விஷ்ணுபுரம் விழா நினைவுகள் – 2

2. விஷ்ணுபுரம் வாசகர் வட்ட நண்பர்கள் அனைவரையும் அல்லது தெரிந்தவர்களை மட்டுமாவது சனிக்கிழமை இரவு அல்லது ஞாயிறு இரவில் சந்தித்துப் பேசலாம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.  ஆனால் நடந்தது என்னவென்றால், எனக்கும் நேரமில்லை.  அவர்களுக்கும் நேரமில்லை.  அரங்கா, காளி ப்ரஸாத், செல்வேந்திரன், மீனாம்பிகை, செந்தில் போன்ற நண்பர்களுக்கு ஒரு ஹலோ சொல்லத்தான் நேரமிருந்தது.  அஜிதனோடு நீண்ட நேரம் பேசலாம் என்று இருந்தேன்.  கை குலுக்கியதோடு சரி.  வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் கண் விழித்ததால் காலையில் எட்டு மணிக்கு … Read more

விஷ்ணுபுரம் விழா நினைவுகள் – 1

வெள்ளிக்கிழமை (16.12.2022) மாலை ஏழரைக்கு கோவை செல்லும் விமானத்தைப் பிடித்தேன்.  அன்று இரவு பத்து மணிக்கு கோவையிலிருந்து 25 கி.மீ. தூரத்தில் உள்ள வடசித்தூர் கிராமத்தில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் ஆட்டோநேரட்டிவ் ப்ப்ளிஷிங்கின் தொடக்க விழா இருந்தது.  இரவு பத்து மணி என்ற வினோதமான நேரத்துக்குக் காரணம் என்னவென்றால், அன்று பகலிலேயே கோவை வர முடியாத நிலையில் இருந்தேன்.  டிசம்பர் 16 அவந்திகாவின் பிறந்த நாள் என்பதாலும், டிசம்பர் 18 என்னுடைய பிறந்த நாள் அன்று … Read more

த அவ்ட்ஸைடர் : சில விளக்கங்கள் : அராத்து (29)

விஷ்ணுபுரம் விழா மேடையில் சாரு என் பெயரை சொல்லவில்லை என சில கமெண்டுகள். இந்த சில, பல ஆகிவிடக் கூடாது என்பதால் இந்த சின்ன பதிவு. அது ஒரு எர்ரர் (error)அவ்வளவுதான். இதை தமிழில் தவறு என்றோ தப்பு என்றோ எழுத முடியாது. வேறு அர்த்தம் கொடுத்து விடும். சாரு என் பெயரை இதுவரை தேவைக்கதிகமாக சொல்லி வந்திருக்கிறார். இந்த விழாவில் நன்றி தெரிவிக்கும் விதமாக பலரின் பெயரை சொன்னார். அந்த லிஸ்டில் என் பெயர் வந்திருக்க … Read more

the outsider – ஒரு கடிதம்

சாருவைப் பற்றிய ஒரு அட்டகாசமான Documentary, ” THE OUTSIDER ” என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது…மிக நேர்த்தியாக வித்தியாசமாக இந்த ஆவணப்படத்தை அன்பு நண்பர் அராத்து இயக்கியுள்ளார். நேற்று அப்படத்தை சுமார் 500 பேர் மெய்மறந்து ரசித்துப் பார்த்ததை நேரில் காணும் வாய்ப்பைப் பெற்றேன்..படம் முடிந்த பிறகும் கைதட்டல் அடங்க சிறிது நேரமானது… சாருவின் சிறுவயது நாகூர் வாழ்க்கை, தஞ்சாவூர் கல்லூரிக் காலம், அவருடைய தபால்துறை பணி, தாய்லாந்து தீவுப் பயணங்கள், சீலே சார்ந்த கலாச்சாரக் காட்சிகள், … Read more