ArtReview பத்திரிகையில் என் கட்டுரை : India is choking

லண்டனிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ArtReview Asia பத்திரிகையின் இன்னொரு சகோதரப் பத்திரிகை ArtReview. ஆர்ட்ரெவ்யூ ஏஷியாவுக்குக் கட்டுரையை அனுப்பிய பிறகு அவர்கள் ஆர்ட்ரெவ்யூவுக்கும் ஒரு கட்டுரை கேட்டார்கள். அதனால் உடனடியாக அதற்கு வேறொரு கட்டுரையை எழுதி அனுப்பினேன். ஜெட் வேகத்தில் மொழிபெயர்த்துக் கொடுத்த வித்யா சுபாஷுக்கு நன்றி. https://artreview.com/india-is-choking/

ராஜேஷ் குமார்

என்னுடைய மலையாள நண்பர்கள் யாரோடும் இப்போது எனக்குத் தொடர்பு இல்லை. மாத்யமம் பத்திரிகையில் கண்ணன் இருந்தார்.  விஜயகுமார் குனிசேரி ஒரு அற்புதமான மனிதர்.  கவிஞர்.  கோவையில் வசித்தார்.  மாத்ருபூமி பத்திரிகையில் பணி புரிந்தார்.  நான் எப்போது கோவை சென்றாலும் என் குடி நண்பர் அவர்தான்.  அவருடைய மகன் என் வாசகர்.  விஜயகுமாருக்குத் தமிழ் நன்றாகப் படிக்கவும் பேசவும் தெரியும் என்பதால் என் எழுத்தும் நன்கு பரிச்சயம்.  அவரை நான் சந்திக்கும் போதெல்லாம் அவர் மகன் மாணவர்.  பிறகு … Read more