சொல்லும் செயலும்…

நான் உங்களுக்குத் தருவது என்ன? சொல். அது தவிர வேறில்லை. அதற்கு நீங்கள் எனக்குத் தர வேண்டியது என்ன? முடிந்தால் தட்சணை. முடியாவிட்டால் அந்த சொல்லை வாசிப்பது. அந்த சொல்லை உங்கள் வாழ்வில் பின்பற்றுவது. நீங்கள் செய்யக் கூடாதது என்ன? திரும்பவும் பதிலுக்கு எனக்கு சொல்லைத் தருவது. சொல்லுக்கு சொல்லைப் போன்ற ஒரு தீய செயல் வேறேதும் இல்லை. ஆனால் என்னைச் சுற்றியிருக்கும் சிலர் எனக்கு சொல்லையே திரும்பத் தருகிறார்கள். அதில் முக்கியமான ஒரு சொல், நன்றி. … Read more

பெட்டியோ முதல் விற்பனை

பெட்டியோ நாவலின் இருபத்திரண்டாவது பிரதியும் எழுபதாவது பிரதியும் விற்று விட்டன. ஒவ்வொன்றும் பத்தாயிரம் ரூபாய். இப்போது என்.எஃப்.டி.யில் விற்பனைக்கு வைத்திருக்கும் பத்தாயிரம் ரூபாய் பிரதிகளின் எண்கள்: 29 மற்றும் 18. இதை முன்பதிவு செய்த நண்பர்கள் உடனடியாக வாங்கி விடும்படி கேட்டுக் கொள்கிறேன். மற்ற பிரதிகள் தேவையென்றால் எனக்கு உடனடியாக எழுதுங்கள். விற்பனைக்கு வைக்கிறேன். ஒவ்வொரு பிரதியையும் விற்பனைக்கு வைக்கும்போது நான் என்.எஃப்.டி.யில் பணம் செலுத்த வேண்டும். இது தவிர முதல் பிரதி (இரண்டு லட்சம் ரூபாய்), … Read more

சொல்கடிகை – 3 எந்த ஊர்? என்ன வேலை?

”சாரு, நான் போலீஸில் சேரவா?  சிவிலில் சேரவா?” என் வளர்ப்பு மகனைப் போன்ற ஒரு நண்பன்      பத்தாண்டுகளுக்கு முன்பு என்னிடம் கேட்ட கேள்வி இது.  பார்ப்பதற்கு முதலாண்டு படிக்கும் கல்லூரி மாணவனைப் போல் இருப்பான்.  ”டேய் தம்பி, நீ போலீஸில் சேர வேண்டாம், அப்புறம் போற வாற கான்ஸ்டபிளெல்லாம் நீ டெபுடி கமிஷனர் என்று தெரியாமல் டேய் தம்பின்னு கூப்பிட்ருவாங்க, உனக்குக் கஷ்டமா இருக்கும், அதனால் சிவிலிலேயே சேர்” என்றேன்.  அதற்கு அந்தத் தம்பி, “ஆமாம் சாரு, … Read more

சொல்கடிகை – 2 ஸ்காட்ச் & சோடா சட்டை

ஏன் நீங்கள் ஒரு அசோகமித்திரன் மாதிரி, லா.ச.ரா. மாதிரி சாத்வீகமான நபராக வாழ மறுக்கிறீர்கள்?  ஏன் இப்படி eccentric-ஆக, எல்லாவற்றையும் எதிர்த்துக் கொண்டே வாழ வேண்டும்?  -இந்தக் கேள்வி அடிக்கடி என்னிடம் கேட்கப்படுவதுண்டு.  நானும் யோசித்துப் பார்ப்பேன்.  அசோகமித்திரன், லா.ச.ரா. மட்டும் அல்ல, ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன், சி.சு. செல்லப்பா, கரிச்சான் குஞ்சு, தி. ஜானகிராமன் போன்ற பலரும் சமூகத்தோடு ஒட்டித்தானே வாழ்ந்தார்கள்?  விதிவிலக்காக பாரதியையும் புதுமைப்பித்தனையும் மட்டுமே சொல்லலாம். ஆனால் என்னுடைய வாழ்க்கையும் எழுத்தும் … Read more

குவாட்டர் ஓல்ட் மாங்க் – 2

எழுதி முடித்த பிறகு பெருமாளிடமிருந்து ஃபோன் வந்தது. கதைக்கு சரியான முடிவு இல்லையே என்று யோசித்துக் கொண்டிருந்தானாம் பெருமாள். அந்த முடிவைக் கொடுத்தாளாம் வைதேகி. மடிப்பாக்கத்திலிருந்து திரும்பியவள் பெருமாளிடம் “வெளீல போயிருந்தியோ?” என்று திருடனை கையும் களவுமாகப் பிடித்த போலீஸ்காரன் கேட்பதைப் போல் கேட்டாள். “ஏன், அதுக்குள்ள வத்தி வச்சிட்டாங்களா?” பெருமாள் சற்று ஆக்ரோஷமாகக் கேட்டான். (கீழே பணியில் இருக்கும் செக்யூரிட்டிகளின் பிரதான வேலை அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள குடும்பங்களில் இருப்பவர்களிடையே வத்தி வைப்பதுதான்). பெருமாள் … Read more