பாக்கெட் வஜைனா (பல புதிய பத்திகள் சேர்க்கப்பட்டது)

(முன்குறிப்பு: இன்று பேய் பிடித்தது போல் காலையிலிருந்து இரண்டு நீண்ட கவிதைகளை எழுதினேன். ஒன்று, அராத்துவின் கவிதையைப் படிப்பதற்கு சற்று முன்னால் எழுதியது. சொல்லி வைத்து செய்தது போல் இருந்தது. இரண்டாவது ஒரு அதிசயம். ரிஷி ஃபேஸ்புக்கில் எழுதியிருந்ததைப் படித்து பின்வரும் கவிதையை எழுதினேன். மூன்றிலிருந்து நான்கு மணி நேரம் ஆனது. இந்தக் கவிதையை போஸ்ட் பண்ணப் போகும்போது ரிஷி எனக்கு ஒரு கடிதம் எழுதி விடை பெறுவதைப் பார்த்தேன். விடை பெற இயலாது. இதோ இந்தக் கவிதையே ரிஷிக்கு எழுதியதுதான். ஏதோ அவர் கடிதத்தைப் படித்து விட்டு எழுதியது போல் உள்ளது, அதிசயம்தான். ரிஷியின் ஃபேஸ்புக் கடிதத்தை இறுதியில் தருகிறேன்.)

ரிஷி
நீ எழுதியதைப் படித்தேன்
காலை ஐந்து மணிக்கு எழுந்து
தேகம் தீயாய் எரிய
ஓல்ட் மாங்க் ரம்மை எடுத்து உள்ளே தள்ளுகிறாய்
இதுவரை நீ இப்படி
காலையில் குடித்ததில்லை
கஃபே பக்கம் வருகிறாய்
சுற்றிலும் அழகிகள்
உனக்கு ஒரு காதலியில்லை
தனிமை உன்னை உறுத்துகிறது

ரிஷி
அந்தத் தனிமை
உனக்கான ஆசீர்வாதமெனப்
புரிந்து கொள்
காதல் உன்னைக் கொன்று விடும்
தற்கொலை உணர்வு தலைதூக்கும்
ரெண்டு நாள் பேச மாட்டாள்
மூன்றாம் நாள் ஒரு ஹாய் சொல்வாள்
நாம்தான் கேணப்புண்டைகள் ஆயிற்றா
ஓ, ஃப்ரீயாகி விட்டாள் என்று
ஃபோன் செய்வாய்
ஆர்வக்கோளாறில்
என்ன ஆச்சு என்பாய்
அவளும்
என்ன ஆச்சு என்று திருப்புவாள்
ஏய், ரெண்டு நாளா எங்கேடீ
ஆளையே காணோம்
என்பாய்
ரெண்டு நாள்தானே, என்னமோ
ரெண்டு வருஷம் ஆன மாதிரி
பண்றே?
ரிஷி, நீ ரொம்ப overwhelmingஆ இருக்கேடா
என்பாள்
செருப்பால் அடி வாங்கியது போல் இருக்குமா
ஆனால் நாம் மலர்மாலை விழுந்ததுபோல்
நடிக்க வேண்டும்
இத்தனைக்கும் அந்தப் பெண்
தயை கருணை அன்பு பாசம் எல்லாம்
கொண்டவளாயிருந்தால் இப்படி
சாதா பெண்ணாக இருந்தால்
டேய் போடா, உன் காதல் ரொம்ப
Suffocatingஆ இருக்கு என்பாள்
நிஜமாகவே செருப்படி வாங்கியது போல்
இருக்கும்

