அரிய வாய்ப்பு

என்னுடைய பிறந்த நாளை முன்னிட்டும், க்ராஸ்வேர்ட் புத்தக விருது நான் தான் ஔரங்ஸேபின் ஆங்கில மொழிபெயர்ப்பான Conversations with Aurangzeb நாவலுக்குக் கிடைத்திருப்பதைக் கொண்டாடும் விதமாகவும் ஸீரோ டிகிரி பதிப்பகம் என் நூல்களுக்கு முப்பது சதம் தள்ளுபடி அறிவித்திருக்கிறது. பொதுவாக தற்போது புத்தக விலை அதிகரித்திருக்கிறது என்பது ஒரு குற்றச்சாட்டாக இருந்து வருகிறது. அது உண்மையும்தான். இரண்டு காரணங்கள்: காகித விலை இரட்டிப்பாகி இருக்கிறது. பல தினசரிகள் குறைந்த பட்சம் நாலு பக்கம் குறைத்து விலையையும் அதிகரித்துள்ளன. … Read more

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேருரை

பொதுவாக என்னுடைய மேடைப் பேச்சு யாரையும் கவர்வதில்லை. சிறப்பாகப் பேசும் எழுத்தாளர் பட்டியலில் என் பெயர் இடம் பெறுவதே இல்லை. அது பற்றி எனக்குப் புகாரும் இல்லை. ஏனென்றால், நான் என்னை ஒரு மிகச் சிறந்த பேச்சாளனாகவே கருதி வருகிறேன். மேடைப் பேச்சுக்குரிய அலங்காரங்கள் என்னிடம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் வேறு யாரிடமும் காண இயலாத அற்புதங்களை ஒரு நுண்ணிய வாசகர் என் பேச்சில் கண்டு கொள்ள இயலும். உதாரணமாக, அராத்துவின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் … Read more

அடியேனின் நூல்கள் தள்ளுபடி விலையில்…

சாரு crossword விருது வென்றதை கொண்டாடும் விதமாக அவர் பிறந்த நாளான இன்று அவர் புத்தகங்களுக்கு 30% தள்ளுபடி அளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இந்தச் சலுகை இம்மாதம் 23 வரை மட்டுமே.புத்தகங்களை வாங்குவதற்கான சுட்டி கீழே. https://www.zerodegreepublishing.com/search?type=product%2Carticle%2Cpage&q=Charu%20nivedita*

ஒரு நாவலின் விலை ஒரு கோடி ரூபாய்

அராத்து எழுதிய புருஷன் நாவலின் ஒலி வடிவக் குறுந்தகடு என்னால் இப்போது வெளியிடப்படுகிறது. நாவலை அராத்து வாசித்திருக்கிறார். அறுநூறு பக்க நாவல். குறுந்தகடு என்.எஃப்.டி. மூலம் விற்கப்படுகிறது. முதல் பிரதியின் விலை முப்பது எத்தெரியம். ஒரு எத்தெரியத்தின் மதிப்பு மூன்று லட்சம் ரூபாய்க்கும் மேல். ஆக, முதல் பிரதியின் விலை ஒரு கோடி ரூபாய். மற்ற பிரதிகளின் விலை ஒரு லட்சம் ரூபாய். நான் எந்த விழாவாக இருந்தாலும் அதில் கலந்து கொள்ள ஒரு லட்சம் ரூபாய் … Read more

மனம் கனிந்த நன்றி

க்ராஸ்வேர்ட் விருதுக்கு எனக்கு வாக்கு அளித்து என்னைத் தேர்ந்தெடுத்த அத்தனை நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் சக எழுத்தாளர்களுக்கும் என் மனம் கனிந்த நன்றி. என்னுடைய வாசகர் வட்ட நண்பர்கள், விஷ்ணுபுரம் வாசகர் வட்ட நண்பர்கள், அமிர்தம் சூர்யா, கார்ல் மார்க்ஸ், நண்பர்கள் அராத்து, ஸ்ரீராம், காயத்ரி, ராம்ஜி, இன்னும் ஏகப்பட்ட நண்பர்கள் இதற்காக உழைத்தார்கள். விரிவாக நாளை கண்ணூரிலிருந்து எழுதுகிறேன். இப்போது கண்ணூர் பல்கலைக்கழக இலக்கிய விழாவுக்காகக் கிளம்பிக்கொண்டிருக்கிறேன். மூன்று நாள் இலக்கிய விழாவை நான்தான் தொடங்கி வைக்கிறேன். … Read more

ஆன்லைன் கோஷ்டி

நேற்று ஃபேஸ்புக்கில் ஒரு வாழ்த்துச் செய்தியைப் பார்த்தேன். என்னுடைய நண்பர் ஒருவருக்கு என்னுடைய இன்னொரு நண்பர் பிறந்த நாள் வாழ்த்து அனுப்பியிருந்தார். இத்தனைக்கும் வாழ்த்து அனுப்பிய நண்பர் மிக நெருக்கடியான பல வேலைகளைச் செய்து வருபவர். ஒரு ஐந்து ஆள் வேலையை அவர் ஒருவரே செய்கிறார். சரியாகத் தூங்கக் கூட நேரம் இல்லை. ஃபேஸ்புக் பற்றிய பேச்சு வரும்போது கூட “எனக்கெல்லாம் எங்கே சாரு ஃபேஸ்புக்கில் நேரம் செலவழிக்க நேரம் இருக்கிறது? சும்மா எட்டிப் பார்ப்பது கூட … Read more