அப்பா,
கோபி கிருஷ்ணனின் கதைகளைப் படிக்கும் போது இந்தக் கேள்வி உதித்தது: கோபியின் பல கதைகள் ஒரு பதிவைப் போல உள்ளது. அதாவது கதை என்கிற வடிவில் இல்லை. நம் தமிழ்நாட்டில் வரலாறு என்பதையே இப்படி இலக்கிய வடிவில்தான் அறிகிறோம். பண்டைய தமிழ் நாகரீகம் எப்படி இருந்தது என்பதைச் சங்க இலக்கியங்களிலும் இதர இலக்கியக்கியங்களிலும்தான் பார்க்கிறோம். ஆனால் மேற்கு நாடுகளில் அப்படியில்லை. கலங்கரைவிளக்கம் ஒன்று ஒரு சிறிய கிராமத்தில் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம், அதை வடிவமைத்தவர், கட்டிய கொத்தனார் என்று அத்தனை தகவல்களும் அந்தக் கிராமவாசிகளுக்குத் தெரிந்திருக்கிறது. இப்போது ஐரோப்பிய ஓவியங்கள் குறித்தும் சிற்பங்கள் குறித்தும் வாசித்து வருகிறேன். ஒவ்வொரு ஓவியனுக்கும் பெரிய புத்தகங்கள், அவர்கள் வரைந்த ஓவியத்தை ஆய்வு செய்து பல புத்தகங்கள் இருக்கின்றன. நம்மூர் கோவில்களில் இருக்கும் சிற்பங்களைக் குறித்து எந்தத் தகவல்களும் நமக்குத் தெரிவதில்லை. சிற்பியின் பெயர்கூடத் தெரியவில்லை. அதை நம்மவர்கள் பெருமையாக வேறு பேசிக்கொள்கிறார்கள். இப்படி வரலாற்றைக் கதைகளாக அல்லது ஏதோ ஒரு கலைப்படைப்பாகச் செய்து வைப்பதில் உள்ள சாதக பாதகங்கள் என்ன?
இன்னொரு கேள்வி: பீடி கதையில் பீடி என்பது குறியீடு என்று வெளிப்படையாகவே கோபி சொல்லிவிட்டார். ஒரு கதையில் குறியீடு என்பது எப்படிப் பொருத்தப்படுகிறது? பல சமயங்களில் குறியீட்டு வகைச் சிறுகதைகள் புரிவதில்லை. பாமுக்கின் ‘My Name is Red’ நாவலில் சிவப்பு வண்ணம் ஒரு குறியீடாக வருவதாக ஜி.குப்புசாமி ஒருமுறை சொன்னார். குறியீடுகள் என்பதைப் பொதுவாக விளக்கிச் சொல்ல முடியுமா? குறியீடுகளைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றால் கதை வேறொன்றாக மாறிவிட வாய்பிருக்கிறதுதானே?
இன்னும் ஒரேயொரு கேள்வி: பல கதைகளில் கோபி தன்னையே கேலி செய்து கொள்கிறார். ‘மானிட வாழ்வு தரும் ஆனந்தம்’ ‘மிகவும் பச்சையான வாழ்க்கை’ போன்ற கதைகளை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். இப்படிச் சுயபகடி செய்துகொள்ளும் எழுத்தை உங்களிடம்தான் முதலில் படித்தேன். இந்தச் சுயபகடி எழுத்தில் நீங்கள் இருவரும் எங்கிருந்து கற்றுக்கொண்டீர்கள்?
வளன்
வளனின் கேள்விகளுக்கு என் உரையில் பதில் சொல்வேன். நீங்களும் கேள்விகள் இருந்தால் அனுப்பலாம். இரண்டு நண்பர்கள் ஏற்கனவே அனுப்பினார்கள். அந்தக் கேள்விகளைத் திரும்ப அனுப்பி வைத்தால் நலம்.
இதுவரையிலான உரைகள் – சி.சு. செல்லப்பா, நகுலன், க.நா.சு. – உங்களுக்குத் தேவையென்றால் எனக்கு எழுதுங்கள். நீங்களே நிர்ணயிக்கும் ஒரு சிறிய கட்டணத்தையும் அனுப்புங்கள். சந்தா/நன்கொடை அனுப்பும் நண்பர்கள் தனியாக அனுப்ப வேண்டாம். வெறுமனே கேட்டு எழுதினால் போதும். இனிமேல் நானே ஒரு பட்டியல் போட்டு வைத்துக் கொண்டு அனுப்பலாம் என்று பார்க்கிறேன். பலரும் கூச்சப்பட்டுக் கொண்டோ என்னவோ எனக்குக் கேட்டு எழுதுவதில்லை. நானாகக் கேட்டுக் கேட்டுத்தான் அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறேன்.
என்னைப் பற்றிய அராத்துவின் பதிவைப் படித்தேன். பேசாமல் அவர் என்னை வைத்து ஒரு நாவலே எழுதி விடலாம் போல் இருக்கிறது. நான் ஒரு சுவாரசியமான மனிதனாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால் அவர் எழுதும்போது படு சுவாரசியமான மனிதனாக மாறி விடுகிறேன். ஐந்து மாதங்களுக்குப் பிறகு முகப்பசை உபயோகிக்க ஆரம்பித்து விட்டேன். தமிழ்நாட்டில் தன் முகம் பற்றிக் கவலைப்படும் இரண்டே ஆண்கள் கமலும் நானும்தான். அவர் கவலைப்படலாம். நான் கவலைப்படுவது அராஜகம். என்ன செய்வது? படைப்பு அப்படி.
