சாரு நிவேதிதாவை ஒரு பிரதியாக வாசித்தல்: அபிலாஷ் சந்திரன்

கீழே உள்ள குறிப்பு அபிலாஷ் சந்திரன் எழுதியது. தேதியையும் நேரத்தையும் குறித்துக் கொள்ளுங்கள். 9-ஆம் தேதி ஆகஸ்ட். இந்திய நேரம் மாலை ஆறு மணிக்கு சாரு நிவேதிதாவை ஒரு பிரதியாக வாசித்தல் என்ற தலைப்பில் அபிலாஷ் சந்திரன் முகநூலில் பேசுகிறார். நானும் கலந்து கொள்வேன். எல்லோரும் கலந்து கொள்ளலாம். விதிமுறைகள் கிடையாது. குறுக்கே பேசக் கூடாது என்ற சாதாரண நடைமுறை மட்டும்தான். கேள்விகள் இருந்தால் மேலே கண்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். முடிந்தவர்கள் கலந்து கொள்ளுங்கள். நண்பர்களே,சாருவை … Read more

சாருவை ஒரு பிரதியாக வாசித்தல்: ஆர். அபிலாஷ்

எனது நீண்ட கால நண்பரும், சக எழுத்தாளரும், பெங்களூர் க்றைஸ்ட் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பேராசிரியருமான அபிலாஷ் மேற்கண்ட தலைப்பில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி இந்திய நேரம் மாலை ஆறு மணிக்கு உரையாற்ற இருக்கிறார். விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. பின்வருவது அபிலாஷின் ப்ளாகில் எழுதியிருப்பது: http://thiruttusavi.blogspot.com/2020/07/blog-post_55.html http://thiruttusavi.blogspot.com/2020/07/blog-post_55.html நண்பர்களே,சாருவை வாசிப்பதில் பல குழப்பங்கள், இடர்கள் நமக்கு உள்ளன. இவை அவர் நவீனத்துவ எழுத்தாளர்களிடம் இருந்து வேறுபட்டவர் என்பதாலோ, ஒரு transgressive எழுத்தாளர் என்பதாலோ மட்டுமல்ல. மிக முக்கியமாக சாரு … Read more

To You Through Me – 14

நேற்றைய க.நா.சு. உரை இனிதே முடிந்தது.  மூன்று மணி நேரம் நிறுத்தாமல் பேசினேன். நாற்பது பக்கங்களுக்குக் குறிப்புகள் எடுத்து வைத்திருந்தேன்.  அதில் பதினைந்து பக்கங்களைத்தான் உபயோகப்படுத்தினேன்.  அதற்கே மூன்று மணி நேரம்.  காலை ஆறிலிருந்து ஒன்பது மணி வரை.  பிறகு கேள்வி பதில் முக்கால் மணி நேரம்.  மொத்தம் நாற்பது பக்கக் குறிப்புகளையும் உபயோகப்படுத்தியிருந்தால் மதியம் பனிரண்டு ஆகியிருக்கும்.  பேசியிருக்கவும் முடியும் என்றே தோன்றியது.  வாசகர் வட்டச் சந்திப்புகளில் அப்படித்தானே நடக்கும்.  என்ன, பக்கத்தில் ரெமி மார்ட்டின் … Read more

பூச்சி 109

அன்பு சாரு சார், முதலில் உங்களிடம் வருத்தமும் மன்னிப்பும் கேட்டுக்கொள்கிறேன். இன்றைய பூச்சி கட்டுரை படித்தவுடன் ஒருவித குற்ற உணர்வு ஏற்பட்டுவிட்டது. அரூ இதழில் வெளிவந்த தங்களின் நேர்காணல் பற்றி எதிர்வினை வரவில்லை என்று எழுதியதுதான் அந்த குற்ற உணர்விற்குக் காரணம். நான் படித்தவுடனே உங்களுக்கு நன்றி தெரிவித்து எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நள்ளிரவில்  வாசித்துமுடித்ததால் எழுதமுடியவில்லை. அதை அப்படியே மறந்தும் போய்விட்டேன். இன்று பூச்சி கட்டுரையில் குறிப்பிட்டவுடன் குட்டுவிழுந்தது போல் முழிப்புவந்து எழுதுகிறேன். … Read more

பூச்சி 108

ஜெபமாலையில் 108 மணிகள் இருக்கும்.  108 இந்திய மரபில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.  இந்திய மரபு என்பது இந்து, பௌத்தம், சமணம்.  சித்தர் மரபில் அண்டமும் பிண்டமும் என்பார்கள் இல்லையா, அண்டம் உங்களுக்குத் தெரியும்.  பிரபஞ்சம்.  பிண்டம் சரீரம்.  அந்த சரீரத்தையும் பிரபஞ்சத்தையும் இணைப்பது சரீரத்தில் உள்ள 108 புள்ளிகள்.  வர்மம், மர்மம் என்றும் சொல்வார்கள்.  சித்தா மற்றும் ஆயுர்வேத வைத்தியத்தின் அடிப்படையும் இதுதான்.  சரீரத்தில் 108 புள்ளிகள் உள்ளன.  தலை முதல் கழுத்து வரை 25, … Read more