சாருவும் விருதும்…

சுமந்தலைதல் என்பது வேறு.. எடுத்துக் கொள்வது என்பது வேறு.விரும்பியவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டு, ஏற்றுக்கொண்டதற்கு காரணங்களை கற்பித்துக் கொண்டே ஒரு சித்தாந்தத்திற்குள் பிடிபட்டு, செக்கு மாடு போல அது சார்ந்தே சிந்திப்பதிலும், செயல்படுவதில் இருந்தும், ஒரு வாசகன் வெளிவர வேண்டுமானால், தமிழில் சாருவின் படைப்புகளை வாசிப்பதால் சாத்தியப்படும். நாற்பதாண்டு காலமாக தமிழில் வாசித்து வரும் எனக்கு, சாருவின் எழுத்துகள் அறிமுகமான போது தான், தொடர் வாசிப்பு மற்றும் பன்முக சிந்தனை குறித்த ஒரு தெளிவான பார்வை கிடைக்கத் தொடங்கியது. … Read more

ஆட்டோநேரட்டிவ் பப்ளிஷிங் தொடக்க விழா

கொரோனா அறிமுகம் ஆனதிலிருந்தே வாசகர் வட்ட சந்திப்புகள் எதுவும் நடந்த்தில்லை.  கொரோனா போன பிறகு ஆரோவில்லில் மூன்று நான்கு முறை சந்தித்தோம்.  ஒவ்வொரு சந்திப்பிலும் சுமாராக நாற்பது ஐம்பது பேர் வந்திருந்தார்கள்.  ஆனாலும் ஆரோவில் வீடு எங்கள் வீடாக இருப்பதால் ஒரு மலையடிவாரத்திலோ கடல்கரையிலோ சந்திப்பது போல் இல்லை. இப்போது ஆட்டோநேரட்டிவ் பதிப்பகத்தின் தொடக்க விழாவும், அராத்துவின் நூல்கள் வெளியீடும் ஒன்றாக நடக்க உள்ளது.  இரண்டும் பதினாறாம் தேதி இரவு பத்து மணியிலிருந்து ஒரு மணி வரை … Read more

சாரு நிவேதிதா ஏன் இப்படி எழுதுகிறார்? – அனீஷ் கிருஷ்ணன் நாயர்

அனீஷ் கிருஷ்ணன் நாயரின் இந்தக் கட்டுரையைப் படித்து விட்டு நான் பலவிதமான எண்ண அலைகளினிடையே சிக்கினேன். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு திருவல்லிக்கேணி லாட்ஜில் வைத்து என் மீது ஒரு அபாண்டம் சுமத்தப்பட்ட போது அதை எதிர்த்து என்ன செய்வது என்று தெரியாமல் என் உடலில் உள்ள எல்லா ஆடைகளையும் களைந்து விட்டு முழு நிர்வாணமாக எல்லோர் எதிரிலும் பத்து நிமிடம் நடந்தேன். ஆடைகளைத் திரும்ப அணிந்ததால் இதோ உங்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன். திரும்ப அணிந்திராவிட்டால் மனநோய் … Read more