ஏன் இலக்கியம்?

தமிழ்நாடு அரசு, பள்ளிக் கல்வித் துறை,பொது நூலக இயக்ககம் மற்றும் சென்னை மாவட்ட நூலக ஆணைக்குழு இணைந்து நடத்திய உலக புத்தக தின விழா – 2023 அன்று அடியேன் ஆற்றிய உரையின் காணொலி: நன்றி: கபிலன், ஷ்ருதி டிவி

உலகப் புத்தக தின விழா

வரும் ஞாயிறு அன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் மாலை 3.45 மணிக்கு மூன்றாம் உலக நாடுகளும் இலக்கியமும் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன். காலை பத்து மணியிலிருந்தே விழா தொடங்குகிறது. அழைப்பிதழை இணைத்திருக்கிறேன். தவறாமல் வரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். என்னை உரையாற்ற அழைத்தபோது நான் கொஞ்சம் தயங்கினேன். ஏனென்றால், எழுத்தாளர்கள் பேச்சாளர்களாக மாற வேண்டும் என்று ஒரு விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் எனக்கு ஒரு சிறிதும் உடன்பாடு இல்லை. சார்ல்ஸ் … Read more

ஆதரவுக் குரல்: றியாஸ் குரானா

காலையில் அபிலாஷ் சந்திரனின் காணொலி பார்த்தேன். எனக்கு ஆதரவாக எப்போதும் பேசக் கூடிய ஒருவர் அபிலாஷ். நண்பர் என்பதால் எனக்கு ஆதரவாகப் பேசவில்லை. ஒத்த கருத்து என்பதால்தான் நட்பே கை கூடுகிறது. இப்போது றியாஸ் குரானா. நான் இலங்கை செல்வதால் றியாஸ் குரானாவைப் பாராட்டி எழுதுகிறேன் என்ற பிராது கிளம்பும். நான் அரசியல்வாதி அல்ல. நான் றியாஸைச் சந்திக்கிறேன் என்ற காரணத்தினால்தான் அவரை அவசரமாகப் படித்தேன். பார்த்தால் இவரை நான் பத்து ஆண்டுகளுக்கு முன்பே படித்திருக்க வேண்டும் … Read more

றியாஸ் குரானா: இலங்கையிலிருந்து ஒரு மாற்றுக் குரல்

நான் எந்த ஒரு எழுத்தாளரையும் சந்திக்கச் செல்வதற்கு முன்பு அவர் எழுதிய பெரும்பாலானவற்றைப் படித்து விட்டுச் செல்வதையே பழக்கமாகக் கொண்டிருக்கிறேன். இப்போது இலங்கையில் வசிக்கும் நண்பர் றியாஸ் குரானாவை சந்திக்கப் போகிறேன். அதனால் அவர் எழுதிய அனைத்தையும் படிக்கும் முயற்சியில் இருக்கிறேன். அவருடைய ஒரு நேர்காணல் இது: ”தமிழ் இலக்கியத்தை மிக அதிகம் பாதித்தது ரஸ்ய இலக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். தமிழில் அதிகளவு மொழிபெயர்க்கப்பட்டிருப்பதும், அதுதான். இருபதாம் நூற்றாண்டு உலகெங்கும் பலமொழிகளில் ரஸ்ய இலக்கியத்திற்கு பெரும் … Read more