விழா பதிவுகள் – 26

நிர்மல், முகநூலில்: புத்தக வெளியிட்டு விழாவில் நான் கவனித்த இன்னோரு விஷயம் கட்டித்தழுவல். மிக எளிதாகவும் இயல்பாகவும் கட்டித்தழுவிக் கொண்டோம் . ஒருவரை ஒருவர் பார்க்கும் பொழுது கட்டித்தழுவது எளிதான காரியமல்ல – மற்றவரின் உடல் மொழி புரிந்து அதற்கு ஏற்றவாறு நடக்க வேண்டியது முக்கியம். ஆனால் எல்லோரும் மிக எளிதாக கட்டித் தழுவியது ஒரு யூனிக்கான செயல் என்றே தோனுகிறது. நிர்மல் ஓவியர் ஸ்ரீனிவாசன். புகைப்படங்கள்: பிரபு காளிதாஸ்

விழா பதிவுகள் – 25

பூர்ண சந்திரன் முகநூலில்: கேசரி வடை போண்டா என இனிப்பாகவும் காரசாரமாகவும் ஆரம்பித்தது விழா. அரங்கம் நிறைந்த கூட்டம் மகிழ்ச்சியையும் உற்சாகத்தினையும் கொடுத்தது. இறையன்பு அவர்கள் அடுத்தடுத்த விழாக்கள் இருப்பதாக சற்று முன்னதாக வந்து வாழ்த்திவிட்டு போனார். புகைப்படங்கள்: பிரபு காளிதாஸ் சமஸ்,திருப்பூர் கிருஷ்ணன்,லெனின் சிறப்பாக பேசினர். மனுஷ், பல்கலைக்கழகங்களில் பாடநூலாக சிறந்த இலக்கிய புத்தகங்களை சேர்க்கவேண்டும் என்று குறிபிட்டதற்கு, சாரு இப்போதைக்கு நடக்காது, நீங்க கல்வி மந்திரி ஆகி இதச் செய்ய்யனும் என்றார். மேலும் சாருவின் … Read more

புத்தக வெளியீட்டு விழா

இப்போதெல்லாம் புத்தக வெளியீட்டு விழா என்றாலே அலர்ஜியாக இருக்கிறது.  ஆனால் நண்பர்களின் விழாக்கள் அப்படி அல்ல.  ஒத்த கருத்து உடையவர்களுக்குள் பிரச்சினை இல்லை.  வரும் சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு அமேதிஸ்ட் உணவகத்தில் உள்ள அரங்கில் கார்ல் மார்க்ஸின் இரண்டு புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன.  அ. மார்க்ஸ் பேசுகிறார்.  அடியேனும் பேசுகிறேன்.  அவசியம் வாருங்கள். அமேதிஸ்ட் என்று யாரிடம் கேட்டாலும் தெரியாது என்றே சொல்வார்கள்.  பூர்ஷ்வாக்கள் மட்டுமே செல்லும் இடம்.  நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்றால், ஒயிட்ஸ் ரோடு … Read more

விழா பதிவுகள் – 23

புகைப்படத்தில் டாக்டர் ஸ்ரீராம், நிர்மல், ஜெகா.  நின்று கொண்டிருப்பவர் சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த கருணாநிதி அர்ஜித். இரண்டாவது புகைப்படத்தில் ஆத்மார்த்தி, கணேச குமாரன்.  முதல் வரிசையில் உமா ஷக்தி. உமா சக்தி முகநூலில்: விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. எப்போதும் சாருவின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு அரங்கு நிறைந்த கூட்டம் இருக்கும். இன்றும் அப்படியே. கடல் கடந்தும் அவரைக் கொண்டாட நண்பர்கள் வந்ததைப் பார்த்து மகிழ்ச்சி.சாருவைப் பார்த்து வாழ்த்துச் சொல்லவும் புத்தக வெளியீடு முடிந்தவுடன் கிளம்பவும் முடிவு செய்திருந்தேன். … Read more

விழா பதிவுகள் – 22

வாசகர் வட்டத்தைச் சேர்ந்த மனாசே விழா பற்றி எழுதியிருந்தது இது.  மனாசேவுக்கு என் எழுத்து வெறும் எழுத்து மட்டும் அல்ல.  அவர் என் எழுத்தைப் படிக்காமல் இருந்திருந்தால் அவர் வாழ்க்கை வேறு விதமாகப் போயிருக்கும்.  அவர் வாழ்வின் போக்கை மாற்றியது என் எழுத்து என்று அடிக்கடி என்னிடம் சொல்லியிருக்கிறார்.  மனாசேவுக்கு தமிழ் சரியாக எழுத வரவில்லை.  நான் எதையும் திருத்தவில்லை.  அவர் எழுதியபடியே இங்கே பதிவேற்றியிருக்கிறேன்.  ஆனால் விழா பற்றிய பதிவுகளிலேயே ஆக முக்கியமானதாக இதைக் கருதுகிறேன். … Read more