இசை பற்றிய சில குறிப்புகள்

நாளை காலைக்குள் இசை தொடரின் அடுத்த அத்தியாயத்தைப் பதிவேற்றுவேன். இசை கட்டுரையை ஒரு ஓட்டத்தில் எழுதி விட இயலாது. பல மணி நேரங்கள் இசைக் கச்சேரிகளைக் கேட்க வேண்டும். ஏற்கனவே பல முறை கேட்டிருந்தாலும் எழுதுவதற்கு முன் ஒரு முறை கேட்டு விட்டால்தான் எழுத வசதி. எனவேதான் இத்தனை நேரம் ஆகும் என்றேன். அடுத்த கட்டுரை இசை தொடரின் ஆறாவது அத்தியாயம். அந்த ஆறாவது அத்தியாயத்தைப் படித்துத் தொடர இந்த நான்காவது அத்தியாயத்தைப் படித்து விடுவதே நல்லது. … Read more

6 டிசம்பர் ஞாயிறு காலை 6 மணி: புதுமைப்பித்தன்

நாளை காலை – அதாவது இந்திய நேரப்படி ஞாயிறு காலை ஆறு மணிக்கு புதுமைப்பித்தன் சிறுகதைகள் பற்றிய என் உரை நடைபெறும். உரை முடிந்து கேள்வி பதில் பகுதி உண்டு. நண்பர்கள் தங்கள் கேள்விகளை சந்தேகங்களைக் கேட்கலாம். நீண்ட நேரம் பேச வேண்டாம் என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன். மற்றபடி எந்தத் தயக்கமும் தேவையில்லை. சுதந்திரமாக இருங்கள். நான் உரையாற்றும் போது ஆடியோ முக்கியமாக விடியோவை ஆஃப் செய்து வைத்திருங்கள். விடியோவில் யாரையேனும் பார்த்தால் என் கவனம் … Read more

பூச்சி 174: அவையடக்கம்

தேர்வுக்குப் படிப்பது போல் புதுமைப்பித்தனின் கதைகளைப் படித்துக் கொண்டிருக்கிறேன்.  நாளை மறுநாள் இந்நேரம் சந்திப்பு முடிந்திருக்கும்.  உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.  அதற்கான விவரங்களை இறுதியில் மீண்டும் தருகிறேன்.  இவ்வளவு மும்முரமான வேலைக்கு இடையில் பாலா எனக்கு ஜெயமோகனின் பதிவு ஒன்றை அனுப்பி வைத்ததைப் படித்து, படித்ததோடு நில்லாமல் அது பற்றிய ஒரு மேலதிகத் தகவலையும் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.  பேசாமல் ஜெயமோகனின் பதிவை மட்டும் கொடுத்து விட்டு வேலையைப் பார்த்துக் கொண்டு போயிருக்கலாம்.  ஜெயமோகனே … Read more

புதுமைப்பித்தன் சிறுகதைகள்: டிசம்பர் 6 காலை 6 மணி

நண்பர்கள் அனைவரையும் இந்த மாத உரைக்குத் தயாராகும்படி கேட்டுக் கொள்கிறேன். வரும் ஞாயிறு காலை ஆறு மணிக்கு வழக்கம் போல் ஸூம் சந்திப்பு இருக்கும். டிசம்பர் 6. இந்திய நேரம் காலை ஆறு மணி. புதுமைப்பித்தன் சிறுகதைகளைப் படிக்க வேண்டும் என்றால் தினமணி இணையதளத்தில் காணலாம். புதுமைப்பித்தன் என்று கூகிளில் தட்டினால் கிடைக்கும். சந்திப்புக்கான ID மற்றும் Passcode விவரங்கள் கீழே:

பனிப்பாலையின் நடுவே…

குமுதத்தில் சொல் தீண்டிப் பழகு என்ற தலைப்பில் தொடர்ந்து ஒரு தொடர் எழுதி வருகிறேன். தொடர் மிகவும் நன்றாக இருப்பதாகப் பலரும் அபிப்பிராயப்படுகிறார்கள். பின்வரும் கட்டுரை சென்ற அக்டோபர் மத்தியில் வந்தது. குமுதத்துக்கு நன்றியுடன் மறு பிரசுரம் செய்கிறேன். கட்டுரைக்குள் நுழையும் முன் இன்னொரு விஷயம். பூனை உணவு தீர்ந்து விட்டது. முடிந்தவர்கள் யாரேனும் பூனை உணவு அனுப்பி வைத்தால் உதவியாக இருக்கும். எனக்கு எழுதினால் முகவரி அனுப்புகிறேன். அதேபோல் சி.சு. செல்லப்பா, க.நா.சு., நகுலன், கோபி … Read more