பூச்சி 121: டாண்டெக்ஸ் ஜட்டியும் கோடீஸ்வர நண்பனும்

என் வாழ்நாளில் ஒரு இரண்டு வருட காலம் பணப் பிரச்சினை என்றால் என்னவென்றே தெரியாமல் இருந்தேன்.  பணத்தைப் பற்றி யோசிக்கவே இல்லை.  காரணம், ஒரு நண்பர்.  கற்பனைப் பெயராக வினோத் என்று வைப்போம்.  அடா பொடா நண்பர்.  அவரைப் பொறுத்தவரை டேய் சாரு என்பதுதான் என் பெயரே.  என் மீது பேரன்பு கொண்டவர்.  வேலைப் பளு காரணமாக நான் ஒரு மாதம் அவரை அழைக்காவிட்டாலும் அவரே அழைப்பார்.  அப்படி அவர் வாழ்வில் அவராக அழைக்கும் ஒரே ஆள் நான்தான்.  டேய் சாரு என்ற பெயர் சமயங்களில் அன்பு மிகுதியினால் டேய் ஒல்க்ட்டா புண்டெ என்று மாறிவிடும்.  வர்ணனை போதும்.  பெரிய கோடீஸ்வரர்.  சில ஆண்டுகளுக்கு முன் என்னை அழைத்து, இனிமே நீ பணத்தைப் பத்தி யோசிக்காம எழுதிக்கிட்டே இருக்கணும்னா மாசம் எவ்ள்டா பணம் வேணும் என்றார்.  அம்பதாயிரம் என்றேன்.  கடவுளே வந்து கேட்டிருந்தாலும் அந்தத் தொகையைத்தான் சொல்லியிருப்பேன்.  நீங்கள் நம்ப மாட்டீர்கள்.  அராத்துவுக்குத் தெரியும்.  என் படைப்பு அப்படி. 

சரி, இனி ஒவ்வொரு முதல் தேதியும் உனக்கு நாப்பத்தஞ்சு வந்துரும்.  நிம்மதியா இரு. 

அது ஏன் அஞ்சு கொறைய்து. 

டேய், ஒல்ட்டா புண்டெ. லக்ஷ்மிய மதிக்கணும்.  நீங்க இந்த எழுத்தாளப் புடுங்கிங்கள்ளாம் லக்ஷ்மிய மதிக்றதில்ல.  அவளும் ஒங்கள மதிக்கிறதில்ல.  அவ்ளோதான் விஷயம். 

இதற்கும் அந்த அஞ்சு குறைந்ததுக்கும் என்ன சம்பந்தம்?  ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கத்தான் வேண்டும்.  ரொம்பக் கீழ் நிலையிலிருந்து கோடீஸ்வரர் ஆனவர் என்பதால் இந்த லக்ஷ்மி விஷயத்தில் அவர் நிபுணராகத்தான் இருக்க வேண்டும். 

ஆமா நீ ஜட்டி போட்ற ஹேபிட் இருக்குல்ல?

உடனேயே தலையைக் குனிந்து கீழே பார்த்து ஒன்றும் வித்தியாசமாகத் தெரியவில்லை என்பதைத் தெரிந்து கொண்டு கேட்டேன்.

பொதுவாக நான் ஜட்டி போடுவதில்லை என்றாலும் உன்னைப் பார்க்க வருவதால் போட்டேன்.  ஏன் என்ன விஷயம்?

என்ன ப்ராண்ட் ஜட்டி போட்றே?

Calvin Klein.

ஓ, என்ன விலை?

மூவாயிர்ருவா.

ஒரு டஜனா?

யோவ் லூசு.  ஒன்னு மூவாயிரம்.  ஆமா நீ என்ன ஜட்டி போட்றே?

டாண்டெக்ஸ். 

என்னா வெல?

நூர்ருவா.  இதுக்குத்தான் ஒன்னக் கேட்டதே.  இப்போ புரிஞ்சுக்கோ, ஏன் காசு ஒங்கிட்ட தங்க மாட்டேங்குதுன்னு.

பணப் பிரச்சினை ஒருவழியாக முடிவுக்கு வந்ததையும் மீறி அந்த டாண்டெக்ஸ் விவகாரம் என் மனதை ரொம்பவும் பாதித்து விட்டது என்றே சொல்ல வேண்டும்.  ஒருவித மன உளைச்சல்.  பேசி முடித்து விட்டுக் கிளம்பினேன்.   

சரி, போம்போது அக்கவுண்டண்டப் பாத்து செக்க வாங்கிட்டுப் போ.

என்னா செக்?

டேய்.  அந்த நாப்பத்தஞ்சுடா.

என்னது நாப்பத்தஞ்சா?  எப்ப கையெழுத்துப் போட்டே?

என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு நாம பேசிட்டு இருக்கும்போது ஒத்தர் வந்தார்ல,  அவர்தான் அக்கவ்ண்டண்ட்,  செக்குல ஸைன் வாங்கத்தான் வந்தாரு என்றார். 

ஓ சரி வர்றேன் என்று சொல்லி விட்டுக் கிளம்பினேன். 

டேய் ஒல்க்ட்டா புண்ட ஒரு நிமிஷம். ஒரு நன்றி கின்றி எதுவும் சொல்ல மாட்டியா?

