அசைவம்

பா.ராகவன் நேற்று ஸீரோ டிகிரி பப்ளிஷிங் அலுவலகம் போய் நூற்றுக்கணக்கான புத்தகங்களில் கையெழுத்துப் போட்ட மாதிரி நானும் ஒருநாள் அங்கே செல்லலாம் என்று நினைக்கிறேன். மதிய உணவுதான் பிரச்சினை. ஒரே சைவர்களாக அமர்ந்திருக்கும் இடத்தில் நான் மட்டும் அசைவம் சாப்பிட கூச்சப்படுவேன். அதனால் பக்கத்திலேயே இருக்கும் ஒரு உலகத் தரமான அசைவ உணவுக் கூடத்துக்கு- கோவை அலங்கார் விலாஸ் – நான் மட்டும் நைஸாகப் போய் வந்து விடலாம் என்று யோசனை. அது ஒரு பிரபல இசையமைப்பாளரின் … Read more

தமிழ் வாசகர் ஓசியில்தான் படிப்பாரா? – சமஸ்

சமஸ் ஃபேஸ்புக்கில் எழுதியுள்ள இக்குறிப்பை அவர் அனுமதியின்றி இங்கே பகிர்ந்து கொள்கிறேன். சமஸ் ஆட்சேபிக்க மாட்டார் என்ற நம்பிக்கையுடன். அவரது அருஞ்சொல் இணைய இதழை நாம் அனைவரும் வாசிக்க வேண்டும். சமஸ் தமிழ் பத்திரிகையுலகுக்குக் கிடைத்த சொத்து. மற்றவர்களுக்கும் அவருக்கும் என்ன வித்தியாசம் என்றால், மற்றவர்கள் ஒரு கோட்பாட்டோடு தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு விடுவார்கள். இடதோ வலதோ. சமஸ் ஒரு நடுநிலைப் பத்திரிகையாளர். பின்வரும் குறிப்பில் வாசகர்கள் சந்தா கட்டுவது பற்றி, நன்கொடை கொடுப்பது பற்றி எழுதியிருக்கிறார். … Read more

பாதி கதை (சிறுகதை): காயத்ரி ஆர்.

பந்துபோல் உருண்டு வந்த உளுந்து மாவை கரண்டியில் எடுத்து ஜாங்கிரித் துணியில் இட்டு கொதிக்கும் எண்ணையில் சுழிசுழியாக சமையல் மாமி வரைந்து கொண்டிருந்ததை பார்த்துக் கொண்டிருந்தாள் தைலாம்பாள். கறுப்பாக எண்ணெய் பிசுக்கு அடுக்கடுக்காகப் படிந்த அந்த வாணலியை வாஞ்சையோடு பார்த்தாள். திருமணம் நிச்சயமானபின் அனுப்பர்பாளையத்தில் இருந்த தங்கவேல் கவுண்டர் பாத்திரக் கடையில் என் பெரியம்மா தட்டித் தட்டிப் பார்த்து வாங்கியது. “இந்தக் கைப்புடி இல்லாத கல்கத்தா சட்டிய எடுத்துக்குங்க. ரொம்ப நல்லா இருக்கும்” என்ற கவுண்டரைப் பார்த்து … Read more