ஒரு வேண்டுகோள்
நேற்றும் முந்தாநாளுமாகச் சேர்ந்து ஒரு பதினைந்து மணி நேரம் எழுதினேன். நாலைந்து அத்தியாயங்களை முடித்து விடலாம் என்று திட்டம். பார்த்தால் ஒரே ஒரு அத்தியாயம்தான் முடிந்தது. அதுவும் இரண்டாயிரம் வார்த்தைகள் கூட வரவில்லை. நாவல் அத்தனை இறுக்கமாக இருக்கிறது. தினமும் நான்கு மணி நேரம்தான் உறங்குகிறேன். ஆனால் காலை நடைப்பயிற்சியை மட்டும் விடுவதில்லை. என்னுடைய பதினேழாவது வயதிலிருந்து முப்பது வயது வரை தினமும் பத்திலிருந்து பதினைந்து கிலோமீட்டர் ஓடும் பழக்கம் இருந்தது. நாகூரிலும் தில்லியிலும் அதற்கேற்ற பெரிய … Read more