பூச்சி 173: என் கவிதை

நான் வரையறைகளுக்குள் அடங்க மறுப்பவன்.  அடையாளங்களிலும் அடைபட மாட்டேன்.  எனவே என் கவிதைகள் பொது அர்த்தத்தளத்தில் கவிதைகளாகவே ஆக மாட்டா.  கவிதைப் புலத்தில் எனக்கு முன்னுதாரணங்கள் இல்லை.  நிகானோர் பார்ராவை எதிர்க் கவிதை என்கிறார்கள்.  ஆனால் அவருடைய எதிர்க் கவிதையே ஒரு அடையாளத்துக்குள் வந்து விட்டது.  எந்த அடையாளத்திலும் வரையறையிலும் வராத கவிதைகள் என்றால் ஒரே ஒரு ஆள்தான் இருக்கிறார்.  அவர் கவிஞர்களுள் சாதி விலக்கம் செய்யப்பட்டவர்.  சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி.  எக்கச்சக்கமான கவிதைகளை எழுதிக் குவித்தார்.  அவர் … Read more

4. இசை பற்றிய சில குறிப்புகள்

ஒருவர் பிறந்ததிலிருந்தே கண்களைக் கட்டிக் கொண்டே இருக்கிறார்.  ஒருவர் எழுதப் படிக்க ஆரம்பித்ததிலிருந்தே இலக்கியப் பிரதி எதையுமே தொட்டதில்லை.  ஒருவர் தன் வாழ்நாளில் ஒரு உலக சினிமாவைக் கூடப் பார்த்ததில்லை.  தெரிந்ததெல்லாம் விஜய், அஜித், தனுஷ், சூர்யா.  ஒருவர் பிறந்ததிலிருந்தே நல்ல இசையைக் கேட்டதில்லை.  இவர்களுக்கெல்லாம் நீங்கள் காண்பதன் அற்புதங்களையும், இலக்கியத்தின், சினிமாவின், இசையின் சுவைகளையும் மேன்மைகளையும் எப்படிச் சொல்லிப் புரிய வைக்க முடியும்? விவேகானந்தரின் வாழ்வில் நடந்த விஷயத்தை உதாரணமாகச் சொல்லலாம்.  அவர் ஒரு அக்நாஸ்டிக்.  … Read more

169. விருக்‌ஷனின் மொழிபெயர்ப்பில் இந்தோனேஷியக் கவிஞர் சபார்டி ஜோகோ தமோனோவின் கவிதைகள்

எனக்கு ஆசிய நாடுகளின் – அதிலும் குறிப்பாக தென்கிழக்கு ஆசிய எழுத்தாளர்கள் யாரையுமே தெரியாது.  இந்தோனேஷியாவில் Garin Nugroho என்ற இயக்குனர் பற்றி மட்டுமே தெரியும்.  அவரது The Poet என்ற அற்புதமான படத்தைப் பற்றி பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதியிருக்கிறேன்.  இப்போது விருக்‌ஷனின் மொழிபெயர்ப்பில் வந்துள்ள இந்தோனேஷியக் கவிஞர் சபார்டி ஜோகோ தமோனோவின் (Sapardi Djoko Damono) கவிதைகளை வாசிக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.  அற்புதமான கவிதைகள்.  மிகத் தேர்ந்த மொழிபெயர்ப்பு.  தமிழ் மொழிபெயர்ப்பு … Read more

164. கண்காணாத தீவிலிருந்து ஒரு தேவதையின் குரல்…

சில தினங்களுக்கு முன்பு வளனரசுவோடு பேசிக் கொண்டிருந்த போது அவனுடைய ஊரில் கேப் வெர்தே என்ற ஆஃப்ரிக்க நாட்டைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்றும் அவர்களைச் சேர்ந்த ஒருவர், தங்கள் நாட்டின் செஸாரியா எவோரா என்ற பாடகரைப் பற்றிக் குறிப்பிட்டதாகவும் சொன்னான்.  செஸாரியா எவோரா பற்றி இதற்கு முன்னால் கேள்விப்பட்டிருக்கிறாயோ என்று கேட்டேன்.  இல்லை, இதுதான் முதல் முறை என்றான்.  உடனடியாக எனக்கு ஒரு மின் அதிர்வு ஏற்பட்டது.  பின்வரும் சூழ்நிலையைக் கற்பனை செய்து பாருங்கள்.  எங்கோ ஒரு … Read more

புதுமைப்பித்தன்: காலனும் கிழவியும்

வெள்ளைக்கோயில் என்றால் அந்தப் பகுதியில் சுடுகாடு என்ற அர்த்தம். ஆனால் அது ஒரு கிராமமும் கூட. கிராம முனிஸீபு முதலிய சம்பிரமங்கள் எல்லாம் உண்டு. ஊர் என்னமோ அப்படி அப்படித்தான். ‘வெள்ளைக்கோயிலுக்குப் போகிறேன்’ என்றால் உலகத்திடம் செலவு பெற்றுக்கொள்வது என்பது அந்தப் பகுதி வாசிகளின் வியாக்கியானம். ஆனால், வெள்ளைக்கோயிலுக்குப் போய்த் திரும்பி வருகிறவர்களும் பலர் உண்டு. ஏன், சுப்பு நாடான் தினசரி காலையும் சாயங்காலமும் அங்கு போய்த்தான் ஏழை மக்களுக்குக் கஷ்டத்தை மறக்க வைக்கும் அமுதத்தை இறக்கி … Read more