அதிகாரமும் விளிம்புநிலையும்…

என்னுடைய பழைய கட்டுரைத் தொகுப்புகளுக்குப் புதிய பதிப்பு கொண்டு வரும்போது அவற்றைப் படித்து, தேவையில்லாதவற்றை நீக்கி விடுவது என் வழக்கம்.  அப்படி நீக்கும் பகுதிகள் அதிகம் இருக்காது.  இருநூறு பக்கத்தில் பத்து பக்கம் இருக்கும்.  அந்தப் பத்து பக்கமும் ஜெயமோகனுக்கு எழுதும் மறுப்பாக இருக்கும்.  ஒரே ஒரு நூலில் மட்டும் இருநூறுக்கு நூறு பக்கம் இருந்தது.  அனைத்தையும் நீக்கி விட்டேன்.  ஏனென்றால், ஒரு சக எழுத்தாளருக்கு மறுப்பு சொல்லிக் கொண்டிருப்பதும், சண்டை போட்டுக் கொண்டிருப்பதும் என் வேலை … Read more

வாசகர் சந்திப்பு பற்றி…

நேற்றைய வாசகர் சந்திப்பு பிரமாதமாக இருந்தது. எல்லோருமே மிகப் பொறுப்பாகப் பேசினார்கள். 40 பேர். இன்னொரு இருபது பேரை அடுத்த சந்திப்பில் பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறேன். முதல் முதலாக ஒரு உள்வட்ட சந்திப்பில் இணைப்பதில் கொஞ்சம் தயக்கம் இருக்கிறது. இதுவரை ஒரு மின்னஞ்சல் கூட இல்லாமல் எந்த அறிமுகமும் இல்லாமல் எப்படி என்ற தயக்கம். அப்படியும் நாலைந்து பேரை இணைத்தேன். அடுத்த சந்திப்பில் இந்த முறை இணைய முடியாதவர்களையும் இணைக்கலாம். நூறு பேர் வரை கொள்ளும். கோவிட் … Read more