கேசரி, போண்டா, காஃபி மற்றும் இலக்கியம்…

இப்போதெல்லாம் ராயர் கஃபே போவதில்லை.  கூட்டம்.  நெரிசல்.  முழுசாக வட இந்தியர்கள் அதை ஆக்ரமித்து விட்டனர்.  உட்கார்ந்து சாவகாசமாகப் பேசவும் முடியவில்லை.  இப்போதெல்லாம் நாரத கான சபாவுக்கு எதிரில் உள்ள பிள்ளையார் கோவிலை ஒட்டியுள்ள சந்தில் உள்ள சாயி மெஸ்ஸுக்குத்தான் போகிறேன்.  தினமும் அல்ல; எப்போதாவது.  தென்சென்னையிலேயே சுவையான டிஃபன் கிடைக்கும் இடம் என்றால் இப்போதைக்கு சாயி மெஸ்தான். ஃபெப்ருவரி 27 விழாவுக்கு வருபவர்களுக்குக் கொஞ்சம் காப்பி டீ கொடுக்க வேண்டாமா என்று கேட்டார் டாக்டர் ஸ்ரீராம். … Read more

கன்னி மாங்கா…

காலையில் நடைப்பயிற்சியை முடித்து விட்டு வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன்.  மணி ஒன்பதரை. அப்போது எடிட்டர் லெனினிடமிருந்து ஃபோன்.  நேற்றுதான் கொஞ்சம் குற்ற உணர்ச்சியோடு நினைத்தேன், இன்னும் லெனின் சாருக்கு அழைப்பிதழ் கொடுக்கவில்லையே என்று.  இன்று எப்படியும் கொடுத்து விட வேண்டும் என்றும் உறுதி எடுத்துக் கொண்டேன்.  வழக்கம் போல் மறந்து போனேன்.  பழுப்பு நிறப் பக்கங்களுக்காக ஆதவனைப் படித்துக் கொண்டிருப்பதும் ஒரு காரணம்.  உடனே ஆட்டோவை நிறுத்தி விட்டு, ”கிளம்பி நான் பார்க்குக்கு வரவா, அங்கே வந்து … Read more

எல்லாமே அப்நார்மல்

கடுமையான பத்திய உணவு.  நீங்கள் சேர்த்துக் கொள்ளும் உப்பில் கால் அளவுதான்.  தியானம்.  நடைப் பயிற்சி.  உடலுக்கு ஊறு விளைவிக்கும் எந்தப் பழக்கமும் இல்லை, ஒன்றே ஒன்றைத் தவிர.  ராப்பகலாகப் படிப்பு.  இன்று டாக்டர் சிவகடாட்சத்திடம் போனேன்.  சோதித்தார்.  எல்லாமே அப்நார்மல்.  சர்க்கரை அளவு கூடுதல்.  கொழுப்பு அளவு கூடுதல்.  ரத்த அழுத்தம் எவ்வளவு என்று சொன்னால் உங்கள் ரத்த அழுத்தம் கூடி விடும்.  மருந்துகளை அதிகப்படுத்திக் கொடுத்தார். எழுதுவதையும் படிப்பதையும் கொஞ்சம் குறைத்தால் ரத்த அழுத்தம் … Read more