***
மாதாந்திர சந்திப்புகளுக்கு எவ்வளவு பணம் அனுப்பலாம் என்று சில நண்பர்கள் கேட்டிருந்தனர். இது நன்கொடைதான். நன்கொடை எவ்வளவு கொடுக்கலாம் என்பதைப் பெறுபவர் சொல்ல இயலாது. இருந்தாலும் சில நண்பர்கள் கேட்பதால் சொல்கிறேன். இந்தியக் காசுக்கு குறைந்த பட்சம் 300 ரூ. இருக்கலாம். அமெரிக்கக் காசுக்குக் குறைந்த பட்சம் பத்து டாலர். நன்கொடை என்பதால் இது குறைந்த பட்சம். அதிக பட்சம் என்பது அவரவர் பிரியம்.
PayPal மூலம் பணம் அனுப்ப என் மின்னஞ்சல் முகவரி மட்டும் போதும். charu.nivedita.india@gmail.com
Xoom.com மூலம் பணம் அனுப்ப என் முகவரி தேவை எனில் எனக்கு எழுதுங்கள். அனுப்புகிறேன். charu.nivedita.india@gmail.com
***
www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. சினிமா, இசை, அரசியல், இலக்கியம் போன்ற தலைப்புகளில் இதில் இத்தனை ஆண்டுகளாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன். இந்த இணையதளத்தை ஒரு மாதத்தில் 60000 பேர் வாசிக்கிறார்கள். தமிழில் எழுத்தாளர்கள் இணையத்தில் எழுத ஆரம்பிப்பதற்கு வெகுகாலம் முன்னரே ஆரம்பிக்கப்பட்ட பழைய இணைய தளம் இது. அப்போது விகடன், தினமலர் போன்ற பத்திரிகைகளின் இணைய தளங்கள்தான் இருந்தன. இப்போது இந்த இணையதளத்தைக் கட்டணம் செலுத்திப் படிக்கும் தளமாக மாற்றலாமா என யோசித்தேன். அறுபது ஆயிரத்தில் ஆறு பேர் கூட எஞ்ச மாட்டார்கள். முன்பே அதைப் பரிசோதித்துத் தோற்றிருக்கிறேன். எனவே மீண்டும் அந்தச் சோதனையில் ஈடுபட மாட்டேன். ஆக, இப்போது என் வேண்டுகோள் என்னவெனில், இதை வாசிக்கும் அன்பர்களில் விருப்பமுள்ளவர்கள் தாமாகவே முன்வந்து கட்டணம் செலுத்தலாம். விருப்பம் இல்லாதவர்கள் கட்டணம் செலுத்தாமலும் படிக்கலாம். அவரவர் விருப்பம். பணம் எப்போதும் என் சிந்தனையில் இருந்ததில்லை. இனிமேலும் இருக்காது. பணம் பற்றி யோசிக்காமல் இருக்கக் கூடிய சூழல் இருந்தது. யோசிக்காமல் இருந்தேன். இப்போது நிலைமை மாறி விட்டதால் பணத்துக்கான ஒரு சிறிய ஏற்பாடு இது. எவ்வளவு கட்டணம் என்பதும் அவரவர் விருப்பம். மாதாமாதம் அனுப்ப முடியாவிட்டால் மூன்று மாதத்துக்கான தொகையை அனுப்பலாம். கட்டணம் செலுத்தவில்லையே, படிக்கலாமா கூடாதா என்ற அறம் சம்பந்தமான கேள்விக்குள் நுழைந்து விடாதீர்கள். அது 60000 என்ற வாசகர் எண்ணிக்கையைக் குறைத்து விடும். முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஓரிரு நண்பர்கள் paypal மற்றும் google pay மூலம் பணம் அனுப்பலாமா என்று கேட்டார்கள். நான் paypal-இல் இருக்கிறேன். Paypal மூலம் அனுப்ப முடியாவிட்டால் Xoom.com மூலமும் அனுப்பலாம். பேபாலின் கிளை நிறுவனம்தான் அது. கூகிள்பே மூலம் அனுப்ப என் தொலைபேசி எண் வேண்டும் என்று நினைக்கிறேன். மின்னஞ்சல் செய்தால் தொலைபேசி எண் தருகிறேன். பொதுவில் போட இயலாது. தொலைபேசி எண் இல்லாமலும் கூகுள்பே மூலம் அனுப்பலாம். அதற்குத் தேவையான என் UPI ID:
charu.nivedita.india@okaxis
இந்த ஒரு விபரம் இருந்தாலே கூகுள்பே மூலம் பணம் அனுப்பி விடலாம். தொலைபேசி எண்ணும் தேவையெனில் எழுதுங்கள்:
charu.nivedita.india@gmail.com
கட்டணம் செலுத்துவதற்கான வங்கிக் கணக்கு விவரம்:
UPI ID: charunivedita@axisbank
பெயர்: K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006
ஒரு நண்பர் பெயரில் உள்ள K என்பதன் விரிவு என்ன என்று கேட்டிருந்தார். அவர் வங்கியில் கேட்கிறார்களாம். Krishnasamy. என் தந்தையின் பெயர். ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:
K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH chennai