Oxford Bookstore – அட்டைப்பட விருது
Conversations with Aurangzeb நாவலின் அட்டைப்படத்திற்கு Oxford Bookstore வழங்கும் சிறந்த அட்டைப்படத்திற்கான விருது கிடைத்துள்ளது.
Conversations with Aurangzeb நாவலின் அட்டைப்படத்திற்கு Oxford Bookstore வழங்கும் சிறந்த அட்டைப்படத்திற்கான விருது கிடைத்துள்ளது.
வழக்கமாக நான் செல்லும் பெங்களூர் ரயில் சென்ற முறை சிறிய பெட்டி சிறிய பெட்டியில் பொருட்களைத் திணீப்பது சிரமமாக இருந்தது இந்த முறை பெரிய பெட்டி பெரிய பெட்டியை தலைக்கு மேலிருந்த கட்டையில் வைக்க சிரமமாக இருந்தது அருகில் நின்ற ஒருவர் நான் வைக்கவா என ஆங்கிலத்தில் கேட்டார் அவரைப் பார்த்தேன் ஒடிசலான தேகம் நவநாகரீகத் தோற்றம் நாற்பதிலிருந்து ஐம்பதோ அதற்கு ஒன்றிரண்டு கூடுதலாகவோ இருக்கலாம் வேண்டாம், ஒரு கை கொடுத்தால் போதுமென் றேன் கொடுத்தார் சுலபமாக … Read more
ஒரு பெண் என்னை அவமதித்தாள் அதை என்னிடம் நீ சொன்னாய் புகாரொன்றுமில்லை ஆனால் அதைச் சொன்னபோது நீ சிரித்தாய் அதனால்தான் காயமுற்றேன் பிறகு எல்லாம் மறந்தும் போனேன் ஆனால் அன்று மாலை என் கைகால்கள் நடுங்கத் தொடங்கின நா உலர்ந்து போனது கண்களிலிருந்து கொட்டிய நீரை அடக்கவும் திறனற்றேன் செய்து முடிக்கக் காத்துக் கிடந்த பணிகள் ஏராளம் எதுவும் நடக்கவில்லை அசைவற்றுக் கிடந்தேன் உன்னைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினேன் வார்த்தை எழவில்லை ஆனால் உன் குரல் கொஞ்சம் … Read more
எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் நாவல் குறித்து அரவிந்த் வடசேரி எழுதிய கட்டுரை ஆவநாழி இதழில் வெளியாகியுள்ளது.
இதுவரை இப்படி நின்றதில்லை எப்போதும் என் உடலை பொய்மேகங்களால் மறைத்துக்கொண்டே இருந்திருக்கிறேன் சமயங்களில் மேகம் கலைந்து என் மேனியின் சில துளிகள் தெரிந்ததுண்டு அதைக் கண்டு பரிகசித்தோர், அவமதித்தோர் பலருண்டு இப்போது மோகினிக்குட்டீ உன் முன்னே மேகம் கலைத்து நிர்வாணம் கொண்டு நிற்கின்றேன் ஏன் இதுவரை பொய்மேகம் அணிந்தாய் என்கிறாய் தெரியவில்லையே தாயே யோசி யோசி யோசி ’என் நிர்வாணம் கண்டு அவர்கள் பார்வை பறிபோகுமென்று அஞ்சினேன்.’ ’அப்புறம் என்னிடம் மட்டும் ஏன் மேகம் கலைத்தாய்?’ ‘நீயும் … Read more
மனைவியின் குடும்ப சுபவிழா ஒன்றிற்கு அவனும் சென்றிருந்தான் செங்குத்தான படிக்கட்டுகளில் ஏறி எல்லோரும் முதல் மாடியிலிருந்த மண்டபத்துக்குச் செல்வதைக் கண்டான் மத்திம வயதுக்காரர்களால்கூட இளைஞர் துணையின்றி ஏற முடியவில்லை எழுபத்து மூன்று வயதான அவனால் அந்தப் படிக்கட்டுகளில் லகுவாகவே ஏற முடிந்தது ஆண்களில் பலர் நெற்றியில் குலச்சின்னம் தரித்து மெல்லிய வேட்டியணிந்து அதனொரு பாகத்தை இடுப்பில் செருகியிருந்தார்கள் மேலே சட்டையில்லை இதைத்தான் அக்காலத்து ஐரோப்பியர் அரைநிர்வாணப் பக்கிரிகளென்றார்கள் போலும் இந்த வெய்யிலுக்கு இதுதான் உகந்த உடை தடையேதுமில்லை … Read more