புத்தக விழா குறிப்புகள் – 6

நேற்றைய மாலை இனிதே கழிந்தது.  சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு விக்ரமாதித்யனை சந்தித்தேன்.  கலி முற்றி விட்டதால் நானும் கவிதை எழுத ஆரம்பித்து விட்டேன் என்று சொல்லி என் கவிதைத் தொகுதி ஸ்மாஷன் தாரா நூலையும் பெட்டியோவையும் அவரிடம் அளித்தேன்.  (ஸ்மாஷன் தாரா என்பது தவறு; ஸ்மஷான் தாரா என்றே வந்திருக்க வேண்டும்.  அடுத்தடுத்த பதிப்புகளில் (!) அந்தத் தவறை நீக்க வேண்டும்.)  இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்தாரோ அதே மாதிரி இருக்கிறார்.  ஒரு மாற்றமும் … Read more

புத்தக விழா குறிப்புகள் – 5

பொங்கல் அன்று (15.1.2024) நாலரை மணி அளவில் ஸீரோ டிகிரி அரங்குக்குப் போனேன்.  அமைதியாக இருந்தது.  காயத்ரி இல்லாததே காரணம் என்று வெளிப்படையாகத் தெரிந்தது.  ராம்ஜி சிந்தனையில் இருந்தார்.  வித்யா தீவிர சிந்தனையில் இருந்தார்.  பெங்களூரிலிருந்து என் வாசகியும் தோழியுமான ஸ்ரீயும் அவள் கணவர் சதீஷும் வந்திருந்தார்கள்.  கொஞ்ச நேரம் பொறுத்து ”காயத்ரி இல்லாமல் அரங்கே வெறிச்சோடின மாதிரி தெரிகிறது, அவர் இருந்திருந்தால் ஒரே சிரிப்பும் கும்மாளமுமாக இருக்கும், செம பாஸிடிவ் எனர்ஜியாக இருக்கும், அவர் இல்லாமல் … Read more

நிரூபணம்

என் எழுத்தோடு பரிச்சயம் கொண்டவர்களுக்குத் தெரியும், நான் எழுத ஆரம்பித்த இருபத்தைந்தாம் வயதிலிருந்து ஐம்பதாவது வயது வரை என் புத்தகங்களை நானேதான் பதிப்பித்துக் கொள்ள வேண்டியிருந்தது. தமிழ்நாட்டில் உள்ள எந்தப் பதிப்பகமும் என் நூல்களை வெளியிடத் தயாராக இல்லை. மிக நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் கூட கொள்கை அடிப்படையில் வெளியிட மறுத்து விட்டார்கள். என்ன கொள்கை? அவர்களைப் பொருத்தவரை நான் எழுதுவது குப்பை. ஆனால் அப்படி மறுக்கும் அவர்களே நட்பு கருதி அதை அச்சடித்துக் கொடுத்து உதவினார்கள். … Read more

இன்றைய புத்தக விழா

இன்று மாலை ஸீரோ டிகிரி பதிப்பகத்துக்கு வருவேன். ஸீரோ டிகிரிக்குக் கொடுக்கப்பட்டுள்ள எலிப்பொந்தில் நாலரையிலிருந்து ஒன்பது மணி வரை இருப்பேன். இதற்குப் பிறகு நான் பதினைந்தாம் தேதியிலிருந்துதான் வருவேன். நாளை கோழிக்கோடு இலக்கிய விழா செல்கிறேன். எஸ்கிலோ பதிப்பக அரங்கில் என் தங்கை மகள் நிவேதிதாவின் இரண்டு ஆங்கில நாவல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இரண்டுமே எஸ்கிலோ பதிப்பக வெளியீடுகள். நான் இன்னும் படிக்கவில்லை. எஸ்கிலோ அரங்கு எண் 492. அவளும் இப்படி எழுத்தாளராக ஆவாள் என்று தெரிந்திருந்தால் … Read more

புத்தக விழா குறிப்புகள் – 4

நேற்று (8.1.2024) விசேஷமான நாள். இரண்டு காரணங்கள். ஒன்று, மாலாடு கிடைத்தது. சாப்பிட்டு பல காலம் இருக்கும். இரண்டாவது, வெளியே பகிர முடியாது. டைட்டானிக் படத்தில் கப்பலின் விளிம்பில் நிற்பார்கள் இல்லையா இருவர்? அது போன்றதொரு அனுபவம். மற்றபடியும் விசேஷமான நாள்தான். ஸீரோ டிகிரி அரங்கில் இருந்த நேரம் பூராவும் கையெழுத்துப் போட்டபடியே இருந்தேன். பலரும் கட்டுக்கட்டாக என் புத்தகங்களை எடுத்துக்கொண்டு வந்து கையெழுத்து வாங்கினார்கள். ஒரு புத்தகத்தில் கையெழுத்து வாங்கியவர்கள் ஒன்றிரண்டு பேர்தான். பலரும் பெட்டியோவைத் … Read more

உல்லாசம், உல்லாசம்… நாவலுக்கு முன்பதிவு செய்வோர் கவனத்துக்கு…

சில நண்பர்கள் சுயவிலாசம், பெயர், தொலைபேசி இலக்கம் போன்ற எந்த விவரமும் இல்லாமல் பணம் அனுப்புகிறார்கள். ஒரு நண்பர் அப்படித்தான் இருபதாயிரம் ரூபாய் அனுப்பியிருக்கிறார். அதில் பதினைந்து ஆயிரத்தை பெட்டியோ என்.எஃப்.டி.க்கு வைத்துக்கொண்டு ஐந்தாயிரத்தை உல்லாசம் நாவலுக்கு வைக்கலாம் என்று பார்த்தால் அனுப்பிய நண்பரின் எந்த விவரமும் தெரியவில்லை. அல்லது, இருபத்தைந்தாயிரமாக இருந்தால் உல்லாசம் நாவலின் இருபத்தைந்தாயிரம் ரூபாய் விலையுள்ள பிரதியை அனுப்பலாம். ஆனால் அதற்குமே முகவரி தேவையாயிற்றே? இதை கொஞ்சம் கவனியுங்கள்…