நண்டுக் குழம்பு

நேற்று உடல் நலம் பற்றி எழுதினேன் இல்லையா, எழுதியிருக்கக் கூடாது என்று இரவு தோன்றியது. எனக்கும் நல்ல ஜுரம். உடம்பு வலி. காலையில் எழுந்ததும் நடைப் பயிற்சிக்கு செல்ல முடியவில்லை. ஐந்து மணிக்கே ராகவனுக்கு வாட்ஸப்பில் செய்தி அனுப்பினேன். சில தினங்களுக்கு வர முடியாது என்று. ஏழு மணிக்கு ஃபோன் செய்தார். என்னால் எடுக்க முடியவில்லை. ஜுரம் அடித்தாலும் பூனை சேவை செய்தாக வேண்டுமே? ஏழரைக்கும் போன் செய்தார். அவர் வாட்ஸப் பார்க்கவில்லை என்று தெரிந்து கொண்டேன். … Read more

சுதந்திரம்

வீட்டில் அவந்திகா இருக்கும் போது நான் போன் பேசுவதில்லை. எனக்கு வரும் அழைப்புகளுக்கும் ஒன்றிரண்டு வார்த்தைகள்தான் பதில். இப்படி இருப்பதற்கே அவந்திகா அடிக்கடி சொல்லும் புகார், நான் எப்போதும் போன் பேசிக் கொண்டே இருக்கிறேன் என்பது. ஒரு முழு நாளிலும் சீனியோடு நாலு நிமிடம் பேசினால் பெரிது. வேறு யாரோடும் பேசுவதில்லை. ஒரே ஒரு நாள், நம் வளன் பாதிரியார்தானே, பேசினால் என்ன பிரச்சினை வரப் போகிறது என்று அவன் அழைத்தபோது எடுத்தேன். 95 வயதுக்கு மேல் … Read more