பழுப்பு நிறப் பக்கங்கள்: ப. சிங்காரம் (பகுதி 4)

இலக்கியத்திலும் ‘பரோக்’ பாணி உண்டு என்பதைப் பல ஆண்டுகளுக்கு முன்பு கூப எழுத்தாளர் அலெஹோ கார்ப்பெந்த்தியரின் (Alejo Carpentier) நாவல்களைப் படித்தபோது உணர்ந்தேன். ‘புயலிலே ஒரு தோணி’யை சந்தேகமில்லாமல் ஒரு ‘பரோக்’ பாணி நாவல் என்று சொல்லலாம். ஒருவகையில் சிங்காரம் கார்ப்பெந்த்தியரையும் விஞ்சிவிட்டார்; எப்படியென்றால், ‘புயலிலே ஒரு தோணி’யில் ‘பரோக்’ பாணியோடு கூட பின்நவீனத்துவப் பகடியும் சேர்ந்து கொண்டுவிட்டது. மேலும் படிக்க: தினமணி இணையதளம்