ஒன் மேன் ஆர்மி – 2

ஒவ்வொரு விருதுக்குப் பின்னாலும் ஏகப்பட்ட ஊழல் கதைகள் இருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும்.  அது தெரிந்தும் ஏன் விருது பற்றி இத்தனை கவலைப்படுகிறீர்கள்? இது என்னிடம் பலரும் முன்வைக்கும் கேள்வி.  என்னுடைய எளிமையான பதில்:  நான் ஒரு சர்வதேச எழுத்தாளன்.  என் எழுத்து தமிழ் மண்ணுக்கு மட்டுமே உரித்தானது அல்ல.  எல்லா எழுத்தாளர்களுமே சர்வதேச அளவில் வாசிக்கப்பட வேண்டியவர்கள்தான்.  மற்ற மொழி எழுத்தாளர்களுக்கெல்லாம் அது வாய்த்திருக்கிறது.  தமிழ் எழுத்தாளனுக்கு மட்டும் ஏன் அது நடப்பதில்லை? ஒரு ஹாருகி … Read more

One Man Army – 1

இந்த ஆர்மரி ஸ்கொயர் விவகாரத்தில் நான் ஒன் மேன் ஆர்மியைப் போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.  இப்படிச் சொல்வதன் மூலம் இந்த விஷயத்தில் என் தோளோடு தோள் நின்று எனக்கு ஆதரவு அளிப்பவர்களை நான் அவமதிப்பதாக அவர்கள் நினைத்து விடக் கூடாது.  நான் இப்படி ஒன் மேன் ஆர்மி என்று சொல்வதன் காரணம், ஆர்மரி ஸ்கொயர் செய்த அவமானகரமான காரியம் பற்றி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தவிர வேறு எந்த ஆங்கில ஊடகத்திலும் செய்தி வரவில்லை.  நடந்திருக்கும் விஷயங்கள் … Read more

ஏன் இலக்கியம்?

தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்வித் துறை,பொது நூலக இயக்ககம் மற்றும் சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு இணைந்து நடத்திய உலக புத்தக தின விழா – 2023 அன்று அடியேன் ஆற்றிய உரையின் காணொலி: நன்றி: கபிலன், ஷ்ருதி டிவி

இன்று மூன்றரை மணிக்கு…

இன்று அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலகத்தில் மூன்றரை மணிக்கு உரையாற்றுகிறேன். ஐந்து மணிக்கு எஸ்.ரா. பேசுவதால் சரியாக மூன்றே முக்காலுக்கு ஆரம்பித்து விடுவார்கள் என்று நினைக்கிறேன். நல்ல முறையில் உரையாற்றும் எழுத்தாளர் பட்டியலில் என் பெயரை யாரும் சேர்ப்பதில்லை. நாற்பது ஆண்டுகள் கழித்துத்தான் என்னை எழுத்தாளர் பட்டியலிலேயே சேர்த்திருக்கிறார்கள். கொரோனா காலத்தில் சுமார் எட்டு முறை நான்கு மணி நேரம் தொடர்ந்து உரையாற்றியிருக்கிறேன். காலை ஆறு மணிக்குத் தொடங்குவேன். இடையில் தண்ணீர் கூட அருந்தாமல் … Read more

உலகப் புத்தக தின விழா

வரும் ஞாயிறு அன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் மாலை 3.45 மணிக்கு மூன்றாம் உலக நாடுகளும் இலக்கியமும் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன். காலை பத்து மணியிலிருந்தே விழா தொடங்குகிறது. அழைப்பிதழை இணைத்திருக்கிறேன். தவறாமல் வரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். என்னை உரையாற்ற அழைத்தபோது நான் கொஞ்சம் தயங்கினேன். ஏனென்றால், எழுத்தாளர்கள் பேச்சாளர்களாக மாற வேண்டும் என்று ஒரு விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் எனக்கு ஒரு சிறிதும் உடன்பாடு இல்லை. சார்ல்ஸ் … Read more