மார்கழி வீதி பஜனை

அற்புதமான ஒரு வீதி பஜனை. இதற்குத்தான் மைலாப்பூரில் இருப்பது. ஒருமுறையாவது இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று பார்க்கிறேன். வாய்ப்பதில்லை. அடுத்த ஆண்டாவது கலந்து கொள்ள வேண்டும். இளைஞர்களையும் பார்ப்பது சந்தோஷமாக இருக்கிறது. என் வீட்டிலிருந்து ஒரு ஐந்து நிமிட தூரத்தில்தான் இந்தத் தெரு இருக்கிறது. தாத்தாக்கள் அனைவரும் தாடிக்கு முகக் கவசம் அணிந்திருக்கிறார்கள். புரிந்து கொள்ள முடிகிறது. முகக் கவசம் அணிந்தால் மூச்சின் ஆவி கண்ணாடியில் படிந்து பார்க்க முடியாமல் போய் விடுகிறது. இந்தத் தகவலை … Read more

அங்க சேஷ்டை

முகத்தை அஷ்ட கோணலாக்கிப் பாடும் சாஸ்திரீய இசைக் கலைஞர்கள் பற்றி அராத்து மிக மோசமான பதிவு ஒன்றைப் போட்டிருக்கிறார். பொதுவாக இது விஷயங்களை நான் அவரோடு நேரில்தான் விவாதிப்பது வழக்கம். ஆனால் இதை அவர் பொதுவில் எழுதியிருப்பதால் நானும் பொதுவிலேயே எழுத வேண்டியிருக்கிறது. எனக்குக் கிரிக்கெட் தெரியாது. மைதானத்தில் நடுவில் ஏன் ஒரு இடம் மட்டும் புல் இல்லாமல் வெள்ளையாக இருக்கிறது என்று கேட்கும் அளவுக்குத்தான் எனக்கு கிரிக்கெட் ஞானம் உண்டு. அதனால் கிரிக்கெட் பற்றி நான் … Read more

ஆசீர்வாதம் (குட்டிக் கதை)

நான் கர்ம வினையை நம்புபவன்.  கர்மாவுக்கெல்லாம் விஞ்ஞான ரீதியான சோதனை, நிரூபணம் எதுவும் கிடையாது.  பெரியோர் சொல்வதையும் சில அனுபவங்களையும் வைத்து நாமே முடிவு செய்து கொள்ள வேண்டியதுதான்.  இல்லாவிட்டால் என் பழைய நண்பர் ஒருவர் குடித்த குடிக்கு எப்போதோ மேலே போயிருக்க வேண்டும்.  அவர் தெளிவாகச் சொல்லி விட்டார். யாரும் அஞ்ச வேண்டாம்,  என் வயது 85 என்று.  அவருக்கு சோதிடம் தெரியும்.  நான் அந்நியோன்யமாக குடும்ப வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்த போது பிரிந்து விடுவீர்கள் … Read more