ஒரு முக்கிய அறிவிப்பு
வரும் சனிக்கிழமை அன்று (26-7-2014) மாலை ஆறு மணி அளவில் சைதாப்பேட்டையில் உள்ள அக நாழிகை புத்தக நிலையத்தில் லக்ஷ்மி சரவணக்குமார் எழுதிய புதிய நாவல் “கானகன்” பற்றிப் பேச இருக்கிறேன். வர முடிந்த நண்பர்கள் வரலாம்…

திமிங்கிலம் குறித்த சமஸின் கட்டுரையில் (17 ஜூலை) தூவி, வலசை என்ற இரண்டு வார்த்தைகள் வருகின்றன. ”திமிங்கிலத்தின் தூவியே கடலில் ஒரு பாய்மரம் அளவுக்குத் தெரியும்.” தூவி என்பது மயிலின் தோகை, மீனின் சிறகு. சங்க இலக்கியத்தில் பல இடங்களில் இந்த வார்த்தை வருகிறது. வலசை செல்லுதல் என்றால் புலம் பெயர்தல். பின்வரும் இணைப்பில் நீலத் திமிங்கலங்களின் பாடல்களை காணொளியில் பதிவு செய்திருக்கிறார்கள். https://www.youtube.com/watch?v=dXOo68SDTdk
சுமார் மூன்று ஆண்டுகளாக என்னைத் தின்று கொண்டிருந்த எக்ஸைல் வேலை நேற்று இரவு ஒன்பது மணியோடு முடிந்து விட்டது. இனி அதில் கை வைக்க எதுவும் இல்லை. அதிலும் கடந்த ஆறு மாதங்களாக நான் வேறு எந்த வேலையிலும் ஈடுபட முடியாமல் போய் விட்டது. நேற்று இரவே பதிப்பாளருக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி விட்டேன். காலையில் எழுந்து மூன்று மாதமாக நாட்டு நடப்பு பற்றித் தெரிந்து கொள்ள இணையத்தை மேய்ந்தேன். பாரதி விஷயமாக மோதிக் கொண்ட மேதைகள் இருவரும் … Read more