அன்பு குறித்து ஒரு பின்நவீனத்துவவாதியின் புகார் மனு (குறுநாவல் குறித்த அறிவிப்பு)

அன்பு குறித்து ஒரு பின்நவீனத்துவவாதியின் புகார் மனு என்ற தலைப்பிலான என்னுடைய குறுநாவல் புத்தக விழாவின் போது வெளியாகும். வழக்கம் போல் ஸீரோ டிகிரி வெளியீடு. (இந்தக் கடைசி வாக்கியத்தை எழுதியிருக்க மாட்டேன். ஆனால் நண்பர்கள் ஆட்டோநேரட்டிவ் பதிப்பகம் ஆரம்பித்திருப்பதால் குழப்பத்தைத் தவிர்க்கவே ஸீரோ டிகிரி வெளியீடு என்று சொன்னேன். என்னுடைய புத்தகங்கள் அனைத்துமே எப்போதுமே ஸீரோ டிகிரியிலிருந்துதான் வெளிவரும். அங்கே நிராகரிக்கப்பட்டால் மட்டுமே ஆட்டோநேரட்டிவ். அப்படி நிராகரிக்கப்படுவதற்கான சாத்தியமும் தெரியவில்லை. கதையை சீனியிடம் விவரித்தேன். அடி … Read more

அறம்

எடிட்டர் லெனின் அவர்களுக்கு… நான் தங்களிடம் என் வாழ்க்கை வரலாறு குறித்த ஆவணப்படமான த அவ்ட்ஸைடர் படத்துக்கு படத் தொகுப்பு பணியைச் செய்து தர முடியுமா என்று ஆறு மாதங்களுக்கு முன்பு ஃபோனில் கேட்ட போது என் வீட்டுக்கே நேரில் வந்த நீங்கள் படத்தொகுப்பை செய்து தருவதாகச் சொன்னீர்கள். எடுத்த எடுப்பிலேயே முப்பதாயிரம் ரூபாய் பணமும் வாங்கிக் கொண்டு விட்டீர்கள். வங்கிக் கணக்கில் அதற்கான சாட்சி உள்ளது. அதற்குப் பிறகு நாம் தினந்தோறும் பேசினோம். நவம்பர் 15-ஆம் … Read more

ஆண்டாளும் கொஞ்சம் வெங்காயமும்…

மைலாப்பூரில் உள்ள பாரதீய வித்யா பவன் அரங்கில் தினந்தோறும் காலை ஏழு மணியிலிருந்து எட்டரை வரை திருப்பாவை பிரசங்கம் நடந்து வருகிறது. டிசம்பர் பதினெட்டிலிருந்து இன்று வரை பதினெட்டு பாசுரங்கள் பிரசங்கம் முடிந்திருக்கிறது. ஜனவரி முதல் தேதி வரை இந்தப் பிரசங்கம் நடக்கும். கல்யாணபுரம் ஆராவமுதாச்சாரியார்தான் பிரசங்கிக்கிறார். அற்புதமான பிரசங்கம். சம்ஸ்கிருதம் மற்றும் தமிழ் இலக்கியத்தில் அவர் ஒரு ஞானக்கடல் என்று தோன்றுகிறது. பிரசங்கம் முடிந்ததும் சிற்றுண்டி வேறு தருகிறார்கள். செவி, வயிறு இரண்டுக்கான உணவும் இலவசம். … Read more