இருநூறில் ஒருவர்…

புத்தக விழாவின் போது வரம் என்ற தலைப்பில் சத்தமில்லாமல் என் கட்டுரைத் தொகுப்பு ஒன்று வெளிவந்தது. அன்புவின் சத்தத்தில் வரம் கட்டுரைத் தொகுப்பு பற்றி அதிகம் தெரியவில்லை. என் கட்டுரைகளெல்லாம் உண்மையில் புனைவுக்கும் அ-புனைவுக்கும் நடுவாந்திரமாக இருப்பவை என்று உங்களுக்குத் தெரியும். வாங்கிப் பயன் பெறுங்கள். ஒருத்தர் அங்கே என்.எஃப்.டி.யில் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்கும் புத்தகத்தை க்யூவில் நின்று வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே 200 ரூபாய் புத்தகத்துக்கு tiny url போட்டு எழுதிக் கொண்டிருக்கிறேன். எப்படியும் வரம் … Read more

அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு: மனுஷ்ய புத்திரன்

சாருவின் ‘அன்பு: ஒரு பின் நவீனத்துவவாதியின் மறு சீராய்வு மனு ‘ நாவலை இரு தினங்களுக்கு முன் படித்து முடித்தேன். அதுகுறித்து எழுதவேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. கடும் வேலை நெருக்கடி. சாருவின் மின்சார நடை நாவலை இடையறாது படிக்க வைத்தது. அவரது மொழி ஒரு சாகசம். சாருவின் எல்லா எழுத்துகளிலும் ஒரு சமூக சகவாழ்வில் மனிதர்களிடையே நிலவும் ஒவ்வாமைகளையும் கலாச்சார வேற்றுமைகளையும் தொடர்ந்து விவாதிப்பதைக் காணலாம். ஒட்டு மொத்த தமிழ் வாழ்க்கையே இந்த ஒவ்வாமைகளுக்கு … Read more

ஆரோவில் சிறுகதைப் பட்டறை

இப்போது நான் 2020இல் ஆறு மாதங்களில் எழுதிய பூச்சி பதிவுகளைத் தொகுத்துக் கொண்டிருக்கிறேன். மொத்தம் நான்கு தொகுதிகள். ஆயிரம் பக்கங்களுக்கு மேல். இப்போதுதான் இரண்டாம் தொகுதியை முடித்தேன். இன்னும் இரண்டு தொகுதிகள். அதனால்தான் ஆரோவில் பட்டறை பற்றி எழுதவில்லை. சுமார் முப்பது பேர் வந்திருந்தார்கள். எல்லோரும் புதுமுகம். ஒரு நாள் முழுவதும் இருந்து விவாதித்தார்கள். எல்லோருமே மூன்று கதைகளையும் படித்து விட்டு வந்திருந்தார்கள். குடி, கொண்டாட்டம், டான்ஸ் என்று போட்ட போது நூறு பேர். இப்போது மதியம் … Read more

இமயாவின் கவிதை பற்றி…

இமயாவுக்கு ஒரு கடிதம் என்ற பதிவில் இமயாவின் கவிதை காணவில்லை என்பதைக் கூட ஸ்ரீராம்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. அதுவும் மருத்துவமனையில் பணியில் இருக்கும் ஒருவர். மற்ற யாருமே சுட்டிக் காட்டாதது வருத்தத்தை அளிக்கிறது. இமயாவின் கவிதை கீழே: இந்தக் கவிதையைப் படித்ததும் இதில் தெரியும் உணர்வு அலைகள் என்னை சில்வியா ப்ளாத்தின் ஞாபகத்துக்கு இட்டுச் சென்றது. ஒரு பதின்மூன்று வயதுச் சிறுமிக்கு எப்படி சில்வியா ப்ளாத்தின் angst வர முடியும் என்று யோசித்தேன். கவிதையை என் சிநேகிதிக்கு … Read more