திடீரென்று
ப்ளூ டிக்கை மறைப்பாள்
என்னவென்று கேட்டால்
என் அந்தரங்கத்தின் மீதான
கொடூரமான அத்துமீறல் என்பாள்
நீ ஒரு பைத்தியத்தைப் போல் குழம்பி விடுவாய் நீயும் அவளும் தனியாயிருந்தால் இருவருமே நிர்வாணம் குளியலும்சேர்ந்தேதான் அது மட்டுமல்ல உனக்கொரு கஷ்டமென்றால் உயிரையும் தருவாள்
நீயும் அப்படியே அப்படிப்பட்டவள் ப்ளூ டிக்கை மறைக்கிறாள் காரணம் கேட்டால் மறுக்கிறாள் அப்போதுதான் நீ சரீரத்தை விட ஆன்ம சங்கமத்தைவிட ப்ளூ டிக் ஒரு புனிதப் புண்டையென்று நம்பத் தொடங்க வேண்டும் இம்மாதிரி மோடுமுட்டித்தனமெல்லாம் ஒன்றுமேயில்லையென கடக்க வேண்டும் சுருங்கச் சொன்னால் நீ ஒரு எருமையாக மாற வேண்டும்

இதெல்லாம் சும்மா ஜுஜுபி
மாதத்தில் ஐந்து நாட்கள்
நீ
பசித்த பெண்புலியையோ
ஓநாயையோ
நேரில் காணலாம்

அப்புறம் இருக்கிறது
டிப்ரஷன்
ரிஷி
அந்தக் கொடுமையை
வார்த்தைகளில் சொல்லவியலாது
மரத்துண்டினால் உன் வயிற்றைக் கிழித்து
அறுத்துக் கொல்வது எப்படியோ
அதுதான் டிப்ரஷன்
அப்படித்தான் அவள் இருப்பாள்
உன்னையும் அப்படியே ஆக்கி விடுவாள்

வேண்டாம் இந்த விஷப் பரீட்சை ரிஷி
காதலின் பக்கம் செல்லாதே
நானெழுதும் காதல் கவிதைகளை
நீ ஒழுங்காகப் படித்தாலே போதுமே
ஜென்மத்துக்கும் அதன் பக்கம்
தலை வைத்துப் படுக்காமல் இருக்கலாமே
நீ என்ன கண்ணாடி அணிந்து படிக்கிறாய்
என் கவிதைகளை?

ஒரே ஒரு தற்காலக் காதலைச் சொல்கிறேன், கேள்!
ஐந்தாண்டுகளுக்கு முன்
என் வயது அறுபத்தெட்டு
அவள் வயது இருபத்திரண்டு
அவளுக்கு இரண்டு பாய்ஃப்ரெண்ட்ஸ்
ஏற்கனவே எட்டு ப்ரேக் அப்
எப்போதிருந்து என்று கேட்டேன்
பதினாலு வயதிலிருந்து என்றாள்
இன்னொரு கேள்வி கேட்டு மொக்கை வாங்கியதை
ஜென்மத்துக்கும் மறக்க மாட்டேன்
ப்ரேக் அப் என்றால் உடலுறவும் உண்டா?
’பூமர்னு காமிச்சிட்டீங்ளே’ என்றாள்
பல மணி நேரம்
அவள் வீட்டில் தனித்திருந்திருக்கிறேன்
பச்சைக்கண்ணழகி என என் கதைகளில்
வரும் பேரழகி அவள்தான்
பனியின் நிறம்
சுருள் முடி
போதாததற்குப் பச்சைக் கண்

ஒருநாள் தாங்கமாட்டாமல்
என்னையும் மூணாவதா சேர்த்துக்கோ என்றேன்
நீங்கள் என் அப்பா மாதிரி என்றாள்
அப்போது அவளுக்கு வலி என்றதனால்
அவள் தொடைகளுக்கு
மஸாஜ் செய்து கொண்டிருந்தேன்
நிக்கர் அணிந்திருந்தாள்
மேலே போக முயன்ற போது
கையைத் தட்டி விட்டாள்
அதற்குப் பிறகு
நானும் சாதுவாக
தொடை மஸாஜைத் தொடர்ந்தேன்
வீட்டுக்குத் திரும்பியதும்
ப்ளூ பால்ஸில் துடித்துப் போனேனென
சொல்லவும் வேண்டுமா?

ரெண்டு வருஷம் இப்படியே
அப்பா மகள் விளையாட்டு ஓடியது
பிறகுதான் தெரிந்தது என்னை அவள்
பாய் பெஸ்ட்டியாக வைத்திருக்கிறாள் என்று

ங்கொய்யால என விலகி விட்டேன்
என் நல்லதிர்ஷ்டம் அவளென்னை
மீட்டூவில் போடவில்லை
போட்டிருந்தாலும் தேவலையென்று
தோன்றுகிறது
அபூர்வத்திலும் அபூர்வமான அழகி அல்லவா?

