ஒரு புகைப்படம்: ஸ்ரீராம்

ஒரு புகைப்படத்தைப் பார்த்து பத்து நாட்களாக ஆச்சரியப்பட்டுக் கொண்டு இருக்கிறேன். நேற்று ஜெயமோகனின் தளத்திலும் இன்று சாருவின் தளத்திலும் மீண்டும் அந்தப் புகைப்படத்தைப் பார்த்தேன். சக்திவேலுடன் சாரு இருக்கும் புகைப்படம்தான் அது. சக்திவேல் ஜெயமோகனின் வாசகர். Physically challenged. சாரு அந்தப் புகைப்படத்தில் மிகவும் உற்சாகமாக இருக்கிறார். ஒரு நாகரிகமான சமூகத்தில் இதைப் பற்றியெல்லாம் வியப்பது கூட அநாகரிகம்தான். ஆனால், சமீபத்தில் இன்னொரு புகைப்படம் பார்த்தேன். நடிகர் விஜய் தன் ரசிகர்களுக்கு விருந்திட்டு, ஒவ்வொருவருடனும் புகைப்படம் எடுத்திருக்கிறார். … Read more

புத்தக விழா

புத்தக விழா என்றால் எனக்கு ஒரு சின்ன பிரச்சினைதான் மனதில் நெருடும். வாகனம். மாலை நான்கு மணிக்குக் கிளம்பினால் இரவு ஒன்பதுக்குத் திரும்பலாம். சென்ற ஆண்டும் அதற்கு முந்தின ஆண்டுகளும் பிரச்சினை இல்லாமல் இருந்தது. இப்போது அந்த நண்பர் என் மீது சற்று பிணக்கில் இருக்கிறார். எப்போது அழைத்தாலும் நாளை அழைக்கிறேன் என்கிறார். எதற்கு வம்பு என்று விட்டு விட்டேன். அவர் இருந்தவரை வாகனப் பிரச்சினை இல்லாமல் இருந்தது. ஆனால் என்னோடு தொடர்ந்து நட்பாக இருப்பதும் கடினம்தான். … Read more

விஷ்ணுபுரம் விழா நினைவுகள் – 5

விஷ்ணுபுரம் விழா பற்றி நேற்று அபிலாஷின் கட்டுரையைப் படித்ததிலிருந்து அது பற்றியே நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். என் மனதை அவர் கருத்துக்கள் துளைத்துக் கொண்டே இருந்தன. நான் ஒன்றுக்கு இரண்டாக அவருக்குப் பதிலும் சொல்லி விட்டேன். ஆனாலும் என் பதிலில் எனக்குத் திருப்தி இல்லை. இருப்பினும் இறுதியில் ஒரு முடிவுக்கு வந்து சேர்ந்தேன். செமினார் வேறு, விழா வேறு என்பதே அது. நாம் கருத்தரங்கையும் விழாவையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. கருத்தரங்குகளில் எல்லோரும் … Read more

மளிகைக்கடையும் பதிப்பகமும்…

தமிழில் 1965இல் தொடங்கி செயல்பட்ட வாசகர் வட்டம் பற்றி நான் எழுதி ஈரம் காய்வதற்குள் ஒரு நண்பரிடமிருந்து நேற்று மாலை தொலைபேசி அழைப்பு.  சாரு, உங்கள் கட்டுரை மிகவும் நல்ல கட்டுரை, ஆனால் அதில் சில விவரப் பிழைகள் உள்ளன.  அதைக் கொஞ்சம் சரி செய்து விடுங்கள்.  என்ன விவரப் பிழை என்றால், வாசகர் வட்டம் போட்ட மொத்த புத்தகங்களே 45தான்.  அதிலும் வெளிவந்தவை 39தான்; 45 இல்லை.  ஆக, ஒரு பதிப்பகம் எப்படி நடத்தக் கூடாது … Read more

ஆட்டோநேரட்டிவ் தம்பிகளுக்கு…

நம் எதிரிகள் நம்மை அடையாளப்படுத்துவது போல் குடி அல்ல நம் பிரச்சினை.  நாம் செயல்வீரர்கள், குடிகாரர்கள் அல்ல.  அதே சமயம் நம்மிடம் இன்னொரு பிரச்சினை உள்ளது.  அது, இன்றைய இளைஞர்களின் பிரச்சினை.  முதலில் ஒரு காரியத்தில் இறங்கும்போது ஒரு அடிப்படைப் புரிதல் வேண்டும். பிரச்சினைக்குத் தீர்வு வாட்ஸப்பிலோ தொலைபேசியிலோ இல்லை.  ஒரு வாசகர் ஒரு புத்தகத்துக்குப் பணம் அனுப்பியிருக்கிறார்.  நம்முடைய கடமை, புத்தகத்தை அனுப்புவது.   என் அப்பாவுக்குப் புடுக்கு வலி, என் பொண்டாட்டிக்கு இடுப்பு வலி என்றெல்லாம் … Read more