வெட்கக் கேடு…

நேற்று இரவு முழுவதும் என்னால் உறங்க முடியவில்லை. ஹாண்ட்கேவுக்கு நோபல் கொடுப்பது என்பது ஹிட்லருக்கு உலக அமைதிப் பரிசு கொடுப்பதற்கு சமம். மிக வெளிப்படையாகவே ஐரோப்பா இஸ்லாமிய வெறுப்பைக் கக்குகிறது. உலகம் பூராவும் இந்தப் பரிசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும். ஹிட்லரின் வதைமுகாம்களில் கூட விஷவாயு கொடுத்துதான் கொன்றார்கள். ஆனால் ஸராயீவோவில் எல்லா முஸ்லீம் பெண்களையும் கற்பழித்துக் கொன்றார்கள். அவர்களின் முதுகில் கத்தியினால் சிலுவை வரைந்தார்கள். பத்து வயது சிறுமி கூட முப்பது பேரால் வன்கலவி செய்யப்பட்டாள். … Read more

முதல் வீடும் ரெண்டாம் வீடும்…

சமீபத்தில் நாகூருக்குச் சென்றிருந்தேன்.  நான் வசித்த கொசத்தெருவில் உள்ள நான் வளர்ந்த வீட்டுக்கும் சென்றேன்.  எப்போது நாகூர் போனாலும் கொசத்தெருவில் நான் வளர்ந்த வீட்டுக்குப் போவதுண்டு.  ஆறு வயதிலிருந்து இருபத்தைந்து வயது வரை வளர்ந்த வீடு.  அதற்கு முன்னால் வெங்கட்டு சந்து.  அது இப்போது பஸ் ஸ்டாண்டாக மாறி விட்டது.  நாங்கள் இருந்த கொசத்தெரு வீட்டில் இப்போது வேறு ஒரு குடும்பம் வாழ்கிறது.  ரொம்ப அருமையான மனிதர்கள்.  ஒவ்வொரு முறை நான் அங்கே போகும் போதும் என்னை … Read more

Huntsman

லக்ஷ்மி சரவணகுமார் தமிழின் இளைய தலைமுறை எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர். கருத்து முரண்பாடுகள் அவருக்கும் எனக்கும் நிறைய உண்டு. அநேகமாக எல்லா விஷயங்களிலுமே என்று நினைக்கிறேன். ஆனால் அவருடைய பல சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. உப்பு நாய்கள் நாவலும் எனக்குப் பிரீதியானது. ஒரே ஒரு ஆபத்துதான். வண்ணதாசன் அவரைப் புகழ்ந்து புகழ்ந்து பேசுவார். அப்போதுதான் கொஞ்சம் பயமாக இருக்கும். அந்தப் பக்கம் போய் விடாதே என்று லக்ஷ்மியிடம் எச்சரிப்பேன். அவருடைய புத்தக விமர்சன உரையிலும் இதைக் … Read more

சாரு – அய்யனார் உரையாடல் – அடுத்த பகுதி

”இலக்கியவாதிகள் தங்கள் இலக்கியப் பயணத்தில் திடார் திடாரென அரங்கத்துக்கு வருவதும், உறக்கத்தில் ஆழ்வதும் புதிய விஷயமல்ல. ஆனால் செல்லப்பா தன்னுடைய கடைசி மூன்று ஆண்டுகளில் (1995-1998) காட்டிய வேகமும் வெளிப்படுத்திய சக்தியும் ஆச்சரியப்படக்கூடியவை. இந்த நாட்களில் பல ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டு கையெழுத்து வடிவில் நைந்து போயிருந்த அவருடைய என் சிறுகதை பாணி (250 பக்கம்) சுதந்திர தாகம் (1800 பக்கம்) ராமையாவின் கதைப்பாணி (368 பக்கம்) ஆகிய பழைய பிரதிகள் புத்தக வடிவம் பெற்றன. இவையெல்லாவற்றையும் … Read more

Thug life…

ஆறு மாதங்களுக்கு முன்னால் எஜமானை வேண்டிக் கொண்டேன். எந்தக் காரியத்துக்காகவும் கடவுளையோ குருநாதரையோ வேண்டுவதில்லை. அப்பனுக்கும் குருவுக்கும் தெரியாதா பிள்ளையின் தேவை என்று நினைப்பு. ஆனால் உயிருக்குயிரானவர்களின் மரணம் தாங்க முடிவதில்லை. அப்படி ஒரு தருணத்தில் எஜமானை வேண்டிக் கொண்டேன். உயிர் திரும்ப வந்தது. எப்போது போவது என்று நினைத்துக் கொண்டே இருந்தேன். நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதில்லை. அதில் நான் கொஞ்சம் பலவீனமானவன். எழுத்து விஷயத்தில் வாக்குக் கொடுக்காமலே காப்பாற்றுவேன். பணம் விஷயத்திலும் அப்படித்தான். ஆனால் … Read more