பேரன்பின் தரிசனம்

  லக்‌ஷ்மி சரவணகுமார் எழுதியுள்ள கானகன் நாவலைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  சமீப காலத்தில் இப்படி ஒரு அற்புதமான நாவலைப் படித்ததில்லை.  சர்வதேசத் தரம் வாய்ந்த நாவல்.  ஓநாய் குலச்சின்னம் எங்கே தோற்றதோ அந்த இடத்தில் வென்றிருக்கிறது கானகன்.  சிலுவை என்ற கொலைக்கருவி பேரன்பின் குறியீடாக மாறியதைப் போன்ற ஒரு மேஜிக் அது.  இந்த நாவலுக்குச் சம்பந்தமே இல்லாத, கொஞ்சமும் இலக்கிய சுரணை உணர்வு அற்ற ஒரு முன்னுரை உள்ளது.  இவ்வளவு பிரமாதமான ஒரு நாவலுக்கு அதை திருஷ்டிக் … Read more

ஒரு முக்கிய அறிவிப்பு

வரும் சனிக்கிழமை அன்று (26-7-2014) மாலை ஆறு மணி அளவில் சைதாப்பேட்டையில் உள்ள அக நாழிகை புத்தக  நிலையத்தில் லக்‌ஷ்மி சரவணக்குமார் எழுதிய புதிய நாவல் “கானகன்” பற்றிப் பேச இருக்கிறேன்.  வர முடிந்த நண்பர்கள் வரலாம்…

படித்ததில் பிடித்தது (2)

திமிங்கிலம் குறித்த சமஸின் கட்டுரையில் (17 ஜூலை) தூவி, வலசை என்ற இரண்டு வார்த்தைகள் வருகின்றன.  ”திமிங்கிலத்தின் தூவியே கடலில் ஒரு பாய்மரம் அளவுக்குத் தெரியும்.”  தூவி என்பது மயிலின் தோகை, மீனின் சிறகு.  சங்க இலக்கியத்தில் பல இடங்களில் இந்த வார்த்தை வருகிறது.  வலசை செல்லுதல் என்றால் புலம் பெயர்தல்.  பின்வரும் இணைப்பில் நீலத் திமிங்கலங்களின் பாடல்களை காணொளியில் பதிவு செய்திருக்கிறார்கள். https://www.youtube.com/watch?v=dXOo68SDTdk

படித்ததில் பிடித்தது…

சுமார் மூன்று ஆண்டுகளாக என்னைத் தின்று கொண்டிருந்த எக்ஸைல் வேலை நேற்று இரவு ஒன்பது மணியோடு முடிந்து விட்டது.  இனி அதில் கை வைக்க எதுவும் இல்லை.  அதிலும் கடந்த ஆறு மாதங்களாக நான் வேறு எந்த வேலையிலும் ஈடுபட முடியாமல் போய் விட்டது.  நேற்று இரவே பதிப்பாளருக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி விட்டேன். காலையில் எழுந்து மூன்று மாதமாக நாட்டு நடப்பு பற்றித் தெரிந்து கொள்ள இணையத்தை மேய்ந்தேன்.  பாரதி விஷயமாக மோதிக் கொண்ட மேதைகள் இருவரும் … Read more

ரகளை, அட்டகாசம், பயங்கரம்…

எக்ஸைல் வேலை முடிந்து விட்டது.  முடிந்ததும் உறங்கச் செல்லும் முன் கொஞ்சம் மெயில் பார்க்கலாமே என்று திறந்தால் ஜெயமோகன் எழுதிய இந்தக் கட்டுரையின் இணைப்பு வந்திருந்தது.  சமீபத்தில் படித்ததில் என்னை வெகுவாகக் கவர்ந்த கட்டுரை.  ஏனென்றால், ஜெயமோகன் சுட்டிக் காட்டியிருக்கும் இம்மாதிரி ஆசாமிகளை நான் வாரம் ஒருமுறையாவது எங்கெங்கோ பத்திரிகைகளில், முகநூலில் எதிர் கொள்கிறேன்.  குழந்தை பெற்று, வீடு கட்டி, குழந்தைகளுக்கும் கல்யாணம் பண்ணி வைத்து விட்டு, டாக்டர் பட்டத்தோடு சினிமா விமர்சனமும் இலக்கிய விமர்சனமும் எழுத … Read more