அட நீ வேற.  நானே பெரிய மன உளைச்சல்ல இருக்கேன்.

இப்பத்தானடா மன உளைச்சலைப் போக்குனோம்.  அப்புறம் என்ன?

என்ன போக்கினே?  என் லைஃப்லயே நான் டாண்டெக்ஸ் ஜட்டி போட்ட ஆளோட பழகினதே இல்ல தெரியுமா?  அதுவும் டாண்டெக்ஸ் போட்ட கோடீஸ்வரன்.

சரி, கிளம்பு.  அடுத்த தடவ வர்ர போது என் தங்கச்சியையும் அழச்சுட்டு வா.  அவள்ட்ட பேசிக்கிறேன்.

(தங்கச்சி என்பது அவந்திகா.) 

அன்றைய தினத்திலிருந்து வாசகர்களிடம் பணம் கேட்பதை நிறுத்தி விட்டேன்.  குஷாலாக இருந்தது.  ஒருநாள் குஷால் மிகுந்து ஒன்றரை லட்ச ரூபாய்க்கு ஒரு கண்ணாடியும் வாங்கினேன்.  வாங்கினதோடு மூடிக் கொண்டு இருந்திருக்கலாம்.  குமுதத்திலும் எழுதி விட்டதால் ஊரே கரித்துக் கொட்டியது.  சிற்றுண்டி விடுதிக்குப் போனால் நமக்கு முன்பின் தெரியாதவர் கூட கை குலுக்கி “என்ன இருந்தாலும் ஒன்றரை லட்சத்துக்கு நீங்கள் கண்ணாடி வாங்கினது ரொம்பத் தப்பு” என்று தன் தார்மீகக் கோபத்தைச் சொல்ல ஆரம்பிப்பர்.  குடித்தால்தான் தப்பு.  குடிப்பதை நிறுத்தியாகி விட்டது.  என் காசை என் இஷ்டப்படி செலவு பண்ணினாலும் தப்பா என்று நினைத்துக் கொள்வேன்.   கண்ணாடி வாங்கினதைத் திட்டாத ஒரே ஜீவன் ஆச்சரியகரமாக அவந்திகாதான்.  ம்… ம்… நல்லா இரு என்று ஆசீர்வதித்தாள்.  அப்படியென்றால் எஞ்சாய் மவனே என்று பொருள். 

கோடீஸ்வர நண்பன் வினோதுக்கு இந்த உலகம் அழியும் வரை பணக் கஷ்டம் வர வாய்ப்பு இல்லை.  இந்த உலகம் அழியும் வரை அவர் தொழில் நசிவடையவும் வாய்ப்பு இல்லை.  அதனால் என் வாழ்க்கையின் லௌகீகம் ஸ்திரமாயிற்று. 

அப்போதுதான், ஊர் கண் பட்டதோ என்ன மண்ணாங்கட்டியோ தெரியவில்லை, மோடியின் பொருளாதாரக் கொள்கை வந்தது.  இதற்கும் மேலே விளக்கினால் வினோத் யார் என்று தெரிந்து விடும். தெரிந்தால் கவலையில்லை.  ஆனால் யாராவது அவரிடம் போய் சாரு உங்களைத் திட்டி எழுதியிருக்கிறார் என்று வத்தி வைப்பார்கள்.  அப்படி வத்தி வைத்தாலும் பிரச்சினை இல்லை.  அவர் அதைக் கண்டு கொள்ள மாட்டார்.  அவர் மனைவியிடமும் போய்ச் சொல்வார்கள்.  அவர் என்ன செய்வார் பாவம்.  நம் கணவருக்கு அவர் நண்பர்கள்தான் சத்ரு என்று நினைப்பார். (எல்லா மனைவிமார்களும் அப்படித்தானோ?) அதனால்தான் வினோதின் அடையாளம் வேண்டாம் என்கிறேன்.  இப்படியாக மோடிஜியின் புண்ணியத்தில் பண வரத்து நின்றது.  சுத்தமாக நின்று விட்டது.  அப்போதுதான் சந்தா நன்கொடை என்று எழுத ஆரம்பித்தேன்.

மூன்று மாதமாக வினோதுக்கு நான் போன் பண்ணவில்லை.  பிஸி.  போன மாதம் போன் வந்தது.  ஒல்க்ட்டா புண்ட.  நான் பண்ணலைன்னா நீ பண்ண மாட்டியா சுன்னி.  கொரோனா டெஸ்ட் பண்ணிட்டியா.

கொரோனா டெஸ்ட் எதற்காகப் பண்ண வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை.  பண்ணி நெகட்டிவ் வந்து மறுநாளே எவனாவது நமக்குத் தொற்றை வழங்கி விட்டான் என்றால் என்ன செய்வது?  நான் பேச்சை மாற்றினேன்.  ஆமா, நீ இன்னமும் அதே டாண்டெக்ஸ்தானா?

டேய் லூசுக் கூதி. ஒனக்கு எப்பவும் இதே யோசனைதானா? ஒன்ன செக்ஸ் ரைட்டர்னு சொல்றது கரெக்ட் தாண்டா.

***