தமிழின் எதிர்காலம்

நான் ஒற்று ஒழுங்காகப் போடாததற்கு அவ்வப்போது சாரு சுளுக்கெடுப்பார். சரி குழந்தைகளிடம் தமிழ் எந்தளவுக்கு புழங்குகிறது என்று பார்க்க, மதிய உணவு வேளையில் , செவிக்குணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும் என்று சொல்லி என்னா மீனிங் என்றேன் . ஆழி : காது கேக்காம அடைச்சிகிட்டா , வயிறு பசிக்கும். அப்ப வயித்துக்கு சாப்பாடு குடுக்கணும். இமயா : காதுக்கு உணவில்லாத போது , காது தன் சத்தை கொஞ்சம் வயித்துக்கும் அனுப்பும். ஆனாலும் ஆழி … Read more

புரட்சித் துறவி

நான் என்னுடைய பதின்பருவத்தில் தீவிர ஆன்மீகத் தேட்டம் உடையவனாக இருந்தேன்.  ஆன்மீகப் பத்திரிகைகளில் நிவேதிதா என்ற பெயரில் எழுதினேன்.  விவேகானந்தரின் ஞான தீபம் தொகுப்புகளை வாங்கிப் படித்து அவரையே என் மானசீக குருவாக வரித்துக் கொண்டேன்.  தஞ்சாவூர் ராஜா சரபோஜி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது (1974-75) சமண சமயம் தொடர்பான என் கட்டுரை ஒன்று தமிழ்நாடு சமண சமயத்தின் குருமார்களால் சிலாகிக்கப்பட்டு பெரியதொரு தொகை பரிசாக வந்தது.  வாரம் ஒருமுறை மௌன விரதம் எல்லாம் இருப்பேன்.  இப்போது … Read more

கௌஹர் ஜான்

1902 நவம்பர் 14-ஆம் தேதி.  கல்கத்தாவில் உள்ள ஒரு பெரிய ஓட்டலில் இரண்டு அடுத்தடுத்த அறைகளில் ஒரு ரெடிமேட் ரெக்கார்டிங் ஸ்டுடியோ அமைக்கப்பட்டது.  இந்தியாவின் முதல் ரெக்கார்டிங் அன்றுதான் நடக்கப் போகிறது.  அதுவரை எந்தப் பாடலும் ஒலிப்பதிவு செய்யப்பட்டதில்லை.  சினிமாப் பாட்டு அல்ல.  அந்தக் காலத்து சாஸ்த்ரீய சங்கீதம்.   தென்னிந்தியாவின் கர்னாடக சங்கீதம் மாதிரி வடக்கில் ஹிந்துஸ்தானி. அதில் அப்போது உலகப் புகழ் பெற்று விளங்கியவர் கௌஹர் ஜான்.  இந்தியாவில் வேலை செய்த வில்லியம் என்ற ஆர்மீனிய … Read more

ஆ. மாதவன்

December 20, 2015 தினமணி இணைய இதழில் இந்த ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி ஆ. மாதவன் பற்றி எழுதியிருந்தேன்.  பிறகு உடனேயே அவரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் பலரிடமும் அவரது தொலைபேசி எண்ணைக் கேட்டேன்.  ஜெயமோகனைக் கூட தொடர்பு கொண்டு கேட்டேன்.  ஆனால் அவர் அப்போது கனடாவில் இருந்தார்.  அதற்குப் பிறகு பழுப்பு நிறப் பக்கங்களின் மற்ற எழுத்தாளர்களில் மூழ்கி விட்டேன்.  இருந்தாலும் அவ்வப்போது அவரைத் தொடர்பு கொள்வது சம்பந்தமாக முயற்சி செய்து கொண்டே … Read more

186. இசையும் கொண்டாட்டமும்

பிறந்த நாள் கொண்டாட்டங்களின் ஹேங் ஓவர் நேற்று வரை நீடித்தது.  எல்லாம் ஓய்ந்தது என்று வேலையைத் தொடங்கிய போது சுநீல் கிருஷ்ணனின் வாழ்த்து வந்தது.  சுநீல் கிருஷ்ணன் போன்ற ஒரு முக்கியமான படைப்பாளியை இதுவரை தெரிந்து கொள்ளாமல் இருந்தது பற்றிய வருத்தத்துடன் சென்ற ஆண்டுதான் அவருடைய நூல்களை வாங்கி வந்தேன்.  எடுத்திருக்கும் வேலையை முடித்து விட்டு அவரை வாசிக்க வேண்டும்.  இடையில் அவருடைய தளத்தில் அவர் எழுதியிருக்கும் கட்டுரைகளை வாசித்தபோது எக்ஸைல் நாவலின் அடியோட்டமாக நான் தொட்டிருக்கும் … Read more

8. இசை பற்றிய சில குறிப்புகள்

இன்னும் ஒரு வாரம் கழித்தே இசைக்கு வருவேன் என்றேன்.  ஆனால் இதை இன்று எழுதாமல் போனால் மனதிலிருந்து போய் விடும் என்பதால் சுருக்கமாக எழுதி விடுகிறேன்.  பக்தி என்ற வார்த்தையை முந்தைய அத்தியாயத்தில் பயன்படுத்தவில்லை என்றாலும் நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.  திருக்குறள் போன்ற ஒரு உலகப் பொதுமறையை உலக இலக்கியத்தில் காண்பது அரிது.  ஈடு இணையில்லாத ஒரு அறநூல் அது.  அறநூல் மட்டும் இல்லை.  காமத்துப் பாலும் இருக்கிறது.  வள்ளுவரின் காலத்தில் எந்த நூலுமே கடவுள் வாழ்த்தோடுதான் … Read more