தண்ணி (ரெண்டும்தான்)

இன்று மாலை ஆறரை விமானத்தில் கிளம்பி ஏழரைக்கு கோவை வந்து சேர்கிறேன்.  அங்கிருந்து நேராக ஆட்டோநேரட்டிவ் தொடக்க விழா நடக்கும் இடத்துக்குச் செல்கிறேன்.  பத்து மணிக்கு அராத்து சிறுகதைகள் பற்றி உரையாற்றுகிறேன்.  எனக்குப் பேசத் தெரியாது என்று நண்பர்கள் பலர் கருதுகிறார்கள்.  ஆனால் அராத்து கவிதைகளை அறிமுகப்படுத்தி நான் பேசியது என் உரைகளில் ஒரு உச்சம்.  இன்றும் அதேபோல் இருக்க வாய்ப்பு உண்டு.  பிறகு நண்பர்களுடன் அங்கேயே காலை ஐந்து மணி வரை சீலே வைன் அருந்தியபடி … Read more

அதிகார எந்திரத்தில் பிழியப்படும் கண்ணாயிரம் பெருமாள்: கணேஷ் பாபு

அதிகார எந்திரத்தில் பிழியப்படும் கண்ணாயிரம் பெருமாள் -கணேஷ் பாபு | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)

ஆட்டோநேரட்டிவ் தொடக்க விழா மற்றும் என் உரை

நாளை (16ஆம் தேதி) மாலை நடக்க இருக்கும் விழா பற்றி அராத்து எழுதியிருப்பது: விழா – ஃபைனல் கால் மற்றும் விரிவான விளக்கங்கள். சாரு நிவேதிதா , ராஜ சுந்தரராஜன் மற்றும் நம்பிள் கலந்து கொள்ள இருக்கும் பதிப்பகத் தொடக்க விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா டிசம்பர் 16 வெள்ளி மாலை முதல் நள்ளிரவு வரை. எங்கே ? கோவை வட சித்தூரில் இருக்கும் ஒரு பண்ணை வீடு ? லொக்கேஷன் ? கமெண்டில் மேப் … Read more

சாரு பற்றி லட்சுமி சரவணகுமார்

இதற்கு முன் வந்த விஷ்ணுபுரம் விழா அழைப்பிதழைப் பார்த்திருப்பீர்கள். அதில் உள்ள என் புகைப்படம் பித்துக்குளி முருகதாஸ் மாதிரி இருப்பதாக எனக்குத் தோன்றியது. தோன்றியவுடனேயே நண்பர்கள் சிலரும் அதேபோல் அபிப்பிராயப்பட்டு எனக்குத் தெரிவித்தார்கள். அந்தப் புகைப்படத்தை அனுப்பியவனே நான்தான் என்பதால் கமுக்கமாக இருந்து விட்டேன். யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. கடைசியில் பார்த்தால் விழாக் குழுவினரே அழைப்பிதழை மாற்றி விட்டார்கள். இப்போதைய அழைப்பிதழ் பிரமாதமாக வந்துள்ளது. எனவே இதையே அழைப்பாகக் கொண்டு விழாவுக்கு வந்து விடுங்கள். முக்கியமாக இரண்டு … Read more

சாருவும் விருதும்…

சுமந்தலைதல் என்பது வேறு.. எடுத்துக் கொள்வது என்பது வேறு.விரும்பியவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டு, ஏற்றுக்கொண்டதற்கு காரணங்களை கற்பித்துக் கொண்டே ஒரு சித்தாந்தத்திற்குள் பிடிபட்டு, செக்கு மாடு போல அது சார்ந்தே சிந்திப்பதிலும், செயல்படுவதில் இருந்தும், ஒரு வாசகன் வெளிவர வேண்டுமானால், தமிழில் சாருவின் படைப்புகளை வாசிப்பதால் சாத்தியப்படும். நாற்பதாண்டு காலமாக தமிழில் வாசித்து வரும் எனக்கு, சாருவின் எழுத்துகள் அறிமுகமான போது தான், தொடர் வாசிப்பு மற்றும் பன்முக சிந்தனை குறித்த ஒரு தெளிவான பார்வை கிடைக்கத் தொடங்கியது. … Read more