தமிழ் வளர்த்த வைணவம்…

தமிழை வளர்த்ததில் பக்தி இலக்கியத்துக்கு மிகப் பெரிய பங்கு உண்டு.  இப்போது தமிழ் எழுத வரும் இளைஞர்களிடம் நான் திரும்பத் திரும்ப சொல்வது என்னவென்றால், சங்க இலக்கியத்தையும் பக்தி இலக்கியத்தையும் படியுங்கள் என்பதுதான்.  ஆனால் அது காது கேளாதவனிடம் சொல்வது போலவே இருக்கிறது.  இவ்வளவுக்கும் இன்று இந்த இலக்கியம் பூராவும் விளக்கவுரைகளுடன் கணினியிலேயே படிக்கக் கிடைக்கின்றன.  இப்படிச் சொன்னால் லிங்க் அனுப்ப முடியுமா என்று கேட்டு கடிதம் வருகிறது. தமிழ் வளர்த்தவர்களில் நான் முதன்மையாகக் கருதுவது ஆழ்வார்கள்.  … Read more

செல்வகுமார் கணேசனின் குறிப்பு

என் வாசகர் வட்டத்திலிருந்து வெளிவந்த முக்கியமான எழுத்தாளர் அராத்து.  அராத்துவை எழுத்தாளர் என்று எழுத எனக்கே சற்று கூச்சமாகத்தான் இருக்கிறது.  இருந்தாலும் ஒரு உலகத் தரமான நாவலை எழுதியவரை வேறு எப்படித்தான் அழைப்பது?  அடுத்து, வாசகர் வட்டத்திலிருந்து வந்தவர் கணேஷ் அன்பு.  அவர் எழுதும் இமயமலைப் பயணக் கட்டுரை சிறப்பாக உள்ளது.  ஏன் இவர்களையெல்லாம் எழுத்தாளர் என்று சொல்லத் தயங்குகிறேன் என்றால், கணேஷ் முறையாக தமிழிலும் ஆங்கிலத்திலும் வந்துள்ள பயணக் கட்டுரைகளைப் படித்தவர் அல்ல.  என்றாலும், என் … Read more

ஜனவரி 4

வெளியூர் வாசகர்களின் வசதிக்காகவும் இப்போதே சொல்லி விடுகிறேன்.  ஜனவரி 4-ஆம் தேதி சென்னையில் அராத்துவின் தற்கொலைக் குறுங்கதைகள் நாவல் வெளியிடப்பட உள்ளது.  பிரபலங்கள் கலந்து கொள்வார்கள்.  நானும் பேசுவேன்.  அந்த நாவலுக்கு நான் எழுதிய முன்னுரையைப் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.  பெருந்திரளாக வந்து கலந்து கொள்ளுங்கள்.  இந்த ஆண்டு என் நூல் எதுவும் வரவில்லை.   தற்கொலைக் குறுங்கதைகளையே நீங்கள் என்னுடைய நாவலைப் போல் வாசிக்கலாம்.  இதை ஏன் நாம் எழுதாமல் போனோம் என்று பொறாமை கொள்ள வைத்த … Read more

ஒரு சர்ச்சை

சாருவின் நாவல்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பிரத்யேகத் தன்மை இருப்பதைக் காணலாம். உதாரணமாக ஸீரோ டிகிரிக்கு கல்ட் ஸ்டேடஸ் கிடைத்து விட்டதால் அதைப்படிக்காமல் யாரும் இருக்க முடியாது. ராஸ லீலாவை எடுத்துக் கொண்டால் , நெட் போன்ற சமகால விவகாரங்களைத் தொட்ட முதல் நாவல்; நவீன கால சிக்கல்களைச் சித்திரிக்கும் முதல் நாவல் என்ற பெருமை இருப்பதால் இளைஞர்களால் அதிகம் படிக்கப்படும் நாவலாக உள்ளது. த்ரில்லர் பாணியில் பின்நவீனத்துவ நாவல் என்ற தன்மையில் இணையத்தில் அதிகம் பேசப்படுவது தேகம். … Read more

நானும் என் வாழ்க்கையும்… (5)

பாரி, என் மீது பொது வெளியில் நிலவும் குற்றச்சாட்டுகள்.  ”அனைவரும் ஏற்பதை சாரு ஏற்க மாட்டார்.”  இது குற்றச்சாட்டு அல்ல.  பாராட்டு.  மகாத்மா காந்தியிலிருந்து பாரதி, பெரியார் வரை யார் தான் பொதுஜனங்களின் கருத்தை ஏற்றுச் செயல்பட்டார்கள்?  மிகச் சுருக்கமாக ஒரு பழமொழி இருக்கிறது.  எதார்த்தவாதி வெகுஜன விரோதி.  நான் எதார்த்தத்தை – உண்மையைப் பேசுகிறேன்.  எனவே நான் ஜனக்கூட்டத்துக்குப் பிடிக்காதவனாகத்தான் இருப்பேன்.  பொதுமக்கள் சொல்வதற்கு ஆமாம் சாமி போடுபவன் எழுத்தாளனாகவே இருக்க முடியாது.  மற்ற குற்றச்சாட்டுகளைப் … Read more