புஷ்பா – ஒரு லும்ப்பன் கிளாஸிக்

புஷ்பாவுக்கு ஆறு வயது புஷ்பா கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கிறான் புஷ்பாவுக்கு அப்பன் பெயர் கிடையாது என்றொருவன் அறிவிக்கிறான் புஷ்பா சிணுங்கி அழுகிறான் புஷ்பா ரௌடியாகிவிட்டான் புஷ்பா கால் மேல் போட்டு உட்கார்ந்திருக்கிறான் புஷ்பாவுக்கு அப்பன் பெயர் இல்லை என்றொருவன் அறிவிக்கிறான் புஷ்பா குமுறி எழுந்து அவனை அடிக்கிறான் புஷ்பா பெரிய தாதாவாகிவிட்டான் ரௌடிகள் புடைசூழ போலிசுக்குக் கப்பம் கட்டுகிறான் புஷ்பா அப்பன் பெயர் தெரியாதவன் என்றொருவன் அறிவிக்கிறான் புஷ்பா இறுக்கி மூடிய கைக்குள் தன்னைத் … Read more

என் ஆசானுக்கு மரியாதை

ஸீரோ டிகிரி பப்ளிஷிங் மற்றும் தமிழரசி அறக்கட்டளை சார்பாக என் ஆசானும் மதிப்புக்குரிய நண்பருமான அ. மார்க்ஸுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கப்படுகிறது. இதை நான் எனக்கே அளிக்கப்பட்ட கௌரவமாகக் கருதுகிறேன். எங்கள் சில்ஸிலாவில் யாருமே அப்படி அப்படியே க்ளோனிங் செய்த மாதிரி ஒருவர் சொல்வதை அடுத்தவர் ஏற்றுக் கொள்வது என்பது கிடையாது. அரசியல், தத்துவம், சமூகம், இலக்கியம் போன்ற பல்வேறு துறைகளில் அன்பையும் அபிமானத்தையும் அடிப்படையாகக் கொண்ட புரிதலோடு வாழ்தல் என்பதுதான் இந்த சில்ஸிலாவின் பொதுத்தன்மை. … Read more

கோவா நாட்குறிப்புகள் (1)

வெளியுறவுத் துறையில் ஐஏஎஸ்ஸாக இருந்தாலும் கோபால் மிகவும் அடக்கமானவர்.  தன் பதவி பற்றி யாரிடமும் ஒரு வார்த்தை சொல்ல மாட்டார்.  எந்த பந்தாவும் கிடையாது.  கோவாவிலிருந்து திரும்பியதும் எனக்கு ஃபோன் செய்து “நான் ஏதாவது தவறு செய்திருந்தால் சொல்லுங்கள் சாரு, திருத்திக் கொள்ளலாம்” என்றார்.  யார் கேட்பார் இப்படி?  இப்படிக் கேட்டதால் சொல்கிறேன்.  செந்தில் நன்கு சமைக்கக் கூடியவர்.  பிரமாதமாகச் செய்வார்.  அவரும் கோபாலும் மீன் வாங்கக் கிளம்பினார்கள்.  நாங்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் ஒரு இடம் … Read more

மெஜந்த்தா

நான் வண்ணங்களின் ரசிகன். பிஸ்மில்லா பாடலை தினமும் முப்பது தடவையாவது கேட்டு விடுவேன். எழுதிக் கொண்டிருக்கும்போது அது பாட்டுக்கு ஓடிக் கொண்டிருக்கும். இந்தப் பாடலில் கைலாஷ் அணிந்திருக்கும் வாடாமல்லி நிறச் சட்டைத் துணியை எங்கேயாவது பார்த்தால் எனக்கு ஒரு மெயில் தட்டி விடுங்கள். இன்னும் பத்து நாட்களுக்குள் வாங்கி விடுவது என்ற வெறியில் இருக்கிறேன். நாளை என்பதே நம் கையில் இல்லை என்கிறார் புனித். ஆனால் ஹெடோனிஸ்டுகளுக்கு ஒவ்வொரு நிமிடமும் கொண்டாட்டம்தான். கேம் ஆஃப் த்ரான்ஸ் படத்தில் … Read more

அய்யர் ப்ளாக்

யாவரும் கேளிர் என்று நினைக்கும் எனக்கு ஜாதிப் பற்றோ ஜாதி வெறுப்போ எப்படி இருக்க முடியும்? அதனால் எனக்கு ஜாதி என்பது ஒரு பெயர் மாதிரிதான். என்னால் ஒருத்தரை செட்டியார் என்றோ நாயுடு என்றோ அய்யர் என்றோ கூப்பிட முடியும். அது ஒரு பெயர். இன்றைய தினம் நகர வாழ்வில் அதுதான் நடந்துள்ளது. எனக்கு நகரம்தான் தெரியும். கிராமத்தில் இப்படி இல்லை என்றும் தெரியும். இந்த நண்பரை அய்யர் என்றே அழைத்து வருகிறேன். பிரஸன்ன வெங்கடேசன் என்று … Read more