Marat/Sade

U.S.இல் வசிக்கும் நண்பர்களுக்கு: The Persecution and Assassination of Jean-Paul Marat as Performed by the Inmates of the Asylum of Charenton Under the Direction of the Marquis de Sade என்ற தலைப்பில் ஒரு நாடகம் உள்ளது. இந்த நாடகத்தை யு.எஸ்.ஸில் பலமுறை அரங்கேற்றி உள்ளனர். அந்த நாடகம் அப்படியே படம் பிடிக்கப்பட்டு டிவிடியாகவும் கிடைக்கிறது. அந்த டிவிடியை யாரேனும் வாங்கி அனுப்ப இயலுமா? நீண்ட தலைப்பாக இருப்பதால் … Read more

ஒரு கேள்வியும் பதிலும்…

இன்று புத்தாண்டு என்பதே மறந்து போய் கொஞ்ச நேரத்துக்கு முன்புதான் ராம்ஜி இன்று ப்ரிண்ட் போட முடியாது, அந்த ஆஃபீஸ் விடுமுறை என்று சொன்னதால், இன்று என்ன விடுமுறையாயிருக்கும் என்று யோசித்து டக்கென்று புத்தாண்டு என்று புரிந்தது. காரணம், நேற்றிலிருந்து ராப்பகலாக ஒரு வேலையில் ஈடுபட்டிருக்கிறேன். என்னுடைய மிக முக்கியமான புத்தகங்களில் ஒன்று ஊரின் மிக அழகான பெண் என்ற மொழிபெயர்ப்புத் தொகுதி. தமிழில் இப்போது ஏகப்பட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கெல்லாம் 25 ஆண்டுகளுக்கு … Read more

உணவு என்ற மதம்

என்னுடைய எல்லா நண்பர்களையும் விட எனக்கு ஏன் அராத்துவைப் பிடிக்கிறது? என் வாழ்க்கைக்கு இப்போதைய நிலையில் பணம்தான் பிரதான தேவையாக இருக்கிறது. அதுவும் என்னுடைய அத்தியாவசியத் தேவை கருதி அல்ல. இரண்டு காரணங்களுக்காக எனக்குப் பணம் தேவைப்படுகிறது. ஒன்று, பயணம். இரண்டு, பூனை உணவு. என் அன்றாட வாழ்வை விட இந்த இரண்டு விஷயங்களும் எனக்கு முக்கியம் என்பதால் பணத்தின் முக்கியத்துவம் அதிகமாகிறது. ஆனால் அராத்து எனக்கு இதுவரை ஒரு பைசா கொடுத்ததில்லை. (அவரிடம் இல்லை; அதனால் … Read more

எழுபத்தைந்து பிரம்படி பட்ட எழுத்தாளன்

எனக்குப் பிறந்த நாள் வாழ்த்து அனுப்பிய அத்தனை நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. மற்ற ஆண்டுகளை விட இந்த ஆண்டு ஏகப்பட்ட கடிதங்கள் திக்குமுக்காடச் செய்து விட்டன. இனிமேல் எழுத்தாளன் அனாதை என்று சொல்ல மாட்டேன். அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள். 2006-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று ஃப்ரான்ஸில் உள்ள துலூஸ் நகருக்கு அருகில் இருக்கும் லூர்து என்ற சிறிய கிராமத்தில் உள்ள பெர்னத் அன்னையின் எதிரே மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்ததை ஒருபோதும் மறக்க இயலாது. … Read more

ஒரு வித்தியாசமான வாழ்த்து

வணக்கம் சாரு, கீழே இருப்பது என்னுடைய நண்பன் – உங்களுடைய தீவிர வாசகன் – ஒருவன் இன்று எழுதியது. இலங்கையில் இருக்கும் உங்களுடைய ஒரு தீவிர வாசகக் கும்பல் பற்றி உங்களிடம் ஏலவே சொல்லியிருக்கிறேன். அந்தக் கும்பலில் ஒருவன். அதிகம் படிப்பவன். உங்கள் எழுத்துக்களைக் கொண்டாடும் எங்கள் தலைமுறையின் முக்கியமான வாசகன். இது உங்கள் கவனத்தில் கிட்டவேண்டும் என்கின்ற ஒரே காரணத்திற்காகத்தான் இதை இங்கு காவிக்கொண்டு வருகிறேன். அன்புடன், அமல். 2010. வெள்ளவத்தையில் ஒரு புத்தகசாலை! இப்போது மூடிவிட்டார்கள். உருப்படியான புத்தகங்களை விற்றதால் கூட இருக்கலாம். அங்கே புத்தகம் ஒன்றைக் கண்டேன். புத்தகத்தின் பெயரை விட அந்த எழுத்தாளரின் பெயர்தான் எப்போதிலிருந்தோ நினைவில் நின்றுகொண்டிருந்தது. குமுதத்திலோ , குங்குமத்திலோ, ஆனந்தவிகடனிலோ அந்த எழுத்தாளரின் பெயரை கண்டிருக்கிறேன். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவரின் பத்திகளை வெறித்தனமாய் வாசித்திருக்கிறேன். ஆனால் அது சிறுவயதுகளில் . எப்படியோ அந்த எழுத்தின் தாக்கத்தின் வழி அவரின் பெயரும் மனதில் … Read more

மீண்டும் ஒரு கடிதம்

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்று போட்டு அதற்கு அடுத்து என் பெயரைப் போட்டு நேற்று ஒரு கடிதம் வந்தது. கீழே தர்மா என்று பெயர் கண்டு, நம்ம தர்மா தானே என்று கேட்டு எழுதினேன். அதற்கு வந்த பதிலை கீழே தருகிறேன். எதற்கு என்றால், முன்பெல்லாம் என் எழுத்தை யாரும் படிப்பதில்லை என்று அழுகுணியாகவே எழுதிக் கொண்டிருப்பேன் அல்லவா? இப்போது நிலைமை மாறி விட்டதாகத் தெரிகிறது. இது போன்ற கடிதங்கள் தினம் ஒன்று வருகிறது. … Read more