வனத்தின் நடுவே ஒரு குடில்

வினித்தும் நண்பர்களும் ஒரு வனத்தின் நடுவே ஒரு குடிலை வாடகைக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். மாதத்தில் நான்கைந்து நாட்கள் அந்த வனத்தில் அமர்ந்துதான் எழுதத் திட்டமிட்டு இருக்கிறேன். உள்ளே பல இடங்களில் பகலிலும் அடர் இருள் கனத்திருக்கிறது. இனி வரும் காலத்தை எழுதுவதற்கு மட்டுமே செலவு செய்வதென்று முடிவு. அதைத்தான் கடந்த இரண்டு ஆண்டுகளாகவும் செய்து வருகிறேன். இப்போது மாதத்தில் சில தினங்கள் வனம். இதற்கு மாத வாடகையாகக் கொஞ்சம் பணம் தேவை. இந்தக் கணக்கு வழக்குகளை நிர்வகிப்பது … Read more

கட் பண்ணு, தூக்கு…

வான் ஹூசனில் ஒரு சிவப்பு நிற சட்டை வாங்கினேன். வாங்கிப் பல காலம் இருக்கும். தூய பட்டுத் துணி என்பதால் பெண்கள் வைத்துக் கொள்ளும் பட்டுப் புடவை மாதிரி ஒரு டிகேட் வந்து விட்டது. என் சட்டைகளிலேயே அதி அழகு சட்டை அதுதான். அதே துணியில் பச்சை மஞ்சள் ஊதா என்று வாங்கலாம் என்று போனால் கிடைக்கவில்லை. நம் வினித் கூட பல ஊர்களில் தேடியிருக்கிறான். அவனுக்கு. கிடைக்கவில்லை. அந்த சட்டையை எப்போதோ ஒரு போட்டோ ஷூட்டுக்கு … Read more