கேள்வி பதில்

அன்புள்ள சாருவுக்கு, தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம் என்று நீங்கள் ஒரு தொடர் எழுதியதால் இதை உங்கள் கவனத்துக்கு கொண்டுவருகிறேன். சமிபத்தில், உங்களுடன் மிக பண்பாக உரையாடிய காந்தியவாதி தமிழருவி மணியனுக்கு இலக்கியச் சிந்தனை விருது கிடைத்தது. இது அவர் ஆனந்த விகடனில் எழுதிய முதல் சிறுகதைக்கு கிடைத்த விருது. முதல் என்ற வார்த்தையை கவனிக்கவும். இதை முத்திரை சிறுகதையாக தேர்ந்தெடுத்தவர் அண்ணாச்சி வண்ணதாசன். அந்த கதையை நான் படித்தேன். நீங்கள் உங்கள் தளத்தில் வெளியிட்ட ”மாற்றம்” சிறுகதையைவிட … Read more

தேர்தல் முடிவுக் கணிப்பு…

நான் எந்த அரசியல் கட்சியையும் சாராதவன் என்பதை உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை.  இந்தியா குட்டிச்சுவர் ஆனதற்குக் காங்கிரஸ் கட்சி தான் காரணம் என்பதால் காங்கிரஸ் மீது வெறுப்பு உண்டு.  அவ்வளவுதான்.  ஒரு மொழிபெயர்ப்பு வேலையில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருப்பதால் ஒரு வாரமாக தினசரிகள் பார்க்கவில்லை.  இன்று மதியம் நான்கு வட இந்திய மாநிலங்களின் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வர இருப்பதாக அறிந்தேன்.  நான்கு மாநிலங்களிலும் பி.ஜே.பி. வரலாறு காணாத வெற்றியை அடையும் என்பது என் தேர்தல் … Read more

ஒரு வித்தியாசமான நாள்

இன்று ஒரு வித்தியாசமான நாள்.  காலையில் பதினோரு மணிக்கு ஒரு குறிப்பிட்ட டீக்கடையில் பார்க்கலாம் என்றார் கௌதம் மேனன்.  சந்தித்து நீண்ட நாட்கள் ஆகி விட்டன.  முன்பெல்லாம் – ஒரு ஆறு மாதத்துக்கு முன்னால் – இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அமேதிஸ்ட்-இல் சந்திப்போம்.  ஆறு மாதங்களாக இருவருக்கும் பல்வேறு வேலைகள்.  சந்திப்பு தாமதமாகிக் கொண்டே போனது. அந்தக் குளிரூட்டப்பட்ட அமைதியான டீக்கடைக்கு சரியாக பதினோரு மணிக்குப் போனேன்.  கௌதம் ஏற்கனவே வந்து மடிக் கணினியில் வேலை செய்து … Read more

பிடித்த எழுத்தாளர்

தமிழில் சமகால எழுத்தின் மீது என் அதிருப்தியை அவ்வப்போது வெளியிட்டுக் கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.  இருப்பினும் ஓரிருவர் என் மனம் கவர்ந்தவர்களாக இருக்கின்றனர்.  அவர்களில் ஒருவர் என். விநாயக முருகன்.  ஏற்கனவே இவரைப் பற்றி எழுதியிருக்கிறேன்.  இவரது எழுத்தை முகநூலில் படித்துக் கொண்டிருக்கிறேன்.  இவரது கவிதைகளும் எனக்குப் பிடிக்கும்.  உரைநடை அதை விடப் பிடிக்கும்.  இவர் எழுத்தில் உள்ள பகடி அலாதியானது.  பகடி செய்வது தான் மிகப் பெரிய பிரச்சினை.  சிலர் பகடி என்று நினைத்துக் கொண்டு … Read more

இட்லி சாப்பிடுவது எப்படி? பிச்சைக்காரனோடு ஒரு விவாதம்.

பிச்சை: சாருவின் madness தமக்கு சாதகமாக அமையும்போது அதை ரசிப்பவர்கள் பாதகமாக அமையும்போது ரசிப்பதில்லை . ஒரு நடிகர் தன் அனுமதியில்லாமல் தன்னை ஃபோட்டோ எடுத்துவிட்டார் என்பதற்காக அவரை திட்டி அவரை எதிரியாக்கிய சாரு போல வேறோர் எழுத்தாளர் செய்திருக்க மாட்டார் . ஒரு முறை சாருவுடன் பேசிக்கொண்டிருந்தேன் . அப்போது நான் மிகவும் மதிக்கும் விஐபி சாருவை பார்க்க வந்தார் . நாம் இருப்பது நாகரிகமல்ல என கிளம்ப எத்தனித்தேன் . ஆனால் சாரு என்னை … Read more