ஸீரோ டிகிரி நாவல்/சிறுகதை/குறுநாவல் போட்டி 2022

ஸீரோ டிகிரி நாவல்/சிறுகதை/ குறுநாவல் போட்டி 2022இறுதி நாள்: 31 மே 2022*விதிமுறைகள்*படைப்புகளை மின்னஞ்சலில் யூனிகோட் வடிவத்தில் மட்டுமே (word doc)ல் அனுப்ப வேண்டும். கையெழுத்து பிரதி மற்றும் பிடிஎஃப் (pdf) படிவம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி zerodegreeaward@gmail.com. போட்டிக்கு அனுப்பும் படைப்பின் வகைமையை நாவல் போட்டி/குறுநாவல் போட்டி/சிறுகதை போட்டி என்று Subject-ல் குறிப்பிடவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய கடைசி நாள் மே 31, 2022. அதற்குப் பிறகு வரும் படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.இந்தப் … Read more

ஔரங்ஸேப் பேசிய மொழி

என் நண்பர்கள் சிலர் பல மொழிகளில் சரளமாகப் பேசக் கூடியவர்களாகவும் மிகக் குறைந்த காலத்தில் ஒரு புதிய மொழியைக் கற்றுக் கொள்ளக் கூடியவர்களாகவும் இருப்பதைப் பார்த்து வியந்திருக்கிறேன். அந்த விஷயத்தில் நான் பூஜ்யம். ஸ்பானிஷ், ஃப்ரெஞ்ச், அறபி, சம்ஸ்கிருதம் என்று பல மொழிகளைக் கற்றுக் கொள்ள முயன்று தோற்றிருக்கிறேன். ஸ்பானிஷுக்கு நான் செலவு செய்த நேரத்தில் இரண்டு நாவல்களை எழுதியிருக்கலாம். இன்றும் அந்த கனமான நோட்டுப் புத்தகங்கள் என்னிடம் உள்ளன. பக்கம் பக்கமாக பயிற்சி செய்திருக்கிறேன். வேறொரு … Read more

27. சொற்கடிகை

”நாளை நானே அரசு மீன் கடைக்குச் சென்று நண்டு வாங்கி வரலாம் என்று முடிவெடுத்து விட்டேன்.”  இருபத்தாறாவது அத்தியாயத்தை மேற்கண்டபடி முடித்திருந்தேன்.  எழுதின தினம் ஏப்ரல் 13.  ஆனால் திட்டமிட்டபடி மறுநாள் நண்டு வாங்கப் போகவில்லை.  காலண்டரில் அன்று சிவப்பு மை அடித்திருந்தது.  ஏன் என்று பார்த்தால் சித்திரை ஒன்று.  வருடப் பிறப்பு அன்று எப்படி அசைவம்?  இதோ ஏப்ரல் 23 ஆகி விட்டது.  இன்னும் நண்டு வாங்கப் போகவில்லை.  ஒருநாள் கைமணம் என்ற கடையிலிருந்து வரவழைத்தேன். … Read more

22 ஏப்ரல் வெனிஸில் என் சிறுகதை வாசிப்பு

Fondazione Prada அமைப்பின் ஓவிய – சிற்ப – இலக்கிய விழா நாளை மாலை வெனிஸில் தொடங்குகிறது.  எனக்கு அழைப்பு இருந்தும் ஔரங்ஸேபை முடிக்க வேண்டியிருப்பதால் நான் செல்லவில்லை.  உலகம் முழுவதிலும் இருந்து 32 எழுத்தாளர்கள் இந்த விழாவுக்காகவே எழுதிய புதிய கதைகளை நாளை ஜார்ஜ் கைடால் வாசிக்கிறார்.  இதில் ஹானான் அல்-ஷேக்கின் ஒரு கதையை நான் மொழிபெயர்த்திருக்கிறேன்.  அலெக்ஸாந்தர் க்லூஜ் மிக முக்கியமான எழுத்தாளராக உலகம் முழுதும் அறியப்பட்டவர்.  கண்காட்சி நவம்பர் வரை இருப்பதால் பிறகு … Read more

இன்றைய இரண்டாவது கவிதை: காற்றிலாவது…

காற்றிலாவது… அவளுக்குப் பதினாறு வயது பேரழகு என்று நீங்கள் எதைச் சொல்வீர்களோ அதையெல்லாம் மீறிய அழகு ஒருநாள்  கைகாலை அசைக்க முடியவில்லை பேச முடியவில்லை சப்தநாடியும் செயலிழந்து போனது LGMD என்றார் மருத்துவர் இனிமேல் அந்தப் பெண்ணுக்கு ஆட்டமில்லை  ஓட்டமில்லை பௌதிக இயக்கமில்லை  துன்ப சாகரத்தில் வீழ்ந்தது  குடும்பம் வாழ்க்கை அபத்தமென்றார் நண்பர் ஜோ எல்லாம் கர்மா என்றாள் மூதாட்டி இன்று எனக்கொரு  ஜனன செய்தி வந்த போது எதுவொன்றும் சொல்லத் தோணாமல் விக்கித்து நின்றேன் தாள … Read more