நீ சைத்ரிகன் ரிஷி
காதலி உன்னைக் கொன்று விடுவாள்
ஒவ்வொருத்தியும் ஒவ்வொரு மாதிரி
வதை செய்வாள்கள்

என் பழைய காதலி ஒருத்தி
செய்த காரியம் சொல்கிறேன் கேள்
தண்ணியடித்திருக்கும்போது என்னோடு
விவாதம் செய்யாதே விமர்சிக்காதே என
ஆயிரம் முறை சொல்லியிருக்கிறேன்
அப்போது வெளியூரில் தண்ணியடித்துக்கொண்டிருந்தேன்
தனியாக
அறையில்
ஒரு பஞ்சாயத்து தொடங்கியது
அவள் கத்த
நான் கத்த
கடைசியில் என் கண்ணாடியைத் தூக்கியடித்தேன்
ஒன்றரை லட்ச ரூபாய் கண்ணாடி போனது கூட இழப்பு அல்ல
இரண்டு நாட்கள் நீடித்தது நெஞ்சு வலி
செத்திருக்கவும் வாய்ப்பு உண்டு

இதெல்லாம் தேவையா ரிஷி உனக்கு?
விட்டு விடு
என் நண்பனென்ற முறையில்
ஒரு ஆலோசனை
நான் அடிக்கடி ஜப்பான் செல்பவன்
அங்கே நூறு விதமான பாக்கெட் வஜைனாக்கள்
உண்டு
அதில் ஒரு டஜன் வாங்கி வருகிறேன்
உனக்கு
வேறெந்தக் காதலிப் புண்டையும் தேவையில்லை

ரிஷியின் கடிதம்

டியர் சாரு

நீங்கள் எழுதும் கவிதைகளை ஒன்று விடாமல் படித்துக் கொண்டிருக்கிறேன். தினசரி பத்து தடவையாவது ஃபேஸ்புக் திறந்து பார்க்கிறேன் — புது கவிதை ஏதும் எழுதியிருக்கிறீர்களா என்று. ஃபேஸ்புக் வருவது உங்கள் கவிதைகளை படிக்கத்தான். எங்கோ மிச்சமிருக்கும் காதலைப் படித்தேன். கொஞ்ச நாளைக்கு உங்கள் கவிதைகளை வாசிக்காமல் இருக்கலாம் என்று நினைத்தேன். ஏற்கனவே பித்துநிலையிலே மனமும் உடலும் பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது.. ஒரு காதலி இருந்தால் இந்த உக்கிரத்தை சமன் செய்யலாம். தினமும் மூன்று தடவை சுயமெய்துனம் செய்து கொண்டு மூச்சு முட்டக் குடித்துக் கொண்டு இந்த வாழ்க்கையை வாழ்வதற்கு தகுதியானதா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். என்னைப் பொருத்தவரையில், காதல் எல்லாம் இந்த காலத்து பெண்களிடம் எதிர்பார்க்க முடியாது. எல்லாம் நடித்துக் கொண்டு ஏமாற்றிக்கொண்டு திரியும் ஜீவ ராசிகள். விதி விளக்குகள் உண்டு. எங்கே என்று தான் தெரியவில்லை. இதில் Van Gogh போல மூர்க்கமாக காதலிக்கும் மனம் கொண்ட நான் எங்கே போவது? அதனால்தான் தினமும் குடிக்கிறேன். விரக்தியில் நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறேன். எங்கோ மிச்சமிருக்கும் காதலின் உக்கிரத்தை தாங்கும் அளவுக்கு என் மனதில் சக்தி இல்லை. கொஞ்ச நாள் கழித்து மீண்டும் வந்து வாசிக்கிறேன்.
அன்பு முத்தங்கள்.
காதலைப் பற்றி எழுத உங்களைவிட வேறு யாருக்கு தகுதி இருக்கிறது சொல்லுங்கள்?

ரிஷி