தைப் பார்க்க வேண்டுமானால் தாய்லாந்து செல்லுங்கள்.  உடனே பாங்காக், பட்டாயா என்று தப்பு தப்பாக நினைக்காதீர்கள்.  நான் சொல்வது தென் தாய்லாந்தில் உள்ள யாவ் நாய் என்ற இடம்.  அது ஒரு தீவு.  அந்தத் தீவைச் சுற்றிலும் குட்டி குட்டியாக ஆள் இல்லாத பல தீவுகள் உள்ளன.  ஹாலிவுட் சினிமாக்களில் வரும்.  அப்படி ஒரு தீவுக்கு ஒரு படகுக்காரப் பெண்ணின் உதவியுடன் நானும் அராத்துவும் கருப்பசாமியும் போனோம்.  கடலில் நின்றால் உடம்பெல்லாம் தெரிகிறது.  உள்ளே உள்ள … Read more

அடியேனின் கட்டுரைகள்

அவ்வப்போது நான் எழுதிய கட்டுரைகள் வேறு பத்திரிகைகளில் வெளிவரும் போது அதற்கு சாரு ஆன்லைனில் இணைப்பு தருகிறேன் அல்லவா? அப்போது அந்தக் கட்டுரைகள் பற்றி ஒன்றிரண்டு வரிகள் எழுதினால் 2000 பேர் அந்த லிங்கில் போய்த் தேடிப் படிக்கிறார்கள்.  ஆனால் நான் அந்தக் கட்டுரை பற்றி எதுவுமே எழுதாமல் வெறுமனே லிங்கை மட்டும் கொடுத்தால் 200 பேர் தான் படிக்கிறார்கள்.  என்ன கொடுமை இது!  இதுவரை நான் விகடனில் எழுதிய மனம் கொத்திப் பறவை தொடருக்குத்தான் மிக … Read more

தானாச்சூலி

சில வட இந்திய நண்பர்களின் அழைப்புக்கு இணங்க நவம்பர் 3 இலிருந்து 7 வரை உத்தர்காண்டில் உள்ள Dhanachuli என்ற கிராமத்தில் தங்க இருக்கிறேன்.  மொத்தம் 223 வீடுகள்.  அதுவும் ஒவ்வொரு மலையிலும் ஐந்தாறு வீடுகள் என்ற அளவில் விலகி விலகி இருக்கும் போல் தெரிகிறது.  மொத்த ஜனத்தொகை 1310.  எக்கச்சக்கமான பழத் தோட்டங்களும் உருளைக் கிழங்குப் பயிர்களும் நிரம்பிய இடம்.  தானாச்சூலியிலிருந்து 12 கி.மீ. தூரத்தில் முக்தேஷ்வர் என்ற பிரசித்தி பெற்ற சிவாலயம் உள்ளது.   நைனிட்டால், … Read more

அனுஷ்கா பற்றி உங்கள் கருத்து என்ன?

மேலே கண்டுள்ள கேள்விக்கு என்ன பாடுபட்டாவது சரியான பதிலைச் சொல்லி விட வேண்டும் என்று தீவிர ஆராய்ச்சி செய்து என் பதிலைச் சொன்னேன்.  அவ்வளவு தீவிர ஆராய்ச்சிக்குப் பிறகும் சொதப்பி விட்டேன் என்று அந்திமழை ஆசிரியர் போன் செய்து சொன்னார்.  வேண்டுமானால் அந்தக் கேள்வியையும் அதற்கு நீங்கள் சொதப்பியிருக்கும் பதிலையும் நீக்கி விடவா என்று அன்புடன் கேட்டார்.  சே, சே, அதெல்லாம் வேண்டாம்.  நீங்களே ஒரு விளக்கத்தைப் போட்டு வெளியிட்டு விடுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். இதோ … Read more