சாருவின் உலகத்திற்கு ஒரு சாவி – காயத்ரி.ஆர்

என்னுடைய எழுத்தின் மீது பலருக்கும் ஒவ்வாமை இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அதையும் மீறி என் எழுத்தை நெருங்குவதற்கான ஒரு திறவுகோல் காயத்ரியின் இந்தக் கட்டுரை. நீங்கள் இதுகாறும் கற்று வைத்திருப்பதை ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு சாருவின் எழுத்திற்குள் நுழையுங்கள் என்ற வாக்கியம் இந்தக் கட்டுரையில் மிகவும் முக்கியமானது. ஒரே ஒரு கருத்தில் மட்டும் முரண்படுகிறேன். நான் நேரில் பழகுவதற்கு மிகவும் இனிமையானவன் என்று பணிவுடன் சொல்லிக் கொள்கிறேன். சாருவின் உலகத்திற்கு ஒரு சாவி – … Read more

the outsider: அவசர உதவி தேவை

என்னுடைய முப்பது ஆண்டுக் கால நண்பர் இப்போது திடீரென்று ஒரு காரியம் பண்ணி விட்டார். அவருக்கு அதற்கான சூழல் என்னவென்று தெரியவில்லை. நடந்தது இதுதான். தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற எடிட்டர். அவ்ட்ஸைடருக்கு படத் தொகுப்பு (எடிட்டிங்) செய்து கொடுப்பதற்கு மிகவும் ஆர்வத்துடன் முன்வந்தார். என் வீட்டுக்கே வந்தார். நவம்பர் 15 கடைசி தேதி அன்று எனக்கு படம் கிடைத்து விட வேண்டும் என்றேன். ஒப்புக் கொண்டார். எளிதில் முடித்து விடலாம் என்றார். மணிக்கணக்கில் ஃபோனிலும் நேரிலும் … Read more

சாரு நிவேதிதா – வாழ்வும் கலையும் : அய்யனார் விஸ்வநாத்

நண்பர் அய்யனார் விஸ்வநாத் எழுதி, ஜெயமோகனின் தளத்தில் வெளியான கட்டுரை. படிக்கும் போது ரொம்பவும் லஜ்ஜையாக இருந்தது. இதை இங்கே பகிர வேண்டுமா என்று தயங்கினேன். ஆனாலும் என் எழுத்தை மட்டுமே அறிந்தவர்களுக்கு இந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டிருக்கும் மற்ற விஷயங்கள் என் எழுத்தை அணுகுவதற்கு உதவியாக இருக்கும் என்றே இதைப் பகிர்கிறேன். ஜெ. கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ, ஜக்கி வாசுதேவ் போன்றவர்கள் ஆன்மீகத்தில் நேரடிச் செயல்பாடுகளில் ஈடுபட்டவர்கள். Activists. அவர்களது ஆன்மீகச் செய்திகளோடு கூடவே அவர்களின் வாழ்வும் ஒரு … Read more