எலி : சிறுகதை : அராத்து

எலி ஆடைகளின்றித் திரிந்துகொண்டிருந்த காலம். பெயர் வைக்கும் வழக்கமும் இல்லை. ஏதோ ஒரு பறவை கிளைக்குக் கிளைத் தாவுவதைத் பார்த்தபடி, செங்குத்தாக நிற்கும் விரைப்பான  பாம்பு ஒன்று  லேசாக குனிந்து நிமிர்ந்து செல்வது போல சென்றுகொண்டிருந்தாள். வாயில் ரத்தம் ஒழுக இறைச்சியைத் தின்றுகொண்டே வந்த ஒருவன் எதிர்ப்பட்டதும் நின்று நிதானித்து இளமரம் காற்றில்லாத போது நிற்பது போல நின்றாள். அவன் கொஞ்சமாக இறைச்சியைக் கொடுத்தான் . இவள் வாங்கவில்லை. இன்னும் சற்று அருகே வந்தவன் அவளுடைய முலைக்காம்புகளை … Read more

அராத்துவின் புதிய சிறுகதை

அவர் எழுதுவது நன்றாக இருக்கிறதா, இல்லையா என்ற பேச்சுக்கே இடமில்லை; பாரம்பரியமான எழுத்தாளர்கள் யாவரும் அராத்துவை ஒரு எழுத்தாளராகவே ஒத்துக்கொள்வதில்லை. அப்புறம்தானே நன்றாக இருக்கிறதா இல்லையா என்ற பேச்சு. ஆனால் நான் உலக இலக்கியத்தை நன்கு வாசித்திருக்கிறேன். என் வாசிப்பு பற்றி நான் பெருமையாகவே சொல்லிக் கொள்ளலாம். எனக்கு ஒரு புத்தகத்தை அவசரமாகப் படிக்க வேண்டும். ஆனால் அதன் விலை எக்கச்சக்கம். எனக்குப் புத்தகம் வாங்கிக் கொடுக்கும் இரண்டு மூன்று பேரில் ஸ்ரீராமும் ஒருவர். அவரிடம் சொன்னேன். … Read more

நாட்டு நாட்டு

நாட்டு நாட்டு கேட்டேன். பார்த்தேன். குடிகாரன் எடுத்த வாந்தி போல் இருந்தது. இதற்கு ஆஸ்கர் கொடுத்திருக்கிறார்கள். அப்படியென்றால் வைரமுத்துவும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வாங்கலாம். ஆனால் பெருமாள் முருகன் ஏமாற்றமடைவார். சமீபத்தில் நிறைய போலிகளைப் பார்த்து படித்து மன உளைச்சலில் இருக்கிறேன். ஊரே கொண்டாடிய ஒரு சிறுகதை. போலி எழுத்தின் உச்சகட்டம். ஊரே கொண்டாடிய ஒரு சினிமா. மதிய நேரத்து மயக்கம். போலி சினிமாவின் எடுத்துக்காட்டு. இதற்கிடையில் இளையராஜாவின் பாட்டு வேறு. அதை போலி என்று சொல்லக் … Read more

வழிந்தால் வழிவேன்

கடந்த புத்தக விழாவின் போது ஒரு பிரபலமான பெண்மணி என்னையே சற்று நேரம் உற்றுப் பார்த்து விட்டு தன் தோழியிடம் எனக்கும் கேட்கிறாற்போலவே “பார், சாருவின் கன்னம் எப்படி மின்னுகிறதென்று?” என்றார். மற்றவர்களாக இருந்தால் ஹி ஹி என்று வழிவார்கள். நான் வேறு மாதிரி வழிந்தேன். “எனக்காவது கன்னம் மட்டும்தான் மின்னுகிறது. உங்களுக்கோ முழு தேகமே மின்னுகிறதே?” என்றேன். அப்போது அவர் பார்த்த ஒரு பார்வைக்கு இந்த உலகத்தையே தூக்கிக் கொடுத்து விடலாம். ஆனால் அவருடைய தொலைபேசி … Read more

இளையராஜா – றியாஸ் குரானா

நேற்று இளையராஜாவின் காட்டு மல்லி என்ற பாடலைக் கேட்டு மனம் மிக நொந்தேன். ராஜாவின் பாடல்களிலேயே ஆக மட்டமான பாடல். அப்படிக் கூட சொல்ல முடியாது. அந்தப் பாடலை ஏண்டா கேட்டோம் என்று ஆகி விட்டது. அத்தனை மட்டமான பாடல். இதை ஃபேஸ்புக்கில் எழுதியதும் எல்லோரும் என் மீது வாந்தி எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒரே வசை. தன் அசிங்கம் அவ்வளவையும் என் மீது கொட்டினார்கள். எனக்கு ஒன்றும் பாதிப்பு இல்லை. எல்லோரும் எத்தனை அசிங்கத்தோடு திரிகிறார்கள் … Read more

ஒரு fetish கதை…

ஆட்டைப் புணர்ந்தது போல் இருந்தது அந்தக் கதை.  ஆட்டைப் புணர்வது வக்கிரத்தில் வரும்.  ஆனால் அதையே ஒருத்தன் ஆட்டின் ஆசன வாய்க்கு ஒரு வர்ணனை, அதன் மடிக்கு ஒரு வர்ணனை, அதன் மூஞ்சிக்கு ஒரு வர்ணனை என்று வர்ணித்து வர்ணித்து எழுதினான் என்றால் அதை fetishஇன் உச்சக்கட்டம் என்றுதானே சொல்வீர்கள்?  சில வெளிநாடுகளில் கக்கூஸ் மாதிரி ரெஸ்டாரண்ட் கட்டி அங்கே சாப்பிடுகிறார்கள்.  ஒரு இணைய வேசி தன் அபானவாயுவைப் பிடித்து என்.எஃப்.டி.யில் விற்று கோடிக்கணக்கில் சம்பாதித்து இருக்கிறாள்.  … Read more