நாடக வாசிப்பு

கோவாவில் வரும் சனிக்கிழமை 22ஆம் தேதி எந்த நேரத்தில் நாடகம் வாசிப்பீர்கள் என்று கேட்டு ஒரு நண்பர் கடிதம் எழுதியிருந்தார். அது 21ஆம் தேதி எப்போது உறங்கப் போகிறேன் என்பதைப் பொருத்தது. வீட்டில் இருக்கும்போது ராணுவ ஒழுங்குடன் வாழ்கிறேன். இரவு பதினோரு மணி அதிக பட்சம். அதற்கு மேல் கண் விழிக்க மாட்டேன். காலையில் நாலரை அல்லது ஐந்து. அதற்கு மேல் உறங்க மாட்டேன். உறங்க நினைத்தாலும் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் வசிக்கும் குயில்களும் கிளிகளும் என்னை … Read more

ஆர்த்தோவாக வாழ்தல்…

பேய் பிடித்தவனைப் போல் படித்து, குறிப்புகள் எடுத்து, நாடகத்தை எழுதி முடித்து விட்டேன். ஆங்கிலத்தில்தான் தலைப்பு அமைந்தது. தமிழில் இன்னும் கை கூடவில்லை. ஆங்கிலத்தில் Antonin Artaud: The Insurgent என்று வைத்திருக்கிறேன். வங்காளத்திலும் மலையாளத்திலும் மொழிபெயர்க்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். தமிழில் சாத்தியம் இல்லை. நாற்பத்தைந்து ஆண்டுகளாக நான் சம்பாதித்து வைத்திருக்கும் நற்பெயரைக் குழி தோண்டிப் புதைத்து விடுவார்கள். அந்த அளவுக்கு எனக்குத் துணிச்சல் இல்லை. நீங்கள் நாவலில், சிறுகதையில் – மதத்தில் கை வைக்காமல் … Read more

வாழ்க்கையும் எழுத்தும்…

சென்ற குறிப்பில் கொஞ்சம் பிழைகள் இருந்தன. இப்போது திருத்தி விட்டேன். அந்தக் குறிப்பில் விடுபட்டுப் போன விஷயம் ஒன்று உண்டு. மதுரையில் நடந்த ரெண்டாம் ஆட்டம் நாடகத்தில் ஒரு பள்ளி மாணவியும் நடித்தாள். வயது பதினேழு இருக்கலாம். ஏன் இதில் நடித்தாய் என்று அவளுக்கும் அடி விழுந்தது. பதினேழு வயதுப் பெண் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்றுதான் சட்டம் இருக்கிறது. நவீன நாடகத்தில் நடிக்கக் கூடாது என்றுமா சட்டம் இருக்கிறது? *** நான் எப்போதுமே என்னுடனான … Read more

கோவா சந்திப்பு

என்னுடைய இருபதாவது வயதிலிருந்து இந்த அறுபத்தொன்பதாவது வயது வரை நாற்பத்தொன்பது ஆண்டுகளாக ஃப்ரெஞ்ச் இலக்கியத்தையும் தத்துவத்தையும் சினிமாவையும் ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன். என் அளவுக்கு இந்த மூன்றிலும் பாண்டித்யம் பெற்றவர்கள் இருப்பதற்கு சாத்தியம் இல்லை. இதையெல்லாம் நான் ஆணவத்தில் பேசவில்லை. தத்துவத்திலும் இலக்கியத்திலும் சினிமாவிலுமாக முறையே மூன்று பி.ஹெச்.டி. பட்டம் பெற்ற ஒருவர் அதை சொல்லிக் கொள்வது எப்படியோ அப்படியே இதைச் சொல்கிறேன். ஃப்ரெஞ்ச் தத்துவத்திலும் இலக்கியத்திலும் பாண்டியத்யம் பெற்ற பல ஃப்ரெஞ்ச் அறிஞர்கள் உண்டு. ஆனால் … Read more

யான் பெற்ற இன்பம்…

சித்த மருத்துவர் பாஸ்கரனை ஞாயிறு தவிர்த்து வேறு எங்கே பார்க்க முடியும் என்று பல நண்பர்கள் கடிதம் எழுதியிருக்கிறார்கள். அவர் வசிப்பது வேலூரில். முகவரி: Dr. D. Baskaran, B.S.M.S., 629, Phase 2, Sathuvachari, Vellore 9. email: drbaskaran57@gmail.com phone: 98947 25757 பார்க்கக் கூடிய நேரம்: காலை 9 இலிருந்து பகல் ஒரு மணி வரை. இன்னொரு முக்கிய செய்தி. மருத்துவர் பாஸ்கரனை இன்று கோவையில் சந்திக்கலாம். விவரம்: இன்று (7.7.2023) பிற்பகல் … Read more

தமிழில் எழுத்தாளனாக வாழ்தல்

என் மீது மிகுந்த பிரியம் கொண்டு என்னை நெருங்கி வரும் வாசகர்கள் கூட தமிழ் எழுத்தாளனின் நிலை பற்றி நான் அடிக்கடி புலம்புவதைப் பார்த்து வெறுத்து, அலுப்புற்று ஓடி விடுகிறார்கள்.  ஒருவர் வாட்ஸப் வரை வந்தார்.  என்னுடைய ஒரு புலம்பல் கட்டுரையைப் படித்து விட்டு என்னைக் கண்டபடி திட்டி வாட்ஸப் அனுப்பினார்.  அவரை ப்ளாக் செய்து விட்டேன்.  வெகுஜனப் பரப்பிலிருந்து வருபவர்களுக்கு நான் ஏன் புலம்புகிறேன் என்று புரியவில்லை.  இதோ இப்போது விளக்கப் போகிறேன். என்னுடைய எக்ஸைல் … Read more