அன்பு: மூன்றே நாளில் 500 பிரதிகள்

கிட்டத்தட்ட கமலின் விக்ரம் மாதிரி வெற்றி அடைந்திருக்கிறது அன்பு நாவல். மூன்று நாளில் 500 பிரதிகள் விற்று விட்டன. அது உண்மையில் 510 ஆகத்தான் இருந்திருக்க வேண்டும். சுமார் அரை மணி நேரம் நேற்று அன்பு பிரதிகள் கைவசம் இல்லாமல் போனது. அப்போதே ஒரு பத்து பேர் வந்து கேட்டு விட்டுப் போனார்கள். என் எழுத்து வாழ்வில் இந்த அளவுக்கு வேறு எந்த நூலும் விற்றதில்லை. அனைவருக்கும் நன்றி. இன்றும் நாளையும் புத்தக விழா கடைசி. மாலை … Read more

அன்பு நாவலை வாங்குவதற்கு…

இன்றும் புத்தக விழாவுக்கு ஐந்து மணிக்கு வந்து ஒன்பது வரை இருப்பேன். நேற்று ஔரங்ஸேப் நாவலை வாங்கி என்னிடம் கையெழுத்து வாங்கியவர்களிடம் கூட அன்பு நாவல் வாங்கவில்லையா என்று கேட்டுக் கொண்டிருந்தேன். ஆம், அந்த நாவலை நான் முச்சந்தியில் நின்று விற்க விரும்புகிறேன். காசு பார்ப்பதற்காக அல்ல. எனக்குத் தேவை லட்சங்களில். புத்தகம் எத்தனைதான் விற்றாலும் ராயல்டி ஆயிரங்களில்தான் கிடைக்கும். அன்பு நாவல் லட்சக்கணக்கான பேரிடம் சேர வேண்டும் என்று நான் நினைப்பதன் காரணம், அவர்களின் வாழ்க்கை … Read more

ஒளி முருகவேள்

என் வாழ்வில் ஒரு ஒளியாய்ச் சேர்ந்தவர் ஒளி என்று நாங்கள் செல்லமாக அழைக்கும் ஒளி முருகவேள். அவர் ஒரு புகைப்படக் கலைஞர் மற்றும் ஒளிப்பதிவாளர். ஒளி என்பது புனைப்பெயர் அல்ல. அவர் தந்தை பெயர் ஒளி என்று ஆரம்பிக்கும். தந்தை மறைமலை அடிகளின் மாணவர். ஒளியைப் போன்ற சாத்வீக மனிதரை நான் இதுவரை பார்த்ததில்லை. செல்வகுமார், குமரேசன் இருவரும் கூட சாத்வீகம்தான் என்றாலும் ஒளி அவர்களை விட சாத்வீகம். என் திட்டுகளையும் கூட சிரித்துக் கொண்டே கேட்டுக் … Read more

ஒளித்தீற்றல்: ஸ்ரீ

அதிகாலையிலொரு சொப்பனம்கண்காட்சி போன்றவொரு இடத்தில்நீயும் நானும் பேசியபடிஉலாவிக் கொண்டிருக்கிறோம்மறுநாள் நீ வரவில்லை என்கிறார்கள்எங்கு தேடியும் கிடைக்கவில்லைஎன் தொலைபேசி அழைப்பையும் எடுக்கவில்லைதிரும்பி வர இயலாதபடி மறைந்து விட்டாய்அடக்க இயலாமல் தேம்பித் தேம்பி அழுகிறேன்உணர்வு நிலைகொள்ளவில்லை***உனக்கான ஒரு கூட்டம்நானும் இருக்கிறேன்உன் நண்பனொருவன் என்னை அணுகிஉன்னை எனக்குப் பிடித்திருக்கிறதுகலவி கொள்ளலாமா என்கிறான்***ஒரு தனியறையில் அவனும் நானும்மூர்க்கமாக முயங்கிக் கிடக்கிறோம்இருவரும் சரியும் நிலையில்கைபேசி ஒலிக்கமிஸ் யூ குட்டி, எங்கே இருக்கிறாய்என்கிறான் கணவன்நித்திரையிலிருந்து கண்கள் திறக்ககனவென நம்ப நொடி சில ஆயிற்று***நான் இல்லை என்றால் … Read more

இன்னும் ஓரிரு தினங்களில் அன்பு. இப்போது முன்னட்டை ஓவியம்…

எது எழுதினாலும் அதை எழுதி முடித்த பிறகு அதிலிருந்து நான் விலகி விடுவேன். அது வாசகர்களுக்கானது. அவ்வளவுதான். ஆனால் அன்பு நாவலில் அப்படி இல்லை. அதை நான் ஒவ்வொருவரிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். படிக்கச் சொல்லி யாசிக்க வேண்டும். அது என் சுவாசம். என் தவம். அதற்கு நான் பெரிதும் எதிர்பார்த்த அட்டைப் படம் வந்து விட்டது. ஓவியம் மணிவண்ணன். மணி வண்ணனை ஒரு மாணவராக எனக்கு 35 ஆண்டுகளுக்கு முன்பு தெரியும். சந்த்ரு வீட்டில் … Read more

உடலும் பயிற்சியும்

அன்புள்ள சாருவுக்கு,நான் சிவசங்கரன். மதுரையில் இருந்து வந்து அண்மையில் உங்களை சென்னையில் சந்தித்து பேசி, புகைப்படம் எடுத்துக் கொண்டேன். அன்று, உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் நீங்கள் ‘கலையும் மீறலும்’ பற்றிப் பேசி முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகத்தான் எனக்கு தோன்றியது. நேரம் இன்னும் இருந்திருந்தால் நீங்கள் தொட்ட இடங்களைப் பற்றி இன்னும் நிறைய பேசியிருப்பீர்கள் என்றே தோன்றியது. நான் அவ்வளவு சிறப்பான பேச்சாளன் இல்லை என்று நீங்கள் அவ்வப்போது சொல்வீர்கள். உண்மையில், நீங்கள்தான் மிக … Read more