பூச்சி 59

இத்தனைக்கும் அந்த மக்கய்யங்கார் தி. ஜானகிராமனையெல்லாம் படித்திருக்கிறதுதான். படித்தும் இப்படி மக்காக இருப்பதுதான் ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் அவர் அண்ணனோ தம்பியை ஜீனியஸ் என்கிறார்.  எனக்கு என்னவோ அண்ணன்தான் புத்திசாலி என்று தோன்றுகிறது. அண்ணனோடு மணிக் கணக்கில் பேசிக் கொண்டிருந்தாலும் சலிப்பே தோன்றாது.  அடிக்கடி தனது நாத்திகக் கருத்துகளை உதிர்ப்பார்.  அதை மட்டும் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவேன்.  தியாகய்யர் தஞ்சாவூர் தெருக்களில் பிச்சை எடுத்தார் என்று சொல்லி இருந்தது அல்லவா, தி. ஜானகிராமன் மோகமுள்ளில் … Read more

மாயா இலக்கிய வட்டம் – ஞாயிறு சந்திப்பு

Maya Ilakkiya Vattam is inviting you to a scheduled Zoom meeting. Topic: Maya Ilakkiya Vattam’s Zoom MeetingTime: May 10, 2020 06:00 PM Singapore Join Zoom Meetinghttps://us04web.zoom.us/j/77904041480… Meeting ID: 779 0404 1480Password: 015564 சென்ற வாரம் போலவே நாளை ஞாயிறு மாலை இந்திய நேரம் மூன்றரை மணிக்கு, சிங்கப்பூர் நேரம் ஆறு மணிக்கு நான் உரையாற்றுகிறேன். உரையைத் தொடர்ந்து கலந்துரையாடலும் நடைபெறும். முதல் ஒரு பத்து … Read more

பூச்சி – 48

சென்ற ஆண்டு நான் வெப்சீரீஸிலேயே மூழ்கிக் கிடந்த போது மெஸையா என்ற ஒரு தொடரைப் பார்த்தேன்.  அது பற்றி யாரும் குறிப்பிடாதது எனக்கு ஒரு ஆச்சரியம்.  அந்தத் தொடரைப் பார்த்தவர்களால் அதை மறக்கவே இயலாது.  அதன் கதை அப்படி.  இயேசு கிறிஸ்து இப்போது மீண்டும் தோன்றினால் எப்படி இருக்கும் என்பதே கதை.  என்ன ஒரு கற்பனை! அதற்காகவே இந்தத் தொடரைப் பார்க்கலாம்.   அரபியில் மெஸ்ஸி மெஸ்ஸி என்றே அழைக்கிறார்கள்.  மெஸ்ஸி என்பது மெஸையா போல.  யேசுவின் அற்புதங்களையெல்லாம் … Read more

குறுநாவல்கள் குறித்த ஓர் உரையாடல்

வரும் ஞாயிறு மாலை இந்திய நேரம் 3.30 மணி சிங்கப்பூர் நேரம் மாலை 6 மணிக்கு குறுநாவல்கள் குறித்து ஒரு கலந்துரையாடலை சிங்கப்பூர் மாயா இலக்கிய வட்டம் ஒருங்கிணைத்திருக்கிறது. ஆர்வம் உள்ள அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம். சில ஆலோசனைகள்: நான் ஒரு குறுநாவல் படித்தேன் சாரு என்று ஆரம்பித்து ஒரு பதினைந்து நிமிடங்களுக்கு அந்தக் குறுநாவலை எனக்கு விளக்கக் கூடாது. அது ஒன்றுதான் நிபந்தனை. மற்றபடி அனைவரும் கலந்து கொள்ள அழைக்கிறேன்.

பூச்சி 40

வரலாற்றுத் தகவல்களைக் கொடுக்கும்போது அந்தக் காலத்து சினிமா பாட்டுப் புத்தகங்களில் கதைச் சுருக்கம் என்று போடுவார்களே அதை விடவும் கம்மியான அளவில்தான் விபரங்களைத் தெளித்துச் செல்கிறேன்.  இல்லாவிட்டால் இந்த நூல் ஆயிரம் பக்கங்களையும் தாண்டி விடும்.  உதாரணமாக, ஸ்பெய்னிலிருந்து தென்னமெரிக்கா சென்ற பாதிரியார்களில் ஒருவரான பார்த்தொலோமெ தெ லாஸ் காஸாஸ் (Bartolome de Las Casas) எழுதிய A Brief Account of the Destruction of the Indies என்ற 50 பக்க புத்தகத்திலிருந்து ஒரு … Read more

பூச்சி – 37

கறுப்பன் எழுந்து கொள்ள முயற்சித்தான்.  ம்ஹும்.  முடியவில்லை.  அச்சமும் நடுக்கமும் அவமானமும் அவனைத் தரையிலேயே ஆணி அடித்தாற்போல் வைத்து அழுத்தியது.  பிறகு அந்தத் தேன்குரலைக் கேட்டான். “த்ரிஸ்த்தான்…” இந்தக் கோவிலுக்கு வெளியே வேறோர் காலத்தில் இதேபோல் அவன் அழைக்கப்பட்டிருக்கிறான்.  அப்படியானால் இது கனவு அல்ல; நனவுதான்.  சீமாட்டிதான் வந்திருக்கிறாள்.  தன் அருகே தெரியும் அவள் கால்கள் உண்மைதான்.  அவன் பதில் சொல்லியாக வேண்டும்; அல்லது சாக வேண்டும்.  அவன் பேசியே ஆக வேண்டும்.  அவனிடம் வந்து சேர்ந்த … Read more