ஜூன் 6 மாலை ஆறரை மணிக்கு ஸூமில் வாசகர் வட்டச் சந்திப்பு நடக்க உள்ளது, வருகிறீர்களா என்று கேட்டிருந்தேன். எனக்கு முன்பின் தெரியாதவர்கள் எல்லாம் – இதுவரை ஒரு முறை கூட கடிதத் தொடர்பு இல்லாதவர்களைச் சொல்கிறேன் – கலந்து கொள்ளவா என்று கேட்கிறார்கள். அப்படி ஒருவரை “உங்களை எனக்குத் தெரியாதே?” என்று பதில் எழுதினேன். உடனே அவர், முன்பு ஒரு கடிதம் உங்களைத் திட்டி எழுதியிருந்தேனே என்று எழுதியிருக்கிறார். இப்படி இருக்கிறது உலகம். என் வாசகர் … Read more

அ-காலம் தொடர் பற்றி: அமல்ராஜ் ஃப்ரான்சிஸ்

Ghada Al-Saman பற்றியோ Mikhael Naimy பற்றியோ இங்கு லெபனானில் யாருக்கும் எதுவும் தெரியாது. மியா கலிபா, நான்சி அஜ்ரம் (பாடகர்கள்) என்றால் கட்டுக்கட்டாகப் பேசுவார்கள். எழுத்தாளர்களின் நிலை இங்கும் அப்படித்தான். பெய்ரூட் நைட்மெயார் என்றால் கூகுள் செய்துதான் லெபனியர்களால் கண்டுபிடிக்க முடிகிறது. இங்கு இலக்கியத்தின் நிலை இதுதான். சாரு லெபனான் வந்தபோது இந்த ஊர் எழுத்தாளர்கள் பற்றிக் கதை கதையாகச் சொன்னார். ஒவ்வொரு லெபனிய எழுத்தாளர்களைப் பற்றிச் சொல்லும்போதும் அவருடைய கண்கள் மின்னும். அவ்வளவு ஈடுபாட்டோடு … Read more