அவ்ட்ஸைடர் பற்றி…

பொதுவாக எனக்குப் பணம் அனுப்புபவர்களின் பெயரை நான் வெளியிடுவது இல்லை.  அது சம்பந்தப்பட்டவர்களுக்கு இடைஞ்சலைத் தருகிறது என்பதால்.  ஆனால் என் அன்புக்குரிய நண்பர் நேசராஜ் செல்வத்தின் (கிருஷ்ணகிரி) இந்தக் குரல் செய்தியை அப்படியே உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்வதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன்.  ஏனென்றால், நான் உண்மையிலேயே சொல்கிறேன், த அவ்ட்ஸைடர் தொடர் அளவுக்கு உணர்வுபூர்வமாக நான் வேறு எதையுமே எழுதியதில்லை.  ஸீரோ டிகிரி மட்டுமே விதிவிலக்கு.  ஆக, அவ்ட்ஸைடரை யாரும் படிக்கிறார்களா, அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து … Read more

கோவில்பட்டிக்கு வரச் சொல்லுங்கள்! (தகவல் தொடர்பு கட்டுரையின் தொடர்ச்சி)

அன்புள்ள நண்பருக்கு, உங்கள் வாட்ஸப் மெஸேஜ் கிடைக்கப் பெற்றேன்.  மன்னித்து விடும்படி எழுதியிருந்தீர்கள்.  மன்னிக்கும் அளவு பெரிய தவறு அல்ல உங்களுடையது.  நான் ஃபோன் செய்தேன்.  உங்களால் எடுக்க முடியாத நிலை.  பிறகு பதிலுக்கு ஃபோன் செய்ய மறந்து போனீர்கள்.  இதில் மன்னிப்பதற்கு என்ன இருக்கிறது?  உண்மையில் மன்னிப்பு என்பதன் அர்த்தம் “இனிமேல் இப்படி நடக்காத வண்ணம் பார்த்துக் கொள்வேன்” என்பதுதானே?  ஆனால் அதற்கான தேவையே இனிமேல் எழாதவாறு நான் பார்த்துக் கொள்கிறேன்.  நான் உங்களுக்கு ஃபோன் … Read more

த அவ்ட்ஸைடர் – 24

இம்மாதிரி சந்தர்ப்பங்களில் எப்படி நடந்து கொள்வதென்று எல்லோரும் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறோம்.  எந்தக் குற்றமும் செய்யாத ஒரு சாதாரண சராசரி மனிதனின் முகபாவம் எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட முகபாவத்தோடு நாங்கள் எங்கள் வீட்டை நோக்கிச் சென்றோம்.  வீட்டின் உள்ளே சென்றவுடன் யாரிடமும் எதுவும் பேசவில்லை.  விளக்கையும் ஐந்து நிமிடத்தில் அணைத்து விட்டோம்.  ஆயுதங்கள் காரிலேயே இருந்தன.  அதைப் பற்றியும் கவலைப்படவில்லை.  இம்மாதிரி சமயங்களில் மற்றவர்களாக இருந்தால் உடனடியாக, ரகசியமாக ஆயுதங்களை எடுத்து வைத்துக் காபந்து பண்ணுவார்கள்.  போலீஸ் வேறு … Read more

தூக்கப் பஞ்சாயத்து

இந்தத் தூக்கப் பஞ்சாயத்து இன்னும் ஓயாது போலிருக்கிறது.  இதை வாசிக்கும் உங்களுக்கு ஒரு ஆலோசனை.  எழுத்தாளர்களின் பேச்சைக் கேட்டோ, அவர்களின் வாழ்க்கையைப் பார்த்தோ உங்கள் வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.   ஏனென்றால், எழுத்தாளர்கள் அதிமனிதர்கள்.  அவர்கள் செய்வதைப் பார்த்து நீங்களும் செய்தால் அது உங்களைப் படுகுழியில்தான் தள்ளும். உதாரணமாக, சாரு வைன் அருந்துகிறார் என்று நீங்களும் அருந்தினால் நீங்கள் காலி.  நான் அஞ்சு வருடம் குடிக்காமல் இருப்பேன்.  வேறு யாராலும் முடியாது. ஆகவே, எழுத்தாளர்கள் எழுதி வைத்துள்ளவற்றைப் படியுங்கள்.  … Read more

போன ஜென்மத்தில் சேவலாக இருந்தவனைப் பற்றி…

Charu , I read போன ஜென்மத்தில் சேவலாக இருந்தவனைப் பற்றிய ஒரு கதை (அல்லது) சாசனம் : ஒரு நெடுங்கதை I absolutely don’t have words to express what my mind and heart feel. one side, as usual I am mesmerized by the writing and various aspects of it. The humor, satire, plight, struggle, information in that entire story that … Read more

த அவ்ட்ஸைடர் (19)

சென்ற அத்தியாயத்தில் To Bury Our Fathers என்ற நாவலை எழுதியவர் எர்னஸ்தோ கார்டினால் என்று எழுதி விட்டேன்.  அந்த விவரம் தவறு.  இந்தப் பிழையை சுட்டிக் காட்டிய அப்துல் ரஹ்மானுக்கு நன்றி.  To Bury Our Fathers நாவலை எழுதியவர் செர்ஹியோ ராமிரெஸ் (Sergio Ramirez).  இந்த்த் தவறிலிருந்தே எனக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் உள்ள சம்பந்த்த்தை ஒருவர் புரிந்து கொள்ள முடியும்.  செர்ஹியோ ராமிரஸ் நிகாராகுவாவின் ஸாந்தினிஸ்த்தாக்களைச் சேர்ந்தவர்.  எழுத்தாளர்.  அவர் நிகாராகுவாவில் நடந்த … Read more